For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டயட்டே இல்லாமல் உங்கள் எடையை குறைக்க இந்த பொருட்களை உங்கள் உணவில் சேர்த்து கொண்டால் போதுமாம்...!

உடல் எடையை குறைக்க பல டயட் முறைகள் பின்பற்றப்படுகிறது. ஆனால் டயட் இல்லாமலே எடையை குறைக்கவும் வாய்ப்புள்ளது.

|

எடை அதிகரிப்பு என்பது இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்கும் ஒரு பிரச்சினையாகும். ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் அதிகரித்த எடையை குறைக்க பலரும் படாதபாடு பட்டுக்கொண்டிருக்கின்றனர். உடல் எடையை குறைக்க பல டயட் முறைகள் பின்பற்றப்படுகிறது. ஆனால் டயட் இல்லாமலே எடையை குறைக்கவும் வாய்ப்புள்ளது.

Non-Diet Foods That Help You Lose Weight

உண்மைதான், சில டயட்டில் இல்லாத ஆரோக்கிய உணவுகளை எடுத்துக் கொள்வது உங்களை விரைவாக இயற்கையான முறையில் எடையை குறைக்க உதவும். இந்த பதிவில் உங்கள் எடையை குறைக்க உதவும் டயட்டில் இல்லாத உணவுகள் என்னென்னெ என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
யோகர்ட்

யோகர்ட்

உங்களின் எடை குறைப்பிற்கான கடுமையான முயற்சிகளை காலை உணவின் மூலம் விரட்டுங்கள். இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் காலை நேரத்தில் யோகர்ட் சாப்பிடுவது எடை குறைப்பிற்கு உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இதிலிருக்கும் நல்ல பாக்டீரியாக்கள் உங்கள் குடல் அமைப்புகளை ஒழுங்குபடுத்துகிறது, மேலும் எடை அதிகரிப்பை கட்டுப்படுத்துகிறது. சிறந்த முடிவுகளுக்கு இனிப்பு சுவையில்லாத சாதாரண யோகார்டில் பழங்கள் சேர்த்து சாப்பிடவும்.

பெர்ரிஸ்

பெர்ரிஸ்

நீங்கள் இனிப்பான பொருட்கள் மூலம் எடையை குறைக்க விரும்பினால் அதற்கு சிறந்த தேர்வு பெர்ரிகள்தான். இந்த பழங்கள் ஆண்டோசயினின்கள் எனப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட்களால் நிரம்பியுள்ளன. ஓர் நாளைக்கு அரைகப் பெர்ரி சாப்பிடுவது உங்களின் எடையை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள போதுமானது. பெர்ரிகள் கிடைக்கவில்லை என்றால் திராட்சை சாப்பிடலாம்.

காலிபிளவர்

காலிபிளவர்

தினமும் சாப்பிட பரிந்துரைக்கப்படும் காய்கறிகள் மற்றும் பழங்களில் காலிபிளவர் கண்டிப்பாக இருக்கும். மாவுச்சத்து இல்லாத இந்த காய்கறியை அதிகம் சாப்பிடுவது உங்களின் எடையை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதில் நேரடி தொடர்புடைது. உங்கள் எடையை வேகமாக குறைக்க உங்கள் மற்ற உணவுகளுடன் இதனையும் சேர்த்துக் கொள்ளவும்.

டோஃபு

டோஃபு

உடல் எடையை குறைக்க உதவும் உணவுகளின் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது இதுதான். இதனை தொடர்ந்து சாப்பிடுவது உங்களின் 2.5 கிலோ வரை எடை குறைக்க உதவும். இதற்கு முக்கியக் காரணம் இதிலிருக்கும் அதிகளவு புரோட்டினும், குறைவாக இருக்கும் கலோரியும்தான். சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு இது மிகவும் சிறந்த உணவாகும்.

MOST READ: மனுநீதியின் படி கணவன்-மனைவி உறவில் அவர்கள் மீறும் இந்த சத்தியங்கள் அவர்கள் வாழ்க்கையை சிதைக்கும்...!

கிரேப் ப்ரூட்

கிரேப் ப்ரூட்

குறைந்த கலோரிகள் இருக்கும் இந்த பழத்தை ஒவ்வொருமுறை சாப்பிடும்போதும் உணவுடன் சேர்த்துக் கொள்வது நல்லது. உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு அதிக கலோரிகள் எப்பொழுதும் அவசியமாகும். இருப்பினும் உங்கள் உணவில் அடிக்கடி சிட்ரஸ் பழங்களை சேர்த்து கொள்வது நல்லது. ஒவ்வொரு உணவிற்கு முன்னரும் அரை கிரேப் ப்ரூட் சாப்பிடுபவர்கள் 3 கொலோ வரை குறைக்கலாம்.

வால்நட்

வால்நட்

பாதாம், முந்திரி போன்றவை அதிகளவு ஊட்டச்சத்துக்கள் இருக்கும் பொருட்களாகும். ஆனால் அவற்றில் இருக்கும் கொழுப்பு மற்றும் கலோரிகள் காரணமாக அதனை அதிகம் சாப்பிடாமல் இருக்கிறோம். ஆனால் அதனை பற்றி நீங்கள் பயப்படத் தேவையில்லை. ஆய்வுகளின் படி தினமும் சிறிது கொட்டை வகை தானியங்களை எடுத்துக் கொள்வது உங்களை உடல் பருமன் மற்றும் டைப் 2சர்க்கரை நோயிலிருந்து பாதுகாக்கும்.

தண்ணீர்

தண்ணீர்

இது மிகவும் சிறந்த தேர்வல்ல என்று உங்களுக்கு தோன்றலாம். ஏனெனில் இதனை பற்றி நீங்கள் அதிகம் கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால் H2O உங்களின் எடையை ஆரோக்யமாக பராமரிக்க உதவும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. உடலில் நீரின் அளவு குறைவாக இருப்பவர்களுக்கு உடல் பருமன் அதிகரிக்கும் வாய்ப்பு அதிகமுள்ளதாக ஆய்வுகள் கூறுகிறது. அதற்காக நீங்கள் அதிக தண்ணீர் குடிக்க வேண்டுமென்ற அவசியமில்லை, உங்கள் உடலில் இருக்கும் நீரின் அளவு குறையாத அளவிற்கு குடித்தால் போதும்.

பருப்பு

பருப்பு

பருப்பு வகைகளான பீன்ஸ், சுண்டல், பயிறு வகைகளை தினமும்ஒருவேளை உணவில் சேர்த்து கொள்பவர்கள் விரைவில் அவர்கள் எடையை குறைக்கலாம் என்று ஆய்வுகள் கூறுகிறது. டயட் இல்லாமலேயே தினமும் இதனை சாப்பிடுபவர்கள் குறிப்பட்ட அளவு எடையை குறைக்கலாம், மேலும் இது நமது உடல் கொழுப்புகளை உறிஞ்சுவதைத் தடுக்கிறது.

MOST READ: இந்த வீட்டு வைத்தியங்கள் ஆபத்தை மட்டும்தான் ஏற்படுத்தும்... தெரியாம கூட ட்ரை பண்ணிராதீங்க...!

ஆலிவ் எண்ணெய்

ஆலிவ் எண்ணெய்

தினமும் ஆலிவ் எண்ணெயில் சமைத்த உணவை சாப்பிடுபவர்களின் எடை குறிப்பிட்ட அளவு குறைவதாக ஆய்வுகள் கூறுகிறது. ஆலிவ் எண்ணெயில் சமைத்த உணவுகளை சாப்பிடும் போது கலோரிகள் மற்றும் அதிகரிக்கும் எடை பற்றி எந்த கவலையும் படத்தேவையில்லை. உங்கள் உணவுகளில் சில மாற்றங்களை செய்வது உங்களின் எடையை குறைக்க உதவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Non-Diet Foods That Help You Lose Weight

These non diet foods can help you lose weight fast.
Story first published: Thursday, July 18, 2019, 14:41 [IST]
Desktop Bottom Promotion