For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆரோக்கியமான தலைமுடியும், ஸ்கால்ப்பும் வேண்டுமா? அப்ப இதெல்லாம் சாப்பிடுங்க!

By Boopathi Lakshmanan
|

எண்ணெயும், கலோரிகளும் நிரம்பியுள்ள உணவுகள் உங்களுடைய இடுப்பின் அளவை அதிகரித்துவிடுவதோடு மட்டுமல்லாமல், ஆரோக்கியமில்லாத உணவுகளால் தலைமுடிகளும், ஸ்கால்ப்பும் கூட பாதிக்கப்படுகின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா?

ஒவ்வொரு மனிதனும் ஆரோக்கியமான தலைமுடியை கொண்டிருக்கவும், வயதை குறைத்துக் காட்டி அற்புதமாக காட்சியளிக்கவும் மிகவும் விரும்புவார்கள். எனவே, நீங்கள் எதை சாப்பிட்டாலும் ஜாக்கிரதையாக கையாளவும்.

அடிக்கடி சூடு பிடிக்குதா? அப்ப இந்த காய்கறிகளை அளவா சாப்பிடுங்க...

ஏனெனில் நீங்கள் சாப்பிடும் உணகளிலுள்ள ஊட்டச்சத்துக்கள் மயிர்க்கால்களை உறுதிப்படுத்தவும், உங்களுடைய ஸ்கால்ப்பில் ஒவ்வொரு முடியும் வலுவுடன் நிற்கவும் உதவுகின்றன.

பளபளப்பான சருமத்தைப் பெற நிச்சயம் தவிர்க்க வேண்டிய உணவுகள்!!

இன்று, புகழ் பெற்ற ஊட்டச்சத்து நிபுணராக உள்ள திரு.பிரியா காத்பல் என்பவர், உங்களுடைய தலைமுடியை புத்துணர்வுடன் தோற்றமளிக்கச் செய்து குதித்தாடச் செய்யும் சில உணவுகளை உங்களிடம் பட்டியலிடப் போகிறார். இந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் சோர்வான, வறண்ட அல்லது எண்ணெய் பசை மிகுந்த முடியை விரட்டியடித்து, நல்ல மாறுதலை உங்களால் உணர முடியும். இதோ அது போன்ற 20 உணவுகளின் பட்டியல் உங்களுக்காக...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சால்மன்

சால்மன்

ஆரோக்கியமான கூந்தலுக்கு மிகவும் தேவையான ஊட்டச் சத்துகள் புரதங்களும், வைட்டமின் டி-யும் தான். இந்த வகையில் சாலமன் மீன்கள் புரதங்கள், வைட்டமின் டி மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிரம்பிய ஆரோக்கியமான உணவாக உள்ளது. உங்களுடைய தலைமுடியையும், ஸ்கால்ப்பையும் ஈரப்பதம் குறையாமல் பாதுகாக்க ஒமேகா-3 கொழுப்பு அமிலம் உதவுகிறது. ஆரோக்கியமான தலைமுடி, ஆரோக்கியமான ஸ்கால்ப்பில் தான் வளரும் என்பதால், அதிகளவு ஒமேகா-3 கொழுப்பு அமிலம் உள்ள சால்மனுக்கு கதவை திறந்து விடுங்கள்.

மாட்டிறைச்சி

மாட்டிறைச்சி

'உங்களுக்கு கொழுப்பு பிரச்சனை இல்லையென்றால் ஒரு நாளைக்கு இரண்டு முறை இந்த இறைச்சியை நீங்கள் சாப்பிடுங்கள். உங்களுடைய தலைமுடியை பாதுகாக்கும் ஊட்டச்சத்துகள் நிரம்பியதாக இந்த உணவு உள்ளது. இதில் புரதங்கள், வைட்டமின் B இரும்பு, துத்தநாகம் மற்றும் பிற முக்கியமான தாதுக்கள் ஆகியவை உள்ளதால் உங்களுடைய தலைமுடி மற்றும் ஸ்கால்ப் ஆகியவை முழுமையாக பாதுகாக்கப்படுகின்றன.' என்கிறார் மும்பையில் உள்ள ஹேர்ரிவைவ் நிறுவனத்தில் உள்ள புகழ் பெற்ற முடி புதுப்பித்தல் மற்றும் தோல் புத்துணர்ச்சி நிபுணரான டாக்டர்.சந்தீப் சுட்டார் என்பவர். இறுதியாக, 'இந்த உணவு ஊட்டசத்துக்கள் நிரம்பியிருந்தாலும், மாட்டிறைச்சியை சாப்பிடுவதால் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகளை சிறிதளவு தவிர்க்கவும் முடியும்' என்று டாக்டர். சந்தீப் குறிப்பிபடுகிறார்.

கொடிமுந்திரி

கொடிமுந்திரி

நீங்கள் சாப்பிடும் உணவில் கொடிமுந்திரிகளை சேர்த்துக் கொள்வதன் மூலம் தலைமுடி வளரும் விதத்தையும், முறையான வளைவுகளையும் ஏற்படுத்த முடியும். இதில் நிறைய இரும்புச்சத்து உள்ளதால், முடி இழப்பு, வறண்ட, மெலிதான தலைமுடி மற்றும் முடியின் வண்ணம் மாறுதல் போன்ற பிரச்சனைகளைத் தவிர்க்கிறது.

கிரீன் டீ

கிரீன் டீ

கிரீன் டீ

கேரட்

கேரட்

கேரட் சாப்பிடுவதன் மூலம் உங்களுடைய கண் பார்வை கூர்மையாவது மட்டுமல்லாமல், வைட்டமின் ஏ உள்ளதால் தலைமுடியின் ஆரோக்கியமும் பராமரிக்கப்படும். வைட்டமின் ஏ இருப்பதன் காரணமாக உருவாகும் சரும மெழுகு எண்ணைய் உருவாகும் என்று டாக்டர்.சந்தீப் குறிப்பிடுகிறார். உங்களுடைய தலைமுடியும், ஸ்கால்ப்பும் ஈரப்பதமாக பராமரிக்கப்பட மிகவும் உதவக் கூடிய முக்கியமான பொருளாக சரும மெழுகு (Sebum) உள்ளது. ஈரப்பதமுள்ள ஸ்கால்ப் ஆரோக்கியமான தலைமுடியின் அடையாளமாகும்.

முட்டை

முட்டை

முட்டையில் பயோடின் மற்றும் வைட்டமின் பி ஆகியவை நிரம்பியுள்ளன. இந்த இரண்டு ஊட்டச்சத்துக்களும் தலைமுடி பராமரிப்பிற்கும், ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை தருபவைகளாகும். நட்சத்திர அந்தஸ்து பெற்ற பயோடின் உங்களுடைய தலைமுடியை பளபளப்பாகவும், மென்மையாகவும் வைத்திருக்கும். பல்வேறு ஷாம்புகளிலும், கண்டிஷனர்களிலும் பயோடின் உள்ளதால், தலைமுடி பராமரிப்பிற்கு மிகவும் அவசியமான ஊட்டச்சத்துகளில் ஒன்றாக இது உள்ளது.

பச்சை நிற காய்கறிகள்

பச்சை நிற காய்கறிகள்

கீரை, ப்ராக்கோலி போன்றவைகளை உணவுகளில் நிறைய சேர்த்துக் கொள்வதன் மூலம் தலைமுடியை நன்றாக பராமரிக்க முடியும். இந்த பசுமையான தழைகளையுடைய காய்கறிகளில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி ஆகியவை நிரம்பியுள்ளன. இந்த இரு வைட்டமின்களும் சரும மெழுகு உருவாக்கத்தின் பங்கு கொள்வதால், இயற்கையான கண்டிஷனராகவும், ஈரப்பதம் தரும் மாய்ஸ்சுரைசராகவும் செயல்பட்டு தலைமுடியை பாதுகாக்கின்றன.

பழுப்பு அரிசி

பழுப்பு அரிசி

பழுப்பு அரிசியில் சில வகையான புரதங்கள், வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்துகள் உள்ளன. ஆரோக்கியமான தலைமுடி மற்றும் மண்டைத் தோலை தருவதோடு மட்டுமல்லாமல், நீங்கள் அதிகமாக சாப்பிடுவதையும் இது குறைத்து விடுகிறது. எனவே. பழுப்பு அரிசியை சாப்பிட்டு தலைமுடியையும், உடலையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

கடல் சிப்பிகள்

கடல் சிப்பிகள்

முடி இழப்பு அல்லது பொடுகு தொல்லை ஆகியவற்றிற்கு ஆன்ட்ரோஜன் என்ற ஹார்மோன்கள் குறைவாக உற்பத்தியாவதே காரணமாகும். எனவே, துத்தநாகம் அதிகளவு உள்ள சிப்பிகளை உணவில் சேர்த்துக் கொண்டு, முடி இழப்பு மற்றும் பொடுகு தொல்லைகளை திறமையுடன் எதிர் கொள்ளுங்கள். அது மட்டுமல்லாமல், உங்களுடைய முடி நனறாக பிணைந்திருக்கவும், மென்மையாகவும் மற்றும் ஆரோக்கியமாகவும் இருக்கவும் சிப்பி உணவு உதவுகிறது.

வால்நட்ஸ்

வால்நட்ஸ்

உங்களுடைய தலைமுடியை சிறப்பாகவும் மற்றும் ஆரோக்கியமாகவும் பராமரித்து வர உதவும் சிறந்த நட்ஸ்களில் ஒன்றாக வால்நட்ஸ் உள்ளன. இவற்றில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், பையோடின், வைட்டமின் ஈ மற்றும் தாமிரம் போன்ற தலைமுடியை பாதுகாக்கும் ஊட்டச்சத்துகள் உள்ளதால் அரண் போன்ற பாதுகாப்பை அளிக்கின்றன. மேலும், இவை முடி இழப்பை தடுப்பதோடு மட்டுமல்லாமல், உங்களுடைய தலைமுடியை வளமாகவும், பளபளப்பாகவும் வைக்கின்றன.

பாலாடைக்கட்டி

பாலாடைக்கட்டி

குறைவான கொழுப்பையும், கால்சியம் மற்றும் புரதங்கள் நிறைவாகவும் கொண்டுள்ள ஊட்டச்சத்து பாலாடைக்கட்டி ஆகும். இந்த ஆரோக்கியமான உணவை காலை சிற்றுண்டியுடன் சேர்த்துக் கொண்டால், சோர்வான தலைமுடியை விரட்டும் உங்களுடைய நோக்கம் இனிதே நிறைவாகும். அதே நேரம் எடையும் சற்று குறையும்.

பச்சைப் பட்டாணி

பச்சைப் பட்டாணி

ஆரோக்கியமான தலைமுடிக்கு மிகவும் ஏற்ற சரிவிகித உணவாக பச்சைப் பட்டாணி உள்ளது. பச்சைப் பட்டாணியில் துத்தநாகம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் பி போன்ற சத்துக்கள் நிரம்பியுள்ளதால் தலைமுடியையும், ஸ்கால்ப்பையும் ஆரோக்கியமாக பராமரிக்க மிகவும் உதவுகிறது.

பருப்பு வகைகள்

பருப்பு வகைகள்

'உண்மையிலேயே உங்களுக்கு ஆரோக்கியமான தலைமுடி மற்றும் ஸ்கால்ப் வேண்டும் என்றால், வாரத்திற்கு 3-4 முறையாவது பருப்புக்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்', என்கிறார் பிரியா. பருப்புக்களில் போலிக் அமிலம் மிகவும் நிரம்பியுள்ளதால், தோல் மற்றும் மண்டைத்தோலுக்குத் தேவையான ஆக்ஸிஜனை அளிக்கிறது. இதன் மூலம் தலைமுடி வளருவதும், செல்கள் புதுப்பிக்கப்படுவதும் நன்றாக ஊக்கப்படுத்தப்படுகின்றன.

குடைமிளகாய்

குடைமிளகாய்

வைட்டமின் சி மிகவும் அதிகமாக இருக்கும் வண்ணமயமான குடைமிளகாய்களை உங்களுடைய உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். தலைமுடியின் கால்களுக்கு ஆக்ஸிஜன் திறமையுடன் சென்றடைவதை வைட்டமின் சி உறுதி செய்கிறது. மேலும், கொலாஜன் உருவாக்கத்திற்கு உதவியாகவும் மற்றும் தலைமுடி வளர்வதை உந்தும் சக்தியாகவும் குடைமிளகாய் உள்ளது. மேலும் குடைமிளகாயின் மூலம் முடி உடைவதையும் தவிர்க்க முடியும்.

முழு தானியங்கள்

முழு தானியங்கள்

முழு தானியங்களில் ஊட்டச்சத்துகளும், நார்ச்சத்துகளும் நிரம்பியுள்ளன. இது தலைமுடியின் வளர்ச்சியை ஊக்கப்படுத்துவதால், முடி வளர்ச்சிக்கு ஏற்ற உணவாக உள்ளது. மேலும், செரிமானத்திற்கு உதவுவதால், நீரிழிவு நோய், தொப்பை மற்றும் உப்புசமடைதல் போன்ற பிரச்சனைகளையும் முழு தானியங்கள் தவிர்க்கின்றன.

சர்க்கரைவள்ளி கிழங்கு

சர்க்கரைவள்ளி கிழங்கு

சர்க்கரைவள்ளி கிழங்குகளில் பீட்டா-கரோட்டின் அதிகமாக உள்ளதால், இவற்றை சாப்பிடும் போது வைட்டமின் ஏ கிடைக்கிறது. சோர்வான தலைமுடி மற்றும் ஸ்கால்ப்பை தவிர்க்கவும் மற்றும் முடி வளர்ச்சியை ஊக்கப்படுத்தவும் மற்றும் மயிர்க்கால்களிடையில் ஆக்ஸிஜன் முறையாக சென்று வரவும் தக்காளிகள் உதவுகின்றன.

ப்ளூபெர்ரிகள்

ப்ளூபெர்ரிகள்

வைட்டமின் சி நிரம்பியுள்ள நட்சத்திர அந்தஸ்து பெற்ற ப்ளூபெர்ரி பழங்கள், ஸ்கால்ப் மற்றும் மயிர்க்கால்களுக்கு ஆக்ஸிஜன் எளிதில் சென்றடைவதை உறுதி செய்ய முடிவதுடன், முடி உடைதல் பிரச்சனைக்கும் தீர்வு காணப்படுகிறது.

பன்றி இறைச்சி

பன்றி இறைச்சி

நீங்கள் சில கலோரிகளை குறைக்க எண்ணும் போது அதற்கு எதிராக செயல்படும் உணவாக பன்றி இறைச்சி இருந்தாலும், தலைமுடியை பராமரிக்கும் போது, அதன் குணம் மாறி விடுகிறது. ஆனால், 4 அவுன்ஸ்களுக்கு மேல் இதை சாப்பிடத் தேவையில்லை என்று பிரியா சொல்கிறார். பன்றி இறைச்சியில் வைட்டமின் பி, துத்தநாகம் மற்றும் புரதங்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன.

இறால்கள்

இறால்கள்

இறால்கள் சுவையான உணவாக இருப்பது மட்டுமல்லாமல், சோர்வான தலைமுடி மற்றும் ஸ்கால்ப்பிற்கு ஏற்ற தீர்வாகவும் உள்ளன. இறால்களில் வைட்டமின் பி12, இரும்புச்சத்து மற்றும் துத்தநாகம் ஆகியவை நிரம்பியுள்ளதால், முடி இழப்பை தவிர்க்கவும் மற்றும் வளர்ச்சியை மேம்படுத்தி பராமரிக்கவும் தேவையான சத்துக்கள் உள்ளன.

பூசணிக்காய் விதைகள்

பூசணிக்காய் விதைகள்

தலைமுடியை சிறப்பாக பராமரிக்கவும் மற்றும் புத்துணர்வூட்டி வளர்க்கவும் ஏற்றவையாக பூசணிக்காய் விதைகள் உள்ளன. மேலும் இந்த காய்கறியில் ஒட்டுமொத்த உடல் வளர்ச்சிக்கு தேவையான புரதங்கள், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், துத்தநாகம் மற்றும் இரும்புச்சத்து ஆகியவை உள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

20 Foods For Healthy Hair And Scalp

Just as food filled with loads of oil and calories can cause acne flares and jeopardise your waistline, unhealthy food can also cause damage to your healthy hair and scalp. If you want to get rid of dull, dry, or greasy hair, then pile up your plate with these foods and see the difference. Presenting 20 best foods for healthy hair and scalp.
Desktop Bottom Promotion