நடிகை பிரியங்கா சோப்ரா இப்படி ஃபிட்டாக இருப்பதன் ரகசியம் என்ன தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

முன்னாள் உலக அழகியாக இருந்த பிரியங்கா சோப்ரா, முதன்முதலாக திரையுலகில் காலடி எடுத்து வைத்தது தமிழில் தான். பின்பு அவர் பல திரைப்படங்களில் பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து, தன் திறமையை மக்களுக்கு காட்டினார்.

அதிலும் அவர் நடித்து வெளிவந்த மேரிகோம் திரைப்படத்திற்காக பிரியங்கா 45 நாட்கள் கடுமையான பயிற்சியை மேற்கொண்டு, குத்துச்சண்டை வீரருக்கான வலிமையைப் பெற்றார். ஒவ்வொரு முறை ஜிம்மிற்கு செல்லும் முன், அவர் சில வார்ம்-அப் பயிற்சிகளான ஷோடோ பாக்ஸிங், டக் அண்டர், ஜம்ப் ரோப் மற்றும் சில ஸ்ட்ரெட்ச்சிங் பயிற்சிகளை மேற்கொள்வாராம்.

Priyanka Chopra's Top 15 Diet and Fitness Tips

பின் ஹாலிவுட் சென்ற பின் குவாண்டிகோ ஷூட்டிங்கிற்காக பிரியங்கா தனித்துவமான பயிற்சியை வழக்கமாக கொண்டிருந்தார். அதுவும் அவர் தினமும் 15 நிமிடம் த்ரெட்மில்லிலும், 60 நொடிகள் பிளான்க் பயிற்சியையும், 20-25 மிதமான எடையுடன் பைசெப் கர்ல்ஸ் மேற்கொண்டாராம். அதுமட்டுமின்றி, வாரத்திற்கு 4 நாட்கள் 1 மணிநேரம் தொடர்ந்து உடற்பயிற்சியை செய்வாராம்.

இப்படி தனது நடிப்புத் திறமையுடன், தன் தொழில் மீது பற்று கொண்டதால் தான், பிரியங்கா சோப்ரா இன்று தமிழில் இருந்து ஹாலிவுட் வரை செல்ல முடிந்தது. சரி, இவ்வளவு சிக்கென்று எப்போதும் இருக்க பிரியங்கா சோப்ரா அப்படி என்ன டயட் மற்றும் உடற்பயிற்சியை மேற்கொள்கிறார் என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சரிவிகித டயட்

சரிவிகித டயட்

பிரியங்கா எப்போதும் சிம்பிளான மற்றும் சரிவிகித டயட்டை தான் மேற்கொள்வாராம். உடலின் மெட்டபாலிசத்தை சீராக வைத்துக் கொள்ள மற்றும் எப்போதும் சுறுசுறுப்புடன் இருப்பதற்கு 2 மணிநேரத்திற்கு ஒருமுறை எதையேனும் சாப்பிடுவாராம்.

விருப்பமான உணவு

விருப்பமான உணவு

உணவுகளின் மீதுள்ள நாட்டத்தைக் குறைக்கவும், கட்டுப்பாட்டுடன் இருக்கவும், வாரத்திற்கு ஒரு நாள் விருப்பமான உணவுகளை உண்பாராம். வாரம் முழுவதும் டயட் இருந்து, ஒரு நாள் விருப்பமான உணவை உண்பதில் தவறில்லை என்றும் அவர் கூறுகிறார்.

நீர்

நீர்

பிரியங்கா சோப்ரா நாள் முழுவதும் நிறைய நீர் குடிப்பாராம். மேலும் உடலுக்கு போதுமான நீர் கிடைத்தால் தான், உடல் வறட்சி அடையாமல், உடலும் சருமமும் ஆரோக்கியமாக இருக்கும் என்றும், அதை தவறாமல் அவர் செய்வதாகவும் கூறுகிறார்.

வறுத்த உணவுகள்

வறுத்த உணவுகள்

எண்ணெயில் பொரித்த அல்லது வறுத்த உணவுகளை சாப்பிடுவதற்கு பதிலாக, வீட்டில் சமைத்த உணவைத் தான் எப்போதும் உண்பாராம். வீட்டு உணவை தினமும் உண்பதால் சந்தோஷமும், ஆரோக்கியமும் கிடைப்பதாக பிரியங்கா கூறுகிறார்.

ஊட்டச்சத்துள்ள உணவுகள்

ஊட்டச்சத்துள்ள உணவுகள்

நற்பதமான, ஆரோக்கியமான மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த பல்வேறு உணவுகளையே எப்போதும் தேர்ந்தெடுத்து உண்பாராம். வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் சாப்பிடுவாராம்.

இளநீர்

இளநீர்

ஒவ்வொரு இரண்டு மணிநேரத்திற்கு ஒருமுறையும், ஒரு டம்ளர் இளநீர் மற்றும் ஒரு கையளவு நட்ஸ் சாப்பிடுவாராம். ஒவ்வொரு வேளை உணவின் போதும், அத்துடன் அத்தியாவசிய ஃபேட்டி அமிலங்கள் நிறைந்த உணவுகளை எடுப்பதன் மூலும், எடை குறைவதோடு, பசியும் தணியும் என்று கூறுகிறார்.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி

நீங்கள் இயற்கையாகவே ஒல்லியாக இருந்து, எளிதில் உடல் எடை அதிகரிக்காமல் இருப்பவராயின், வாரத்திற்கு 3-4 நாட்கள் குறைந்தது 45 நிமிடம் உடற்பயிற்சியை செய்ய வேண்டுமென பிரியங்கா கூறுகிறார்.

எடையை வேகமாக இழக்க

எடையை வேகமாக இழக்க

உடல் எடை வேகமாக அதிகரிப்பவர்கள், தினமும் ஜிம்மில் 45 நிமிடம் - 1 மணிநேரம் வரை உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் மற்றும் ஊட்டச்சத்துள்ள டயட்டையும் உட்கொள்ள வேண்டும். அதுவும் வாரத்திற்கு 6 நாட்கள் இம்மாதிரி அவசியம் பின்பற்ற வேண்டும் எனவும் பரிந்துரைக்கிறார்.

யோகா

யோகா

பிரியங்காவைப் பொறுத்த வரை, அவரது ஸ்லிம்மான உடலுக்கும், வலிமையான தசைகளுக்கும் யோகா தான் காரணம் என கூறுகிறார். மேலும் இவர் வாரத்தில் 2 நாட்கள் யோகா மற்றும் எடை தூக்கும் பயிற்சியையும் மேற்கொள்வாராம்.

உடலை புரிந்து கொள்ளுங்கள்

உடலை புரிந்து கொள்ளுங்கள்

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான உடல் அமைப்பு. எனவே அதற்கேற்ப திட்டம் தீட்டி உடற்பயிற்சியையும் உணவையும் தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டியது அவசியம் எனவும் பிரியங்கா கூறுகிறார்.

பிராணயாமம்

பிராணயாமம்

யோகாவில் மூச்சுப் பயிற்சியான பிராணயாமம் பயிற்சியை மேற்கொள்வது மிகவும் நல்லது என பிரியங்கா கூறுகிறார். இந்த பயிற்சியால் உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் ஆக்ஸிஜன் கிடைத்து, உடலியக்கம் முறையாக செயல்படும். முக்கியமாக இதயத்திற்கு மிகவும் நல்லது.

தியானம்

தியானம்

பிரியங்கா தனது டென்சன் மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்க உதவுவது தியானம் என்று கூறுகிறார். இவர் தினமும் தவறாமல் தியானத்தில் ஈடுபடுவாராம். இதனால் மனதில் உள்ள எதிர்மறை ஆற்றல், எண்ணங்கள், கவலை மற்றும் பதற்றம் நீங்கி, சந்தோஷமான வாழ்க்கைக்கு உதவுவதாக கூறுகிறார்.

உடற்பயிற்சியை தவிர்க்க வேண்டாம்

உடற்பயிற்சியை தவிர்க்க வேண்டாம்

பிரியங்கா எக்காரணம் கொண்டும் உடற்பயிற்சி செய்வதைத் தவிர்க்கமாட்டாராம். இதனால் தினமும் செய்து வரும் உடற்பயிற்சியால் கிடைக்கும் பலன்கள் பாதிக்கப்படுமாம்.

குறைவான இரவு உணவு

குறைவான இரவு உணவு

எப்போதும் இரவு நேரத்தில் தேவையான அளவு மட்டும் உட்கொண்டால், இரவில் நிம்மதியான தூக்கம் கித்து, செரிமான மண்டலத்திற்கு கொடுக்கப்படும் அழுத்தமும் குறையும். பிரியங்கா சோப்ரா எப்போதும் இரவு நேரத்தில் சூப், கிரில்டு சிக்கன் போன்றவற்றை தான் உட்கொள்வாராம்.

ரிலாக்ஸ்

ரிலாக்ஸ்

எப்போதும் ஃபிட்டாகவும், சந்தோஷமாகவும் இருக்க வேண்டுமானால், மனம் மற்றும் உடலுக்கு ரிலாக்ஸ் அளிக்க வேண்டும். அதற்கு புத்தகங்களைப் படிக்கலாம், பிடித்த திரைப்படங்களைப் பார்க்கலாம் அல்லது பிடித்த இசையைக் கேட்கலாம். பிரியங்கா இந்த வழியைத் தவறாமல் பின்பற்றுவதும், அவரது ஃபிட்னஸ் ரகசியங்களுள் ஒன்று என கூறுகிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Priyanka Chopra's Top 15 Diet and Fitness Tips

Priyanka Chopras gorgeous look and a stunning figure is due to her strict workout and diet regime. Read on to know Priyanka Chopras top 15 diet and fitness tips.
Story first published: Tuesday, January 2, 2018, 10:30 [IST]