For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க உடல் எடையை வேகமா குறைக்க இந்த மாதிரி ஆம்லெட் செஞ்சி சாப்பிட்டா போதுமாம்...!

அனைத்து ஊட்டச்சத்துக்களையும் சரியான அளவில் பெறுவது அவசியம். ஒரு முட்டையின் வெள்ளைக்கரு உங்களுக்கு 4 கிராம் புரதத்தையும், ஒரு முழு முட்டையில் 6 கிராம் புரதச்சத்தும், வைட்டமின் பி, டி, கால்சியம், இரும்புச்சத்து மற்றும் பிற

|

உடல் எடையை குறைப்பது என்பது இன்றைய நாளில் மிகவும் சவாலான பணியாக உள்ளது. உடல் எடையை குறைக்க மக்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். உடல் எடையை குறைக்க ஆரோக்கியமான உணவு மற்றும் உடல் செயல்பாடுகள் மிக முக்கியம். எடையைக் குறைக்கவும், தசைகளை வளர்க்கவும் முயற்சிக்கும் அசைவ உணவு உண்பவர்கள் அனைவருக்கும் முட்டை புரதத்தின் ஆதாரமாக உள்ளது. சத்தான, ஆரோக்கியமான முட்டைகள் மலிவு விலையில் கிடைக்கும். சில நிமிடங்களில் சுவையான உணவாக எளிதில் சமைக்கலாம். இந்த உயர்தர புரதம் உங்களை திருப்தியடையச் செய்யும். அதே நேரத்தில் உடலின் முக்கிய உள் செயல்பாடுகளைச் செய்யத் தேவையான பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது.

ways to make your omelette when trying to lose weight in tamil

நீங்கள் உங்கள் விருப்பப்படி முட்டைகளை தயார் செய்து, சமமாக ஆரோக்கியமான பொருட்களைத் தேர்வு செய்யலாம். ஆனால் நீங்கள் ஆம்லெட் தயாரிக்கிறீர்கள் என்றால், குறைந்த நேரத்தில் அதிகபட்ச கலோரிகளை எரிக்க ஆரோக்கியமான பொருட்களுடன் சரியாக இணைக்க பரிந்துரைக்கிறோம். கிலோவைக் குறைக்க முயற்சிக்கும்போது நீங்கள் ஆம்லெட்டை எவ்வாறு தயாரிக்கலாம் என்பதை இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முட்டைகளை ஏன் சாப்பிட வேண்டும்?

முட்டைகளை ஏன் சாப்பிட வேண்டும்?

முட்டைகளில் அதிக புரதம் இருப்பதால் உடல் எடையை குறைக்க உதவுகிறது. இது உங்களை நீண்ட நேரம் முழுதாக வைத்திருக்கும். அந்த புரதம் உங்கள் வளர்சிதை மாற்றத்தை சிறிது அதிகரிக்கலாம். இது அதிக கலோரிகளை எரிக்க உதவும். நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், பழங்கள் மற்றும் காய்கறிகளுடன் ஆரோக்கியமான காலை உணவின் ஒரு பகுதியாக முட்டைகளை சாப்பிடுங்கள்.

இரண்டு முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் ஒரு முழு முட்டை

இரண்டு முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் ஒரு முழு முட்டை

உங்கள் உணவில் இருந்து முட்டையின் மஞ்சள் கருவைக் குறைத்துக்கொண்டால், அதைச் சரியாக சரிசெய்ய வேண்டும். உணவில் இருந்து முட்டையின் மஞ்சள் கருவை முற்றிலுமாக விலக்கினால், உங்களுக்கு தேவையான பல ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் போகலாம். நீங்கள் ஆம்லெட்டைத் தயாரிக்கும் போது, ​​இரண்டு முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் ஒரு முழு முட்டையை எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஊட்டச்சத்துகள்

ஊட்டச்சத்துகள்

அனைத்து ஊட்டச்சத்துக்களையும் சரியான அளவில் பெறுவது அவசியம். ஒரு முட்டையின் வெள்ளைக்கரு உங்களுக்கு 4 கிராம் புரதத்தையும், ஒரு முழு முட்டையில் 6 கிராம் புரதச்சத்தும், வைட்டமின் பி, டி, கால்சியம், இரும்புச்சத்து மற்றும் பிற ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும். முட்டை உங்கள் உடல் எடையை குறைக்க உதவும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவு.

தக்காளி, வெங்காயம் மற்றும் சீஸ் சேர்ப்பது

தக்காளி, வெங்காயம் மற்றும் சீஸ் சேர்ப்பது

நீங்கள் தயாரிக்கும் ஆம்லெட்டில் காய்கறிகளைச் சேர்ப்பது, நாள் முழுவதும் உங்கள் நார்ச்சத்து உட்கொள்ளலை அதிகரிக்கவும், நீண்ட நேரம் உங்களை முழுதாக வைத்திருக்கவும் உதவும். தக்காளி மற்றும் வெங்காயம் ஒவ்வொரு வீட்டிலும் காணப்படும் அடிப்படையான காய்கறிகள், அவற்றை உங்கள் ஆம்லெட்டில் சேர்ப்பதன் மூலம் உங்கள் காலை உணவை மேலும் சத்தாக மாற்றலாம் மற்றும் சில கூடுதல் ஊட்டச்சத்துக்களையும் உங்களுக்கு வழங்கும். முட்டையில் சிறிதளவு சீஸ் சேர்த்துக்கொள்ளலாம்.

கேப்சிகம் மற்றும் கொத்தமல்லி

கேப்சிகம் மற்றும் கொத்தமல்லி

வைட்டமின் சி, கே, ஏ மற்றும் பிற தாதுக்கள் நிறைந்த கேப்சிகமும் நார்ச்சத்து நிறைந்தது மற்றும் அதை உங்கள் ஆம்லெட்டில் சேர்ப்பதால் அதை மேலும் நிரப்பலாம். பச்சை காய்கறிகளில் கலோரிகள் குறைவாக உள்ளது மற்றும் உங்கள் செய்முறைக்கு ஒரு தனித்துவமான சுவையை அளிக்கிறது. அதனுடன், உங்கள் ஆம்லெட் சூடாக இருக்கும்போது புதிதாக நறுக்கிய கொத்தமல்லியைச் சேர்த்து சாப்பிடவும்.

கீரை மற்றும் தக்காளியுடன்

கீரை மற்றும் தக்காளியுடன்

வைட்டமின் கே மற்றும் இரும்புச்சத்து நிறைந்த கீரை உங்கள் உணவில் சேர்க்க காய்கறிகளின் சிறந்த தேர்வாக இருக்கும். நீங்கள் தயாரிக்கும் ஆம்லெட்டில் கீரையுடன் தக்காளியைச் சேர்த்துக் கொண்டால், கீரையின் இரும்புச்சத்தை உறிஞ்சிவிடும். தக்காளியில் உள்ள வைட்டமின் சி இரும்புச்சத்து உறிஞ்சுதலை மேம்படுத்துகிறது. இது ஹீமோகுளோபின் உருவாவதற்கு உதவுகிறது. கூடுதலாக, கீரை மற்றும் தக்காளி திருப்தியை அதிகரிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

ways to make your omelette when trying to lose weight in tamil

Here we are talking about the ways to make your omelette when trying to lose weight in tamil
Story first published: Wednesday, May 11, 2022, 12:46 [IST]
Desktop Bottom Promotion