For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

40 வயசானாலும் ஃபிட்டா அழகா இருக்கணுமா? அப்ப இத ஃபாலோ பண்ணுங்க...

40 வயதை கடந்த பெண்கள் சரியான உணவை உட்கொள்வதும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை தேர்வு செய்வதன் மூலம் ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படாமல் தடுத்திடலாம்.

|

பொதுவாகவே 40 வயதை கடக்கும் போது, உடலில் ஏராளமான மாற்றங்கள் ஏற்படத் தொடங்கும். வளர்சிதை மாற்றத்தின் வேகம் குறைவது, தசைகள் வலுவிழப்பது, சரும சுருக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களை சந்திக்க நேரிடும். அதுமட்டுமல்லாது, ஆண்களை போலவே பெண்களுக்கும் 40 வயதை கடக்கும் போது, உயர் இரத்த அழுத்தம், இருதய கோளாறு, உடல் எடை அதிகரிப்பு, கொழுப்பு அதிகரிப்பு போன்ற மருத்துவ நிலைகள் ஏற்படக்கூடும். ஆனால், சீரான, ஆரோக்கியமான உணவுப்பழக்கத்துடன் கூடிய முறையான உடற்பயிற்சி, நிம்மதியான தூக்கம், குறைந்த மனஅழுத்தம் போன்றவற்றையும் கையாளுவதன் மூலம் சரியான உடல் எடை மற்றும ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் பெற்றிடலாம்.

Diet And Nutrition Tips For Women Over 40

ஒருவேளை, மாதவிடாய் அல்லது பெரி-மெனோபாஸ் நிலைக்குச் செல்லும் பெண்கள் பி.எம்.எஸ், உடற்சோர்வு, பதற்றம், மனச்சோர்வு அல்லது கவனம் செலுத்துவதில் சிரமம் என பலவிதமான உணர்ச்சிகளை அனுபவிப்பது முற்றிலும் இயல்பான ஒன்று. ஆனால், சரியான உணவை உட்கொள்வதும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை தேர்வு செய்வதன் மூலம் ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படாமல் தடுத்திடலாம். இருப்பினும், 40 வயதை கடந்த பெண்கள் சிறப்பான மற்றும் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு, எதைச் சாப்பிடுவது அல்லது எந்தெந்த உணவுகளை தவிர்ப்பது என்பது குறித்து அறிந்து உட்கொள்வதே சிறந்தது.

MOST READ: பிபி, சுகர் வரக்கூடாதா? அப்ப காலையில இந்த இலைய வாயில போட்டு மெல்லுங்க...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
40 வயதிற்கு பின்பு சாப்பிட வேண்டியவை மற்றும் தவிர்க்க வேண்டியவை:

40 வயதிற்கு பின்பு சாப்பிட வேண்டியவை மற்றும் தவிர்க்க வேண்டியவை:

40 வயதை அடையும் ஒவ்வொரு பெண்ணுக்கும் நல்ல ஊட்டச்சத்து கிடைக்க வேண்டியது மிகவும் முக்கியமானது. எனவே, நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பதை தெரிந்து சாப்பிட வேண்டும். புனே, காரடி, தாய்மை மருத்துவமனை, ஆலோசகர், ஊட்டச்சத்து நிபுணர் மற்றும் உணவியல் நிபுணருமான டாக்டர் அல்கா பாரதி, 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் சாப்பிட வேண்டிய சில உணவுகள் மற்றும் ஊட்டச்சத்துகள் குறித்த குறிப்புகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

நார்ச்சத்து நிறைந்த உணவுகள்

நார்ச்சத்து நிறைந்த உணவுகள்

உண்ணும் உணவில் முழு தானியங்களைச் சேர்ப்பது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும், மலச்சிக்கலைத் தடுக்கவும் சிறந்து உதவும். நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்வதன் மூலம் உடல் எடையை குறைத்திட உதவும். உயர் நார்ச்சத்து உணவு, இரத்த சர்க்கரை அல்லது கொழுப்பின் அளவைக் குறைக்கவும், சில புற்றுநோய்களுக்கான ஆபத்தை குறைக்கவும், குடல் ஆரோக்கியத்தை பராமரிக்கவும் உதவும். வெள்ளை ரொட்டி மற்றும் வெள்ளை அரிசி போன்ற சுத்திகரிக்கப்பட்ட தானியங்களை தவிர்த்து, முழு தானியங்களை (முழு கோதுமை ரொட்டி, பழுப்பு அரிசி மற்றும் ஓட்ஸ்) உணவில் அதிகம் சேர்ப்பது அதிக நார்ச்சத்தை பெற உதவும். மேலும், காய்கறி மற்றும பழங்களின் சாலடுகள் சாப்பிடுவது நார்ச்சத்துக்கான சிறந்த மூலமாகும். நார்ச்சத்தானது, சருமத்தை மீள் நிலையில் வைத்திருக்க உதவுவதோடு, சூரியனின் தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களிலிருந்தும் பாதுகாக்கிறது.

உணவில் இருந்து வெள்ளை பொருட்களை நீக்குங்கள்

உணவில் இருந்து வெள்ளை பொருட்களை நீக்குங்கள்

40 வயதிற்கு பிறகு, வெள்ளை பொருட்களான உப்பு மற்றும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை போன்றவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டியது அவசியம். அதிகப்படியான உப்பு இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். இதனால் இதயம், சிறுநீரகம், தமனிகள் மற்றும் மூளை ஆகியவையும் பாதிக்கக்கூடும். வறுத்த, பதப்படுத்தப்பட்ட மற்றும் காரமான உணவுகள், சீஸ், உறைந்த உணவு மற்றும் அனைவருக்கும் விருப்பமான பீட்சாவிலும் உப்பு அதிக அளவில் உள்ளதால் தவிர்ப்பது நல்லது. வயதான தோற்றத்தை விரைவுபடுத்துவதோடு, உயர் இரத்த குளுக்கோஸை ஏற்படுத்தும், நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கும் என்பதால் நிறைய இனிப்புகளை சாப்பிடுவதும் நல்லதல்ல. காற்றூட்டப்பட்ட பானங்கள், இனிப்புகள், ஐஸ்கிரீம்கள் மற்றும் சாக்லேட்டுகளுக்கும் வேண்டாம் என்று சொல்லுங்கள். எனவே, உணவில் உப்பு மற்றும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை சேர்ப்பதை நிறுத்த முயற்சிக்கவும். அதற்கான மாற்று வழியை உங்கள் மருத்துவரிடம் கேட்டறிந்து கொள்ளலாம்.

லுடீன் நிறைந்த உணவுகளை உண்ணுங்கள்

லுடீன் நிறைந்த உணவுகளை உண்ணுங்கள்

40 வயதை கடந்த பிறகு நினைவாற்றல் பிரச்சனைகள் ஏற்பட தொடங்குகின்றன. நினைவு பிரச்சனைகள், கவனம் செலுத்துவதில் சிரமம் அல்லது குழப்பம் ஆகிய பொதுவான பிரச்சனைகளும் ஆரம்பிக்கும். பச்சை இலை காய்கறிகள் மற்றும் கேரட் போன்ற காய்கறிகளில் இருக்கும் நிறமியான லுடீன் நிரம்பிய உணவுகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிடுங்கள். ஒரு கப் சூரியகாந்தி விதைகளை சிற்றுண்டியாக சாப்பிடலாம். கீரை, அஸ்பாரகஸ், கடல் உணவுகளை சேர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில், இவற்றில் வைட்டமின் ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. இதனால், நினைவாற்றல் மற்றும் பார்வை மேம்பட உதவிடும்.

ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அவசியம்

ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அவசியம்

40 வயதிற்கு பின்னரும் ஜொலிக்கும், இளமை சருமம் வேண்டுமா? அப்படியெனில், உங்கள் உணவில் ஆக்ஸிஜனேற்றிகளை சேர்க்க மறக்காதீர்கள். ஏனென்றால், உங்கள் தோல் நெகிழ்ச்சித்தன்மையை இழந்து, வயதாகும்போது சுருக்கங்கள், கறைகள் மற்றும் கரும்புள்ளிகள் தோன்றலாம். உங்கள் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உங்கள் உணவில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களை சேர்க்கவும். எனவே, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த சால்மன், மத்தி, கானாங்கெளுத்தி மீன்களை சாப்பிடலாம்.

புரதம் மற்றும் கால்சியம் முக்கியம்

புரதம் மற்றும் கால்சியம் முக்கியம்

நீங்கள் வலுவாக, தசை வெகுஜனத்தோடு, வலிமையான எலும்புகளை பெற விரும்புகிறீர்களா? கொழுப்பு குறைந்த இறைச்சி, மீன், முட்டை மற்றும் பீன்ஸ், பயறு, விதைகள் மற்றும் தானியங்கள் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் ஊட்டச்சத்து நிபுணரிடம், ஊட்டச்சத்துடன் உட்கொள்ள வேண்டிய புரத அளவையும் கேட்டறிந்து கொள்ளுங்கள். ஏனென்றால், அளவிற்கு அதிகமான புரதம் உட்கொள்வதும் நல்லதல்ல. மாதவிடாய் நின்ற பிறகு, இயற்கையாகவே, உடலில் ஈஸ்ட்ரோஜன் இழப்பு ஏற்படக்கூடும். இதனால் ஏற்படக்கூடும் கால்சியத்தின் பற்றாக்குறை எலும்பு இழப்பை அதிகரிக்க வாய்ப்புள்ளது. எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்க விதைகள், தயிர், பாதாம், அத்திப்பழம், பயறு வகைகள் போன்ற உணவுகளை சாப்பிடுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

வைட்டமின் டி நிறைந்த உணவுகள்

வைட்டமின் டி நிறைந்த உணவுகள்

கூடுதலாக, வைட்டமின் டி நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள். இது நோயை எதிர்த்துப் போராட உதவுவதோடு, சாதாரண தசை செயல்பாட்டிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. வைட்டமின் டி உங்கள் உடலுக்கு தேவையான கால்சியத்தை உறிஞ்சுவதற்கு அவசியமான ஊட்டச்சத்தாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Diet And Nutrition Tips For Women Over 40 in Tamil

Here are some diet and nutrition tips for women over 40. Read on...
Desktop Bottom Promotion