For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடலை ஏற்றி இறக்க ஐ படத்திற்காக விக்ரம் மேற்கொண்ட டயட்!

|

விக்ரம் என்றாலே உழைப்பு, நடிப்பிற்காக உயிரை கேட்டாலும் இந்த மனிதன் கொடுத்துவிடுவானோ என ரசிகர்கள் எண்ணுவதுண்டு. கெட்டப்பை மாற்றுகிறேன் என்று மீசை, தாடி வைத்துக் கொள்ளும் நடிகர்களுக்கு மத்தியில் தன் உடலை முழுவதுமாய் வருத்திக் கொண்டு நடிக்கும் மகா கலைஞன்.

சிக்ஸ் பேக் வைப்பதற்கு நடிகர் சூர்யா மேற்கொண்ட டயட் இதுதாங்க...

ஐ படத்திற்காக விக்ரமிற்கு தேசிய விருது கிடைக்கவில்லை என பலரும் தங்கள் கருத்தை முறையாகவும், சிலர் கோபமாகவும் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஐ-யில் விக்ரமை கண்டு அனைவரும் வியந்ததற்கு முக்கிய காரணம். தன் உடல் எடையை சரசரவென விக்ரம் ஏற்றி இறக்கி வித்தை காட்டியது.

பாடி பில்டர் போன்ற உடற்கட்டு பெற எப்படி உணவுப் பழக்கம் பின்பற்ற வேண்டும்!!!

ஒரு கிலோ உடல் எடை குறைக்கவே அனைவரும் திக்குமுக்காடி போக , அப்படி என்ன டயட் இருந்து விக்ரம் உடல் எடையை குறைத்தார் என்பதை இனிக் காணலாம்.....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வியக்க வைத்த விக்ரம்

வியக்க வைத்த விக்ரம்

ஐ படம் விக்ரமின் சினிமா வாழ்வில் மிக முக்கியமான படம். அதற்காக அவர் உழைத்த விதம் திரை பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரையும் வியக்க வைத்தது. பாடி பில்டர், மாடல், கூனன் என மூன்று விதமான பாத்திர மாற்றங்களுக்கு ஏற்ப உடலை மொத்தமாக உருமாற்றி நடித்திருந்தார்.

ஸ்டெராய்ட் ?

ஸ்டெராய்ட் ?

வெறும் மூன்று மாதம் தான் ஷூட்டிங் செல்ல நேரம் இருந்ததால், முதலில் ஸ்டெராய்ட் எடுத்துக் கொள்ள சிலர் கூறியும் வேண்டாம் நானே பயிற்சி செய்கிறேன் என மூன்று மாதங்கள் சரியான தூக்கம் இல்லாமல் பாடி பில்டர் கெட்டப்பிற்கு பயிற்சி செய்திருந்தார் விக்ரம்.

வொர்க் அவுட்

வொர்க் அவுட்

மாடல் தோற்றத்திற்கு உடல் சற்று மெலிந்திருக்க வேண்டும். ஆனால், முகம் புத்துணர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதால் ஏற்றிய உடலை டயட் மூலமாக குறைக்க ஆரம்பித்தார் விக்ரம். அதுவும் இரண்டே மாதத்தில்.

ஆப்பிள், முட்டை

ஆப்பிள், முட்டை

பொதுவாக நாம் மூன்று வேளை உண்ணும் வழக்கம் கொண்டிருப்போம். விக்ரம் ஐ படத்தின் போது 15 வேளை சாப்பிடும் முறையை பின்பற்றி இருக்கிறார். ஒரு வேளை சாப்பாடு என்பது வெறும் பாதி ஆப்பிள் தானாம். அதன் பிறகு ஒரு முட்டையின் வெள்ளைக் கரு. மூணாவது வேளைக்கு வாழைத்தண்டு ஜூஸ். இது தான் விக்ரம் ஒரு நாளுக்கு சாப்பிட்ட அதிகபட்ச உணவு.

கலோரிகள்

கலோரிகள்

தினமும் நாம் சாப்பாடு மூலமாக 1,500 கலோரி உட்கொண்டு, உழைப்பு, உடற்பயிற்சி மூலமா 1,000 கலோரிகளை கரைப்போம். மீத கலோரிகள் கொழுப்பாக மாறி உடலில் தேங்கிவிடும். ஆனால், விக்ரம் உணவு மூலமாக 1,000 கலோரி உட்கொண்டு. ஜிம், சைக்கிளிங் என்று 2,000 கலோரிகளுக்கு மேல் கரைத்துள்ளார். இதனால் தான் அவரால் சிறிய காலக்கட்டத்தில் அவ்வளவு உடல் எடை குறைக்க முடிந்தது.

உடல் எடை குறைப்பு

உடல் எடை குறைப்பு

இந்தளவு கடின டயட்டை பின்பற்றி ஏறத்தாழ 53 கிலோ வரை உடல் எடையை குறைத்தார் விக்ரம். மேலும், மூன்று கிலோ குறைத்து 50 கிலோ வரை குறைக்க முயற்சிக்கிறேன் என தனது பயிற்சியாளரிடம் கேட்டாராம் விக்ரம்.

பயிற்சியாளர் ஆலோசனை

பயிற்சியாளர் ஆலோசனை

50 கிலோ வரை உடல் எடையை குறைப்பது ஏதேனும் உடலுறுப்பு செயலிழப்பு ஏற்பட காரணமாகிவிடும் என பயிற்சியாளர் மற்றும் மருத்துவர்கள் கூறவே அந்த முயற்சியை அரைமனதுடன் கைவிட்டுவிட்டார் விக்ரம்.

கூனன்

கூனன்

'கூனன்' உடல் வாகுக்கு ஷங்கர் கூறியதை விட, ஏன் ஷங்கர் கூறாத அளவிற்கு உடல் எடையை குறைத்துக் கொண்டு போய் நின்று அசத்தினார் விக்ரம்.

விக்ரமே விருதுதான்

விக்ரமே விருதுதான்

நடிகர் விவேக் கூறியது போல, விக்ரமிற்கு தேசிய விருது கிடைக்கவில்லை என யாரும் வருந்த வேண்டாம். ஏனெனில், விக்ரம் அதுக்கும் மேல.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Vikram's Diet For The Moive I, Revealed

Vikram's Diet For The Moive I, Revealed, read here in tamil.
Desktop Bottom Promotion