ஆரோக்கியமான நுரையீரலுக்கு கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்!!!

Posted By: Srinivasan P M
Subscribe to Boldsky

தற்போது அதிகரித்துவரும் சுற்றுச் சூழல் மாசுபாடு மற்றும் புகைப்பிடிப்போரின் எண்ணிக்கையில் கணிசமான உயர்வு ஆகியவற்றின் காரணமாக ஆரோக்கியம் குறித்த விவாதங்களில் நுரையீரல் நலன் தற்போது முக்கிய இடத்தை வகிக்கிறது. நீங்கள் புகை பிடிக்காதவர் என்றாலும், பல்வேறு காரணிகளால் காற்று மாசுபாட்டில் ஏற்பட்டுள்ள பன்மடங்கு உயர்வு, மிகக் கடுமையான சுவாசக் கோளாறுகளுக்கு வித்திட்டு நுரையீரலுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக விளங்குகிறது.

உடலில் தங்கியிருக்கும் கொழுப்பை வெளியேற்ற உதவும் 10 உணவுகள்!!!

சிஓபிடி எனப்படும் கடும் சுவாசப்பாதை கோளாறு, வயது முதிர்ந்தோரின் இறப்புகளில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. இந்தக் கட்டுரையில், நுரையீரலை ஆரோக்கியமாக வைக்கும் சில உணவுகளை நாம் பார்க்கவிருக்கிறோம். இந்த உணவுகள் நுரையீரல் நலனை ஊக்குவிப்பதோடு, காற்று மாசுபாடு மற்றும் புகைப்பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து காத்துக் கொள்ள, இவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.

அறிவுத்திறனை மெதுவாக அழிக்கும் 11 உணவுகள்!!!

நுரையீரல் நலனுக்கான உணவுகளைப் பற்றி குறிப்பிடும் போது, பின்வரும் நுரையீரலை சுத்தப்படுத்தும் பழங்கள், சுவாசக் கோளாறுகளை சரிசெய்யும் உணவுகள் மற்றும் சுவாசத்தை சீராக்கும் உணவுகள் ஆகியவற்றை புகைப்பிடிப்போர் கட்டாயம் உண்ண வேண்டிய உணவுப் பட்டியலில் சேர்க்கலாம்.

சரி, நுரையீரலை சுத்தப்படுத்தி சுவாசத்தைச் சீராக்கும் இந்த சக்தி வாய்ந்த மற்றும் புகைப்பிடிப்போர் கட்டாயம் உண்ண வேண்டிய உணவுகளை இப்போது பார்க்கலாம்.

A முதல் Z வரை உள்ள ஆரோக்கியத்தைக் காக்கும் சூப்பர் உணவுகள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மாதுளை

மாதுளை

மாதுளைப் பழங்கள் உடற்கூறுக்குறைகளை நீக்கவல்லவை. மேலும் நுரையீரலில் கட்டிகள் தோன்றுவதைத் தடுக்கக் கூடியவை. மூச்சுப் பிரச்சனைகளையும் தீர்க்கக் கூடிய ஒரு அற்புதமான உணவு இது. இதன் சாறு பல்வேறு உடல் நலம் தொடர்பான பயன்பாடுகளுக்கு உதவுகிறது.

வெங்காயம்

வெங்காயம்

வெங்காயம் கொஞ்சம் வாடை உள்ளது தான் மறுப்பதற்கில்லை. ஆனால், இதன் மணம் நுரையீரலை சீராக்குவதில் மிகச்சிறந்த ஒன்று. புகைப்பிடிப்போர் கண்டிப்பாக வெங்காயத்தை உண்டு நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

ஆப்பிள்

ஆப்பிள்

ஆப்பிள்களில் ஃப்ளேவோனாய்டுகள் மற்றும் வைட்டமின் ஈ, பி மற்றும் சி நிறைந்துள்ளன. இவையனைத்தும் சுவாச நலனில் நல்ல முன்னேற்றத்தைத் தரக்கூடியவை.

கிரேப்ஃபுரூட் (பம்பளிமாஸ்)

கிரேப்ஃபுரூட் (பம்பளிமாஸ்)

இவற்றில் நரிஞ்சின் என்ற ஃப்ளேவோனாய்டு அதிக அளவில் காணப்படுகிறது. இது நுரையீரலில் கட்டிகள் தோன்றுவதைத் தடுக்கிறது. நுரையீரலை சுத்திகரிக்க இது ஒரு சக்திவாய்ந்த உணவு என்பதில் சந்தேகமில்லை.

கேரட்

கேரட்

கேரட்டுகள் சுவாசக் கோளாறுகளை சரிசெய்வதில் ஒரு ஆச்சரியமான முறையில் உதவுகின்றன. இவற்றில் வைட்டமின் ஏ மற்றும் சி நிறைந்து காணப்படுவதால், நுரையீரல் நலனைப் பேணுவதில் மிகவும் உதவுகின்றன.

நட்ஸ்

நட்ஸ்

வால்நட்ஸ், பாதாம் மற்றும் ஹாசில் நட்ஸ் உள்ளிட்ட பருப்புகள் உடற்கூறுக் கேட்டைத் தடுப்பதுடன், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களைக் கொண்டுள்ளன. இவற்றில் அடங்கியுள்ள அதிக அளவு புரதம் உடலுக்கு உரத்தை அளிக்கிறது. இவை நுரையீரலை சுத்தம் செய்யும் சத்தான உணவாகும்.

ஆரஞ்சு

ஆரஞ்சு

புளிப்புத்தன்மையுடைய பழங்கள் பெரும்பாலும் அதிக உடல் நலனுடன் தொடர்புடையவையாக இருக்கின்றன. ஆரஞ்சு இதில் மிகவும் ஆரோக்கியமானதும் வைட்டமின் சி சத்தை அதிகம் கொண்டதும் ஆகும். புகைப்பிடிப்போர் உண்ண வேண்டிய ஒரு அருமையான பழம் இது. நுரையீரல் ஆக்ஸிஜனை நன்கு உள்ளிழுக்கும் திறனை அதிகரிப்பதில் இவை முக்கிய பங்காற்றுகின்றன.

பீன்ஸ்

பீன்ஸ்

பீன்ஸ் கேன்சரைத் தடுக்கும் குணாதிசயங்களை கொண்டுள்ளதுடன், மக்னீசியத்தை அதிகம் தன்னகத்தே கொண்டுள்ளன. இது நுரையீரல் ஆரோக்கியமாகச் செயல்பட முக்கிய செயலாற்றுகின்றன.

மஞ்சள்

மஞ்சள்

மஞ்சளில் காணப்படும் கர்குமின் எனப்படும் வேதிப்பொருள் புற்றுநோயை உண்டாக்கும் அணுக்களை அழிப்பதுடன் நுரையீரலில் கட்டிகள் தோன்றுவதையும் தடுக்கிறது.

இதுப்போன்று சுவாரஸ்யமான மற்றும் பயனுள்ள பல தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

9 Must Have Foods For Healthy Lungs

Here are 9 foods for healthy lungs. These are foods smokers should definitely be eating. Read on...