For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனாவால் வீட்டிலேயே முடங்கி இருக்கும்போது அதிகரிக்கும் உடல் எடையை எப்படி குறைக்கலாம் தெரியுமா?

கொரோனாயிலிருந்து உங்களை பாதுகாக்க வீட்டிலேயே தனிமை படுத்திக்கொள்ள வேண்டும். அதே நேரத்தில் உடற்செயற்பாடு இல்லாமல் இருப்பது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.

|

உலகம் முழுவதும் கொரோனவால் சுமார் 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். உலகையே கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. கொரோனாவின் கோரதாண்டவம் இந்தியாவிலும் பரவி வருவதால், வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம், வீட்டிலே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

creative ways to get moving when you are stuck at home during the lockdown

கொரோனாயிலிருந்து உங்களை பாதுகாக்க வீட்டிலேயே தனிமை படுத்திக்கொள்ள வேண்டும். அதே நேரத்தில் உடற்செயற்பாடு இல்லாமல் இருப்பது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. உடற்செயற்பாடு உங்கள் உடலில் உள்ள கலோரிகளை எரிக்க உதவுகிறது. இந்நிலையில், உடற்செயற்பாடு இல்லாமல், அமர்ந்தே அல்லது படுத்தே இருந்தால், அது பல உடல் நல பிரச்சனைகளை ஏற்படுத்தும். ஆதலால், நீங்கள் வீட்டில் இருந்தபடியே உங்கள் கலோரிகளை எரிக்க என்ன செய்யலாம் என்பதை இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கலோரிகளை எரிக்க எளிதான வழிகள்

கலோரிகளை எரிக்க எளிதான வழிகள்

நம் உடலில் கலோரிகள் எரிக்கப்படுவதற்கு உடல் செயற்பாடு மிக முக்கியம். உடற்செயற்பாடு உங்கள் ஆரோக்கியத்தோடு இணைக்கப்பட்டுள்ளது. தற்போது உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. உடலுக்கு வேலை கொடுக்காமல், உணவை மட்டும் உட்க்கொண்டால், அந்த கலோரிகள் உங்கள் உடலிலேயே தங்கிவிடும். உங்களால் வீட்டில் இருந்தபடியே செய்யக்கூடிய உடற்செயல்பாடுகளை பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

MOST READ: கொரோனா பீதிகளால் ஏற்படும் மன அழுத்தத்தை எப்படி குறைக்கலாம் தெரியுமா?

ஒர்க்அவுட்

ஒர்க்அவுட்

தினமும் ஜாகிங் அல்லது ஜிம்மிற்கு செல்பவர்கள் தற்போது வீட்டிலேயே இருக்க வேண்டிய சூழல் உள்ளது. நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே உடற்பயிற்சிகளையும் , யோகா போன்றவையும் செய்யலாம். இன்றைய நவீன காலக்கட்டத்தில் வீட்டில் இருந்தபடியே எவ்வாறு ஓர்க்அவுட் செய்யலாம் என்று பல வீடியோக்கள் உங்களுக்கு வழிகாட்டும்.

நடந்துகொண்டே பேசுங்கள்

நடந்துகொண்டே பேசுங்கள்

உங்கள் கையில் ஸ்மார்ட்போன் இருப்பதால், அதை உங்கள் நன்மைக்காகப் பயன்படுத்துவதே சிறந்த வழியாகும். நீங்கள் வீட்டில் இருக்கும் இந்த நாட்களில், உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர் அல்லது சக ஊழியர்களுடன் தொடர்ந்து பழகுவதற்கான ஒரே வழி தொலைபேசிகள்தான் என்பது கிட்டத்தட்ட இயல்பானது. இங்கே ஒரு வேடிக்கையான பரிந்துரை. ஒவ்வொரு முறையும் உங்களுக்கு அழைப்பு வரும்போது வெறுமனே எழுந்து செல்லுங்கள். நீங்கள் எவ்வளவு அதிகமாக சுற்றி வருகிறீர்களோ, அவ்வளவு உடல் ரீதியாக நீங்கள் சுறுசுறுப்பாக இருப்பீர்கள்.

குழந்தைகளுடன் விளையாடுங்கள்

குழந்தைகளுடன் விளையாடுங்கள்

ஒருவரையொருவர் நாமே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த சூழலில் உங்கள் குழந்தைகளுடன் நீங்கள் நேரத்தை செலவிடலாம். அவர்களுடன் வீட்டிலேயே நீங்கள் விளையாடலாம். இது ஒரு வேடிக்கையான செயலையும் உருவாக்குகிறது. இருப்பினும், நீங்கள் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுகிறீர்கள் என்பதையும் குழந்தைகளை சுற்றி நல்ல தூரத்தைப் பராமரிப்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

MOST READ: எச்சரிக்கை! இந்த நோய் உள்ளவர்களுக்கு கொரோனாவால் ஏற்படும் பாதிப்பு அதிகமாக இருக்குமாம்...!

வீட்டு வேலைகளைச் செய்யுங்கள்

வீட்டு வேலைகளைச் செய்யுங்கள்

உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்திருந்தால், வீட்டிற்கு வெளியே மட்டும்தான் அதை செய்ய முடியும் என்றில்லை, வீட்டில் இருந்தே செய்யலாம். சில ஸ்மார்ட் வழிகளில், உங்கள் அன்றாட வேலைகளை கொழுப்பு உடைக்கும் செயல்களாக மாற்றலாம். ஆமாம், எளிமையான வீட்டு வேலைகள் அல்லது பணிகளைச் செய்வது உங்கள் உடலில் இருக்கும் கலோரி எரிப்பதை இரட்டிப்பாகும். இந்த வழி உங்களுக்கு எடை குறைக்கவும் உதவுகிறது. டிராப்மில்லில் ஓடுவதற்கு 15-20 நிமிடங்கள் சமமாக மாப்பிங், வீட்டை சுத்தம் செய்தல் அல்லது தளபாடங்கள் மறுசீரமைத்தல் போன்ற கடுமையான வேலைகளைச் செய்வது நல்லது என்று ஆய்வுகள் கூறுகின்றன.

யோகா மற்றும் தியானம் செய்யுங்கள்

யோகா மற்றும் தியானம் செய்யுங்கள்

சுய கவனிப்பு, தியானம் அல்லது யோகா செய்வதில் நேரத்தை செலவிடுவது எளிதான வழிகளில் ஒன்று. வழக்கமான யோகா பயிற்சி உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும், உங்கள் மனதை மையப்படுத்தவும், உற்சாகப்படுத்தவும் முடியும். தியானம் சிறப்பாக கவனம் செலுத்த உதவுகிறது மற்றும் எதிர்மறை ஆற்றல்களையும் பதட்டத்தையும் நீக்குகிறது. நல்ல உடற்செயற்பாடுகள் கொண்ட யோகா பயிற்சியை செய்வது நல்லது.

MOST READ: உங்க குழந்தைகளுக்கு கொரோனா பரவமா தடுக்க இந்த உணவுகளை கொடுங்க...!

படிக்கட்டு பயிற்சி

படிக்கட்டு பயிற்சி

நீங்கள் ஜிம்மிற்குச் சென்று சில கார்டியோ நகர்வுகள் செய்ய முடியாவிட்டால், வருத்தப்பட வேண்டாம். உங்கள் வீடு அல்லது கட்டிடத்தில் உள்ள படிக்கட்டுகளில் நீங்கள் இந்த பயிற்சியை மேற்கொள்ளலாம். இதை உங்கள் அட்டவணையில் எளிதாக இணைத்துக்கொள்ளலாம். உங்கள் வீட்டு படிக்கட்டுகளில் இந்த பயிற்சி செய்வது, உடலிலுள்ள கலோரிகளை எரிக்க உதவும். படிக்கட்டுகள் சுத்திகரிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி

கொரோனாவால் வீட்டிலேயே இருக்கும் இந்த சூழலில் உங்களையும், உங்க குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்பது மிக முக்கியம். உடற்செயற்பாடு இல்லாமல் இருப்பது உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும். ஆதலால், நீங்களும் உங்கள் குடும்ப உறுப்பினர்களும் குறிப்பிட்ட அளவு இடைவெளிவிட்டு நின்றுகொண்டு குடும்பத்துடன் உடற்பயிற்சியில் ஈடுபடலாம். இது உங்கள் உடலில் உள்ள கலோரிகளை எரிக்க உதவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

creative ways to get moving when you are stuck at home during the lockdown

Here are creative ways to get moving when you are stuck at home during the lockdown.
Story first published: Thursday, March 26, 2020, 14:06 [IST]
Desktop Bottom Promotion