For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க உடல் எடைய டக்குனு குறைக்க...கடலை மாவுல செய்யும் இந்த 5 உணவுகள சாப்பிட்டா போதுமாம்...!

|

கடலை மாவு பெசன் என்றழைக்கப்படுகிறது. பெசன் எடை இழப்புக்கு ஒரு அற்புதமான உணவு. பெசன் அல்லது கடலை மாவு எப்போதும் நம் அம்மாக்கள் மற்றும் பாட்டிகளுக்கு மிகவும் பிடித்தது. இதில், எளிதாக ஆரோக்கியமான உணவை சமைக்கலாம். அதனால், இந்திய வீடுகளில் பெசனுக்கு ஒரு தனி மரியாதை உண்டு. இது காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவிற்கான பல சமையல் குறிப்புகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமான புரதம் நிறைந்த இந்த கடலை மாவை பல சுலபமாக சமைக்கக்கூடிய சமையல் குறிப்புகளைக் கொண்டுள்ளது.

பீசனில் நார்ச்சத்து, இரும்பு, பொட்டாசியம், பாஸ்பரஸ், ஃபோலேட், தயாமின், தாமிரம், துத்தநாகம் மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இக்கட்டுரையில் எளிதாக செய்யக்கூடிய பெசன் ரெசிபிகளின் செய்முறை குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எடை இழப்புக்கு கடலை மாவு உதவுமா?

எடை இழப்புக்கு கடலை மாவு உதவுமா?

கடலை மாவு எடை இழப்புக்கு நல்லது. ஏனெனில் இது குறைந்த அளவிலான கிளைசெமிக் குறியீட்டின் காரணமாக கலோரிகளை வேகமாக எரிக்கிறது. மேலும், இதில் கரையக்கூடிய நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது இதய நோய், நீரிழிவு மற்றும் பல மருத்துவ பிரச்சனைகளின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.

பெசன் சில்லா

பெசன் சில்லா

ஒரு பாத்திரத்தில் இரண்டு மேசைக்கரண்டி கடலை மாவை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். கடலை மாவு மற்றும் தண்ணீர் கலவையை தொடர்ந்து கிளறி, ஒரு தோராயமான மாவு நிலைத்தன்மை வரும் வரை கிளற வேண்டும். உப்பு, மிளகு, அஜ்வைன், சிவப்பு மிளகாய், விருப்பமான காய்கறிகள் மற்றும் விருப்பமான மசாலாப் பொருட்களை அதில் சேர்க்கவும். பின்னர், மாவை 10 நிமிடங்கள் அப்படியே ஊறவிடவும். மிதமான தீயில் ஒரு கடாயை சூடாக்கி, அதில் சிறிது வெண்ணெய் அல்லது நெய் அல்லது எண்ணெயை தடவவும். வாணலியில் ஒரு லேடில் மாவை ஊற்றி, நீங்கள் விரும்பும் அளவுக்கு பரப்பவும். ஒரு பக்கம் வெந்ததும் புரட்டவும். இருபுறமும் 5 நிமிடங்கள் சமைக்கவும். இப்போது சூடாக சாப்பிடுங்கள்.

தோக்லா

தோக்லா

ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, உப்பு, சர்க்கரை, சிட்ரிக் அமிலம் மற்றும் மஞ்சள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும். இந்த கலவையில் தண்ணீர் சேர்த்து, நடுத்தர நிலைத்தன்மைக்கு கொண்டு வாருங்கள்.

சூடான பாத்திரத்தில் சிறிது எண்ணெய் தடவவும். ஒரு சிறிய கிளாஸில் பேக்கிங் பவுடரை எடுத்து அதில் தண்ணீர் ஊற்றவும். கடலை மாவுடன் கலவையைச் சேர்த்து, வேகவைத்த பாத்திரத்தில் மாவை ஊற்றவும்.

கடலை மாவை 15 நிமிடம் ஆவியில் வேகவைத்து பின் இறக்கவும். ஆறியதும் துண்டுகளாக நறுக்கி சாப்பிடவும்.

பெசன் டோஸ்ட்

பெசன் டோஸ்ட்

வழக்கமான சிற்றுண்டிக்கு இது ஒரு சுவையான திருப்பமாக இருக்கும். ஒரு பாத்திரத்தில் உங்கள் விருப்பப்படி கடலை மாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்களை எடுத்துக் கொள்ளவும். இதனுடன் தண்ணீரைக் கலந்து, மெல்லிய நிலைத்தன்மை கொண்ட மாவை உருவாக்கவும். மாவில் கட்டிகள் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

பிரவுன் ரொட்டியை இரண்டு துண்டுகளாக வெட்டி, மாவுக்குள் நனைக்கவும். பின்னர், தோசைக்கல் அல்லது எண்ணெயில் போட்டு எடுத்து சூடாக சாப்பிடலாம்.

கேட்டே கி சப்ஜி

கேட்டே கி சப்ஜி

ஒரு பாத்திரத்தில் கடலை மாவு எடுத்து அதனுடன் மஞ்சள்தூள், ஜீரா, அஜ்வைன், தானியா தூள் மற்றும் உப்பு சேர்க்கவும். இந்த கலவையில் தயிர் மற்றும் எண்ணெய் சேர்க்கவும். எல்லாவற்றையும் சரியாகக் கலந்து, மெதுவாக தண்ணீர் சேர்த்து மாவில் பிசையவும். ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்கவைத்து, தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன், பேசன் மாவை மெல்லிய குச்சிகளாக உருட்டி, கொதிக்கும் நீரின் உள்ளே நனைக்கவும், இதனால் அவை சரியாக சமைக்கப்படும். அவை வேகவைத்து சமைத்தவுடன், அவற்றை வடிகட்டவும். பின்னர், வேறொரு பாத்திரத்தில் வெங்காயம், இஞ்சி மற்றும் பூண்டு விழுது மற்றும் மசாலாப் பொருட்களுடன் உங்கள் கிரேவியை தயார் செய்யவும். குழம்பு தயாரானதும், கேட் எனப்படும் சமைத்த பீசனை கிரேவியில் சேர்த்து சிறிது நேரம் சமைக்கவும்.

காந்த்வி

காந்த்வி

இது மற்றொரு சூப்பர் ஈஸியான பெசன் ரெசிபி. 1:3 என்ற விகிதத்தில் பீசன் மற்றும் மோர் எடுத்துக் கொள்ளவும். பச்சை மசாலாப் பொருட்களின் சுவை உங்களுக்குப் பிடித்திருந்தால் மாவில் இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் விழுதைச் சேர்க்கவும், இல்லையெனில் இவற்றைச் சேர்ப்பதைத் தவிர்க்கலாம். மாவை ஒரு பாத்திரத்தில் மாற்றி, மாவு கெட்டியாகும் வரை சமைக்கவும். மாவை தொடர்ந்து கிளறவும். மாவு கெட்டியானதும், ஒரு தட்டில் நெய் அல்லது எண்ணெய் தடவவும். தட்டில் மாவை பரப்பவும். அதை தட்டு முழுவதும் பரப்பவும், இதனால் நீங்கள் சிறிய மெல்லிய ரோல்களை உருவாக்கலாம். அதை ஆறவைத்து கொத்தமல்லி அல்லது தேங்காய் துருவல் கொண்டு அலங்கரித்து சாப்பிடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Besan is a wonder food for weight loss in tamil

Here we are talking about the Besan is a wonder food for weight loss in tamil.
Story first published: Thursday, May 12, 2022, 12:30 [IST]