For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சீரான உடல் எடையை பராமரிக்க இந்த பயிற்சிகளை வீட்டில் இருந்தபடியே செய்யுங்க போதும்…

|

தினசரி 30 நிமிட உடற்பயிற்சி மிகவும் தேவையான ஒன்று. இதனை யாராவது ஒருவர் சொல்லும் போது, நம் மனதில் எழும் கேள்வி, ஏன் உடற்பயிற்சி செய்ய வேண்டும்? என்பது தான். தினந்தோறும், குறைந்தபட்சம் 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்யுங்கள் என்று கூறுவது உடல் எடை சீராக பராமரிப்பதற்காக மட்டுமல்ல. தொற்றில்லா நோய்கள் ஏற்படாமல் இருக்கவும் தான். சர்வதேச நோய் தொற்றாக அறிவிக்கப்பட்ட கோவிட் 19 உலகம் முழுவதிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. இதனால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு அனைவரது அன்றாட வாழ்வையுமே புரட்டிப்போட்டு விட்டது. தொடர்ந்து உடற்பயிற்சி மேற்கொண்டவர்கள் கூட, ஊரடங்கு காரணமாகவும் நோய் தொற்று அபாயத்தின் பேரிலும் வீட்டிலேயே முடங்கிவிட்டனர்.

எனவே, சீரான உடலமைப்பு, ஆரோக்கியம் மற்றும் சுறுசுறுப்பாக இருப்பதற்கான மாற்று வழிமுறையை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம். வீட்டிலிருந்து வேலை செய்வது என்பது தொடங்கிய காலம் முதல் உட்கார்ந்தே வேலை பார்ப்பதன் நேரமும் மேலும் அதிகரித்துவிட்டது. கூடுதலாக, வைரஸ் தொற்று அபாயத்தினால் பெரும்பாலான மக்கள் ஜிம்கள், நீச்சல் குளங்கள், குழு யோகா வகுப்புகள், பைலேட்ஸ் மற்றும் ஜூம்பா வகுப்புகள் உள்ளிட்ட வழக்கமான உடல் பயிற்சி காலஅட்டவணைகளில் கலந்து கொள்வதைத் தவிர்த்துவிட்டனர்.

கோவிட்-19 கட்டுப்பாடுகளின் போது பின்பற்ற வேண்டிய ஐந்து உடற்பயிற்சி விதிமுறைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை படித்து, பின்பற்றுவதன் மூலம் உடற்பயிற்சி செய்தது போலவும் ஆகிவிடும், உடலும் சுறுசுறுப்பாக இருக்கும். வாருங்கள், இப்போது அவற்றை தெரிந்து கொள்வோம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சைக்கிளிங்

சைக்கிளிங்

ஊரடங்கு அறிவிக்கப்பட்டது முதல், இத்தனை காலங்களாக பார்க்க முடியாத வெறிச்சோடிய சாலைகளை நம்மால் பார்க்க முடிகிறது. இத்தகைய வெறிச்சோடிய சாலைகளை பார்க்கும் போது தான், வீட்டு மூளையில் துருபிடித்த நிலையில் கிடக்கும் சைக்கிள் மீது நம் கவனம் திரும்புகிறது. தொற்றுநோய் பரவல் தொடங்கியதிலிருந்து பலரும் சைக்கிள் ஓட்டுதலை ஒரு உடற்பயிற்சி முறையாக மேற்கொண்டுள்ளனர். சமூக விலகலை சமரசம் செய்யாமல், வெளிப்புற உடல் செயல்பாடுகளை மேற்கொள்ள சைக்கிளிங் பெரிதும் உதவுகிறது என்று தான் சொல்ல வேண்டும். நீங்கள் சைக்கிள் ஓட்டுவதை தொடரும் பட்சத்தில், ஜிம்மை அல்லது பூங்காவை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டிய தேவையே இருக்காது.

குடும்ப யோகா

குடும்ப யோகா

உண்மையான குழு யோகா அமர்வுகளில் கலந்து கொள்வது என்பது இப்போது சாத்தியமில்லாத ஒன்று என்றாலும் கூட, வகுப்புகளை வழங்கும் ஆன்லைன் தளங்கள் ஏராளமாக உள்ளன. ஊரடங்கு கட்டுப்பாடுகள் குடும்பத்தினருடன் வீட்டில் அதிக நேரம் செலவிட வாய்ப்பளித்திருக்கிறது. இதுபோன்ற சூழலில், தினசரி குடும்ப யோகா அமர்வுகளை திட்டமிடுவது நல்லது. அனைத்து குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த இது மிகச் சிறந்த சரியான வழியாகும்.

ஸ்கிப்பிங்

ஸ்கிப்பிங்

ஸ்கிப்பிங் என்பது மதிப்பிடப்பட்ட ஆனால் மிகவும் பயனுள்ள உடல் செயல்பாடுகளில் ஒன்றாகும். நாளொன்றிற்கு 20 நிமிடங்கள் ஸ்கிப்பிங் செய்வது, கலோரிகளை எரிப்பதற்கும் எடையைக் குறைப்பதற்கும் மிகவும் பயனுள்ள வழியாகும். ஊரடங்கு காலத்தில் வீட்டிலேயே இருந்து உடல் எடை அதிகரிக்க நேர்ந்திருந்தால், உங்கள் அன்றாட செயல்பாட்டின் ஒரு பகுதியாக ஸ்கிப்பிங்கை ஏற்றுக் கொள்ளுங்கள். இது உடல் எடையையும் குறைக்கும், உடலை சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கவும் உதவும்.

உபகரணங்கள் இல்லாத உட்புற உடற்பயிற்சிகள்

உபகரணங்கள் இல்லாத உட்புற உடற்பயிற்சிகள்

ஊரடங்கின் போது வீட்டிலேயே இருந்தபடி உடற்பயிற்சி செய்ய பொருத்தமாக திரெட்மில் அல்லது உடற்பயிற்சி பைக்குகளை ஆர்டர் செய்ய பலர் விரும்புகின்றனர். இருப்பினும், உடற்பயிற்சிக்கான உங்கள் அன்றாட தேவையை பூர்த்தி செய்ய உங்களுக்கு எப்போதும் உடற்பயிற்சி உபகரணங்கள் தேவையில்லை என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். எந்தவொரு விரிவான உபகரணமும் இல்லாமல் போதுமான உடல் செயல்பாடுகளை உட்புறங்களில் இருந்தபடியே கூட செய்து பலனை பெற முடியும்.

மாடி படிக்கட்டுகள்

மாடி படிக்கட்டுகள்

உங்களது வீட்டில் உள்ள மாடி படிக்கட்டுகள் கூட ஒரு எளிதான உடற்பயிற்சி தளம் தான். நடைபயிற்சி அல்லது ஓடுதலுடன் ஒப்பிடுகையில், படிக்கட்டு பயிற்சி அதிக கலோரிகளை எரிக்க அனுமதிக்கிறது. படிக்கட்டுகளில் ஏறுவது உடல் தசைகளை குறைக்க உதவுவதோடு, உடலின் ஆற்றல் மற்றும் தாங்கும் திறனை மேம்படுத்த உதவுகிறது.

முடிவுரை

முடிவுரை

போதிய உடல் செயல்பாடு இல்லாதது நமக்கு குறிப்பிடத்தக்க சுகாதார பிரச்சனைக்கு வழிவகுக்கக்கூடும். இதய நோய்கள், நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் புற்றுநோய் உள்ளிட்ட பெரும்பாலான தொற்றில்லா நோய்களுக்கு (என்.சி.டி) போதிய உடற்பயிற்சி செய்யாதது ஆபத்து காரணியாக கருதப்படுகிறது. போதிய உடல் செயல்பாடு இல்லாதது மரணத்திற்கு ஒரு முக்கிய ஆபத்து காரணியாக உலக சுகாதார நிறுவனம் அங்கீகரிக்கிறது.

உலக அளவில் நான்கில் ஒருவர் போதுமான அளவில் உடல் செயல்படவில்லை என்றும் உலக சுகாதார நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. இந்தியாவில், பெருகி வரும் உடலுழைப்பில்லாத வாழ்க்கை முறைகள் மற்றும் போதிய உடற்பயிற்சியின்மை ஆகியவை கடந்த 25 ஆண்டுகளில் வாழ்க்கை முறை நோய்களின் எண்ணிக்கையை அதிகரித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே, நம்மையும், நம் உடலையும் காக்க அன்றாடம் மேற்கூறிய ஏதேனும் ஒரு வகையில் உடற்பயிற்சியை செய்ய மறவாதீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Top Five Fitness Regimens To Adopt For Weight Loss At Home

Here are top five fitness regimens to adopt for weight loss at home. Read on...