For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காலையில் இந்த ஜூஸை குடிச்சா, நாள் முழுக்கா ஃபிரஷ்ஷா இருக்கலாம் தெரியுமா?

காலை உணவானது சரியான வகை ஊட்டச்சத்து அடங்கியதாக இருக்க வேண்டும். அதில் பல நிபுணர்கள் காலை வேளையில் உண்ணும் உணவில் இருக்க வேண்டிய முக்கிய சத்தாக புரோட்டீனைக் கூறுகின்றனர்.

|

Recommended Video

நாள் முழுக்கா Fresh இருக்க இந்த juice குடிங்க | Two high-protein breakfast drink recipes

காலை உணவு மிகவும் முக்கியமானது என்பது அனைவருக்குமே தெரியும். ஒருவரது காலை உணவு மிகவும் ஆரோக்கியமானதாக இருந்தால், அன்றைய நாள் முழுவதும் மிகவும் சுறுசுறுப்பாகவும், ஃபிரஷ்ஷாகவும் இருக்கலாம். ஒரு நாளின் முதன்மையான உணவானது முக்கியமானதாக கருதப்படுவதற்கு காரணம், இது உடலின் மெட்டபாலிச அளவை ஊக்குவிக்க உதவி, நாள் முழுவதும் சிறப்பாக செயல்பட உதவும்.

High-Protein Breakfast Drink Recipes For Strong Start Of The Day

நல்ல காலை உணவு உடலுக்கு நாள் முழுவதும் ஆற்றலை வழங்குவதோடு, அடுத்த வேளை உணவு உண்ணும் வரை இரத்த சர்க்கரை அளவை நிலையாக வைத்துக் கொள்ள உதவும். எப்படி காலை உணவு மிகவும் முக்கியமானதோ, அதேப் போல் அதை எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதுடன், எந்த மாதிரியான உணவைத் தேர்ந்தெடுத்து சாப்பிடுகிறோம் என்பதும் முக்கியம்.

தினமும் இந்த ஸ்மூத்திகளை காலையில் குடித்தால் உடல் எடை குறையும் தெரியுமா?

காலை உணவானது சரியான வகை ஊட்டச்சத்து அடங்கியதாக இருக்க வேண்டும். அதில் பல நிபுணர்கள் காலை வேளையில் உண்ணும் உணவில் இருக்க வேண்டிய முக்கிய சத்தாக புரோட்டீனைக் கூறுகின்றனர். சரி, இப்போது அந்த புரோட்டீன் சத்து குறித்தும், அந்த சத்து நிரம்பிய சுவையான மற்றும் எளிய செய்முறையைக் கொண்ட பானங்கள் குறித்துக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புரோட்டீன்

புரோட்டீன்

காலை உணவில் புரோட்டீன் இருக்க வேண்டியது மிகவும் முக்கியம். பல ஆய்வுகளிலும் இது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் புரோட்டீன் உணவுகள் மெட்டபாலிசத்தை மேம்படுத்துவதோடு, பசியையும் கட்டுப்படுத்த உதவும். அதாவது புரோட்டீன் நிறைந்த உணவுகளை உட்கொண்டால், நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும்.

எடையைக் குறைக்க...

எடையைக் குறைக்க...

உடல் எடையைக் குறைக்க டயட்டில் இருப்போர் புரோட்டீன் உணவுகளை உண்பதே நல்லது. ஏனெனில் புரோட்டீன் ஒரு நிறைவு ஊட்டச்சத்து என்று கூறப்படுகிறது. கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புகளுடன் ஒப்பிடும் போது ஊட்டச்சத்துக்களை செரிக்கும் போது நம் உடல் அதிக கலோரிகளை செலவிடுவதால், புரோட்டீன் எடை இழப்புக்கு மிகவும் முக்கியமானது.

இப்போது நாள் முழுவதும் சுறுசுறுப்புடனும், ஃபிரஷ்ஷாகவும் இருக்க உதவும், அதே சமயம் உடல் எடையையும் குறைக்க உதவி புரியும் இரண்டு புரோட்டீன் பானங்கள் குறித்து காண்போம்.

ஆளி விதை ஸ்மூத்தி ரெசிபி

ஆளி விதை ஸ்மூத்தி ரெசிபி

ஆளி விதை

பழுப்பு நிறத்தில் மிகச்சிறிய அளவில் மினுமினுப்புடன் இருப்பது தான் ஆளி விதை. இந்த விதைவில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. இத்தகைய விதை அனைத்து கடைகளிலும் எளிதில் கிடைப்பதால், இதை பல ரெசிபிக்களுடன் சேர்த்துக் கொள்ளலாம்.

100 கிராம் ஆளி விதையில் 18 கிராம் புரோட்டீனுடன், நல்ல வளமான அளவில் கால்சியம் சத்தும் நிரம்பியுள்ளது. அதோடு நார்ச்சத்து மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களும் அதிகம் நிறைந்துள்ளது.

தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:

* ஆளி விதை - 1 டேபிள் ஸ்பூன் (வறுத்து அரைத்தது)

* சோயா பால்/சாதாரண பால் - 1/2 கப்

* தண்ணீர் - 1/2 கப்

* பட்டைத் தூள் - 1 டீஸ்பூன் (விருப்பமிருந்தால்)

* தேன் - சுவைக்கேற்ப (விருப்பமிருந்தால்)

செய்முறை:

செய்முறை:

* மிக்ஸியில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்கு 10-15 நொடிகள் அரைத்துக் கொள்ள வேண்டும்.

* தயாரித்து பானத்தை உடனடியாக குடிப்பதாக இருந்தால், அத்துடன் சிறிது ஐஸ் கட்டிகளை சேர்த்துக் கொள்ளலாம்.

பாதாம் குங்குமப்பூ மில்க் ஷேக் ரெசிபி

பாதாம் குங்குமப்பூ மில்க் ஷேக் ரெசிபி

பாதாம்

பாதாம் உடல் எடையைக் குறைக்க உதவி புரிவதாக பல ஆய்வுகள் கூறுகின்றன. பாதாமில் அதிகளவில் மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்து மற்றும் புரோட்டீன் போன்றவை நிறைந்துள்ளது. 100 கிராம் பாதாமில் 21 கிராம் புரோட்டீன் உள்ளது.

வால்நட்ஸ்

வால்நட்ஸ்

மற்ற நட்ஸ்களைப் போன்றே வால்நட்ஸிலும் நல்ல கொழுப்புக்களான மோனோஅன்சாச்சுரேட்டட் மற்றும் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் போன்றவை நிரம்பியுள்ளன. மேலும் இதில் அத்தியாவசிய கொழுப்பு அமிலமான ஒமேகா-3-யும் உள்ளது. அதோடு இந்த நட்ஸில் இரும்புச்சத்து, செலினியம், கால்சியம், ஜிங்க், வைட்டமின் ஈ மற்றும் சில பி வைட்டமின்களும் நிறைந்துள்ளது. 100 கிராம் வால்நட்ஸில் 15 கிராம் புரோட்டீன் உள்ளது.

தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:

* பாதாம் - 2 டேபிள் ஸ்பூன்

* வால்நட்ஸ் - 1 டேபிள் ஸ்பூன்

* ஆளி விதை - 1 டீஸ்பூன்

* தேன் - 1 டீஸ்பூன்

* குங்குமப்பூ - சிறிது

* பால் - 250 மிலி

செய்முறை:

செய்முறை:

* மிக்ஸியில் பாதாம், வால்நட்ஸ் மற்றும் ஆளி விதை போன்றவற்றை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அத்துடன் குளிர்ந்த பால், தேன் மற்றும் குங்குமப்பூ சேர்த்து நன்கு ஒருமுறை அடித்துக் கொள்ள வேண்டும்.

* இப்போது சுவையான பாதாம் குங்குமப்பூ மில்க் ஷேக் ரெடி!

குறிப்பு

குறிப்பு

மேலே கொடுக்கப்பட்டுள்ள புரோட்டீன் அதிகம் நிறைந்த பானங்களை காலை வேளையில் குடிப்பதுடன், சிறிது உடற்பயிற்சியையும் தவறாமல் மேற்கொண்டு வந்தால், விரைவில் உடல் எடை குறைவதோடு, உடல் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்புடனும் இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

High-Protein Breakfast Drink Recipes For Strong Start Of The Day

If you have been asked to increase your protein intake as part of your weight loss diet, then the two high-protein breakfast drink recipes might be just what you were looking for.
Story first published: Monday, September 9, 2019, 12:29 [IST]
Desktop Bottom Promotion