Latest Updates
-
1 வருடத்துக்கு பின் மேஷம் சொல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்..
சிம்புவின் மிரள வைக்கும் புதிய தோற்றம்.. உடல் எடையைக் குறைக்க என்ன செய்தார் தெரியுமா?
சிம்புவுக்கு விளையாட்டு என்றால் மிகவும் பிடிக்குமாம். உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி செய்வது மட்டுமல்லாமல் டென்னிஸ், பாக்ஸிங், நீச்சல், பேஸ்கட்பால் போன்ற விளையாட்டுகளிலும் அவர் ஈடுபட்டாரம்.
ஏற்கனவே 30 கிலோ உடல் எடையை குறைத்த நடிகர் சிம்பு, கெளதம் மேனனின் 'வெந்து தணிந்தது காடு' படத்திற்காக தற்போது மீண்டும் 15 கிலோ எடையைக் குறைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்தவாரம் திருச்செந்தூரில் தொடங்கியது. சமீபத்தில் வெளியான படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்தது. சிம்புவின் தோற்றம் அதற்கு முக்கிய காரணம். ஆம், 101 கிலோ எடை இருந்த சிம்பு ஈஸ்வரன் படத்திற்காக 30 கிலோ எடை குறைந்தார். சிம்புவின் எடை குறைப்பு அவரை மீண்டும் கம்பேக் செய்ய வைத்தது. இந்நிலையில், வெந்து தணிந்தது காடு படத்தில் சிறுவயது தோற்றத்திற்காக சிம்பு மீண்டும் 15 கிலோ எடையைக் குறைத்துள்ளார்.

'சிம்புவா இது' என்று ஆச்சர்யப்படும் அளவுக்கு உடல் மெலிந்து சிறுவனின் தோற்றத்தை கொண்டு வந்துள்ளார். படக்குழு வெளியிட்டுள்ள இந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி கொண்டிருக்கிறது. சிம்பு பாதிக்கு பாதி தன்னுடைய உடல் எடையை குறைக்க கடின முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். இதுவரை அவர் 45 கிலோ எடை குறைத்துள்ளார் என்பது தெரிகிறது. நடிகர் சிம்பு உடல் எடையை குறைக்க என்னென்ன செய்தார் என்பதை பற்றி இக்கட்டுரையில் காணலாம் .

101 கிலோ எடை
கடந்த சில வருடங்களில் சிம்பு அதிக வெயிட் போட்டு 101 கிலோ உடல் எடையை கொண்டிருந்தார் நடிகர் சிம்பு. கட்டுமஸ்தாக இருந்த சிம்பு இவ்வளவு உடல் எடை அதிகரிப்பதை பார்த்து சமூக வலைதளங்களில் பலர் கிண்டல் செய்தனர். எடை அதிகரிப்பால் சிம்புவின் மார்க்கெட் குறைந்துவிட்டதாகவும் கூறப்பட்டது.

ஈஸ்வரன் படத்திற்காக 71 கிலோவான சிம்பு
இந்நிலையில், கடந்த ஆண்டு இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவான ஈஸ்வரன் திரைப்படத்திற்காக சிம்பு அவரது உடல் எடையை 101 கிலோவிலிருந்து 71 கிலோவாக குறைத்தார். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. சுமார் 30 கிலோ எடையை குறைத்து மிகவும் இளமையாக நல்ல உடல் எடையை கொண்ட சிம்பை திரையில் பார்த்து அவரது ரசிகர்கள் கொண்டாட்டம் அடைந்தனர். எடை குறைப்பிற்கான கடின உழைப்பு பலரையும் வியக்க வைத்தது.

மீண்டும் 15 கிலோ எடையை குறைத்த சிம்பு
கெளதம் மேனனின் ‘வெந்து தணிந்தது காடு' படத்திற்காக நடிகர் சிம்பு தற்போது 15 கிலோ எடையைக் குறைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்தவாரம் திருச்செந்தூரில் தொடங்கியது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் கவனம் ஈர்த்தது. ஏனெனில், இப்படத்தில் சிறுவயது தோற்றத்திற்காக சிம்பு 15 கிலோ எடையைக் குறைத்துள்ளார். ‘சிம்புவா இது' என்று ஆச்சர்யப்படும் அளவுக்கு தற்போது உடல் மெலிந்து உண்மையிலேயே 16 அல்லது 17வயது சிறுவனின் தோற்றத்தை கொண்டு வந்துள்ளார். படக்குழு வெளியிட்டுள்ள இந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

அதிகாலையில் நடைப்பயிற்சி
தனது உடல் எடையை குறைக்க சிம்பு கடின முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். அதிகாலை 4.30 மணிக்கு எழுந்து நடைபயிற்சி செய்வார். அதன் பிறகு ஜிம்மிற்கு வந்து ஒர்க்அவுட் செய்வார். பல்வேறு பயிற்சிகளை தொடர்ந்து செய்துகொண்டே இருந்தார். ஒரே பயிற்சிகளை மட்டுமல்லாமல் வெவ்வேறு பயிற்சிகளையம் அவர் மேற்கொண்டார்.

உணவு கட்டுப்பாடு
ஜங்க் ஃபுட் மற்றும் அசைவ உணவுகள் சாப்பிடுவதை சிம்பு சுத்தமாக தவிர்த்துவிட்டார். அல்கலைன் நிறைந்த உணவுகளையும், அதிக ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளைதான் தொடர்ந்து எடுத்துக்கொண்டார். அதிக மாவுச்சத்து நிறைந்த உணவுகளையும் தவிர்த்தார். அதே சமயங்களில் திரவ உணவுகளையும் அவர் எடுத்துக்கொண்டார். மேலும், அவருக்கு தேவையான உணவை அவரே சமைத்து சாப்பிட ஆரம்பித்தார்.

விளையாட்டிலும் ஆர்வம்
சிம்புவுக்கு விளையாட்டு என்றால் மிகவும் பிடிக்குமாம். உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி செய்வது மட்டுமல்லாமல் டென்னிஸ், பாக்ஸிங், நீச்சல், பேஸ்கட்பால் போன்ற விளையாட்டுகளிலும் அவர் ஈடுபட்டாரம்.

இறுதிகுறிப்பு
உடல் எடையை குறைப்பது என்பது மிகவும் சவாலான பணி. உணவு கட்டுப்பாடுகள், உடற்பயிற்சி மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் அனைத்தும் செய்யும்போது, நமது உடல் எடை குறைய ஆரம்பிக்கிறது. இவற்றை முழுவதாக பின்பற்றுவதுதான் எடை இழப்பு பயணத்தின் முக்கிய பணி. சிம்பு படத்திற்காகவோ, மற்றவர்களுக்கு நிரூபிக்கவோ தன் உடல் எடையை குறைக்கவில்லையாம். தான் கஷ்டப்பட்டபோது தனக்கு ஆதரவாக இருந்த ரசிகர்கள் மற்றும் தன் நலம் விரும்பிகளுக்காக எடையை குறைத்துள்ளதாக அவர் கூறுகிறார்.



Click it and Unblock the Notifications











