ஆண்களே! சிக்ஸ் பேக் வைப்பதற்கான சில எளிய ரகசிய குறிப்புகள் இதோ!

Posted By:
Subscribe to Boldsky

ஒவ்வொரு ஆணுக்கும் சிக்ஸ் பேக் வைக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆனால் சிக்ஸ் பேக் வைப்பதென்பது அவ்வளவு எளிதல்ல. அதற்கு சரியான டயட்டுடன், உடற்பயிற்சியையும் மேற்கொண்டு வர வேண்டியது அவசியம். குறிப்பாக ஒரு நாளும் தவறாமல் சோர்ந்து போகாமல், அந்த டயட்டையும், உடற்பயிற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

Secret Tips To Get 6 Pack Abs, That Actually Work!

தமிழ் போல்ட் ஸ்கை சிக்ஸ் பேக் வைக்க நிபுணர்கள் கூறும் சில ரகசிய குறிப்புக்களைக் கொடுத்துள்ளது. சிக்ஸ் பேக் வைக்க முடியாவிட்டாலும், அசிங்கமாக தொங்கும் தொப்பையையாவது குறைக்கலாம். சரி, இப்போது சிக்ஸ் பேக் வைக்க உதவும் அந்த இரகசிய குறிப்புக்களைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 டிப்ஸ் #1

டிப்ஸ் #1

சிக்ஸ் பேக் வைப்பதற்கான முதல் விதி வலுவான ஆற்றல் மனதிலும் உடலிலும் வேண்டும். இதனால் தினமும் சோர்ந்து போகாமல் உடற்பயிற்சியில் ஈடுபட முடியும். ஆகவே முதலில் மனம் மற்றும் உடலில் ஆற்றலை அதிகரித்துக் கொள்ளுங்கள்.

டிப்ஸ் #2

டிப்ஸ் #2

சிக்ஸ் பேக் வைப்பதற்கான மற்றொரு டிப்ஸ், பளு தூக்குதல் மற்றும் அடிவயிற்றிற்கான உடற்பயிற்சிகளை கலந்து செய்ய வேண்டும்.

டிப்ஸ் #3

டிப்ஸ் #3

சிக்ஸ் பேக் வைக்க மற்றொரு சிறந்த வழி, பாடி பில்டிங்கின் விதிமுறைகளை நன்கு தெரிந்தவர்களை தேர்ந்தெடுத்து, அவர்களது உதவியுடன் முயற்சியுங்கள்.

டிப்ஸ் #4

டிப்ஸ் #4

சிக்ஸ் பேக் வைக்க புரோட்டீன் நிறைந்த உணவுகளை அன்றாட உணவில் சேர்ப்பது மிகவும் முக்கியமானது. அதிலும் முட்டை, பால், கொண்டைக்கடலை, ஆளி விதை போன்றவற்றை சாப்பிடுவது சிக்ஸ் பேக் வைக்க மிகவும் உதவியாக இருக்கும்.

டிப்ஸ் #5

டிப்ஸ் #5

ஊட்டச்சத்து நிபுணர் அல்லது மருத்துவரின் பரிந்துரையின் பேரில் வே புரோட்டீன் ஷேக்கை குடித்தால், தசைகளின் வளர்ச்சி ஊக்குவிக்கப்படும்.

டிப்ஸ் #6

டிப்ஸ் #6

சிக்ஸ் பேக் வைக்க முயலும் போது, உடற்பயிற்சிக்கு முன் மற்றும் உடற்பயிற்சிக்கு பின்னான உணவுகள் மிகவும் இன்றியமையாதது. ஆகவே உடற்பயிற்சிக்கு பின் புரோட்டீன் நிறைந்த உணவுகளை தவறாமல் சாப்பிட வேண்டும். மேலும் உடற்பயிற்சிக்கு முன் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை உட்கொண்டால், உடற்பயிற்சி செய்ய உடலுக்கு போதிய ஆற்றல் கிடைக்கும்.

டிப்ஸ் #7

டிப்ஸ் #7

அடிவயிற்று பயிற்சிகளான க்ரஞ்சஸ் மற்றும் ப்ளாக்ஸ் உடற்பயிற்சிகளை ஒரு வாரத்தில் குறைந்தது 3-4 முறை செய்ய வேண்டும். அதிலும் சிக்ஸ் பேக் வைக்க வேண்டுமானால், 30 நிமிடம் இந்த உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Secret Tips To Get 6 Pack Abs, That Actually Work!

Have a look at some of the secret tips that can help you gain 6 pack abs.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter