For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

14 நாட்களில் வயிற்று கொழுப்பை குறைக்க வேண்டுமா ? இதோ உங்களுக்கான 9 உடற்பயிற்சிகள்

வயிற்று கொழுப்பை குறைப்பதற்கு இந்த எளிய உடற்பயிற்சிகளை வீட்டிலேயே முயற்சி செய்யவும்.இந்த கட்டுரையை படிப்பதன் மூலம் இயற்கையான முறையில் வயிற்று கொழுப்பை குறைப்பதற்கான வழிகளை தெரிந்து கொள்ளலாம்.

By Arunkumar P.m
|

நீங்கள் இந்த உடற்பயிற்சிகளை பற்றி தெரியாதவராக இருந்தால் , இந்த கட்டுரையின் மூலம் வயிற்று கொழுப்பை குறைக்கும் எளிய வழிகளை கற்றுக்கொள்ளலாம்.

இந்த பயிற்சிகளின் மூலம் இயற்கையான வழியில் உடல்பருமனை குறைக்க முடியும்.தொடர்ந்து இந்த உடற்பயிற்சிகளை மேற்கொண்டால் தேவையற்ற கொழுப்புகள் குறைந்து வயிறு சமமான தோற்றத்தை பெற்று விடும்.

burn bellyb fat in 14 days with exercise

மேலும் இந்த கட்டுரையை படிப்பதன் மூலம் வீட்டிலேயே வயிற்று கொழுப்பை குறைக்கும் உடற்பயிற்சிகளை பற்றிய குறிப்புகளை அறிந்து கொள்ள முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1 . 'பட்டர்ப்ளை கிரென்ச்' :

1 . 'பட்டர்ப்ளை கிரென்ச்' :

வானத்தை பார்த்தவாறு உள்ளங்கால்களை ஒன்றாக சேர்த்து தரையில் படுக்க வேண்டும்.

முழங்கால்கள் இரண்டும் பக்கவாட்டில் சமமாக தரைமட்டத்தில் இருக்க வேண்டும். கைகளை தலையின் பின்புறம் வைத்து வயிற்று பகுதியை உயர்த்தி கால்களை நோக்கி மடக்க வேண்டும்.

மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும்.இந்த பயிற்சியை பத்து முறை செய்து பார்க்க வேண்டும்.

2 . 'சைடு டூ சைடு ' :

2 . 'சைடு டூ சைடு ' :

வானத்தை பார்த்து படுத்து முழங்கால்களை மடக்க வேண்டும். கைகள் இரண்டும் பக்கவாட்டில் இருக்க வேண்டும். மூச்சை இழுத்து விட்டபடி வலது கையை வலது கால் நோக்கி கொண்டு செல்ல வேண்டும்.

பின்னர் இயல்பு நிலைக்கு திரும்பியவுடன் இதே பயிற்சியை இடதுபுறம் செய்ய வேண்டும்.இந்த பயிற்சியை தொடர்ந்து பதினைந்து முறை செய்து பார்க்க வேண்டும்.

3 . 'ப்ரண்ட் பிளான்க்' :

3 . 'ப்ரண்ட் பிளான்க்' :

முழங்கைகளையும் கால்களையும் உபயோகப்படுத்தி தரையை பார்த்தவாறு படுக்க வேண்டும்.பின்னர் கீழ் நோக்கி உடலை தாழ்த்தி கால்களை அகலமாக விரிக்க வேண்டும்.

இதனை செய்யும் போது முதுகுப்பகுதி நேராகவும்,இடுப்பு மேல்நோக்கியும் ,கழுத்து லகுவாகவும் இருக்க வேண்டும்.இந்த நிலையில் மூன்று நொடிகள் இருக்க வேண்டும்.இந்த முறையை பத்துமுறை செய்ய வேண்டும்.

 4 .'பிங்கர் டூ டோ ':

4 .'பிங்கர் டூ டோ ':

இந்த பயிற்சி வயிற்று சதையை குறைப்பதற்கான சிறந்த பயிற்சியாகும். மேல்நோக்கி படுத்து கால்களை நேராக வைத்து வானத்தை நோக்கி உயர்த்த வேண்டும்.

பின்னர் கைகளை கால் விரல்களை நோக்கி உயர்த்தி மூச்சினை விட வேண்டும். இந்த பயிற்சியை இரண்டு வகைகளாக பதினைந்து முறை செய்ய வேண்டும்.

5 . 'சிசர்ஸ்' :

5 . 'சிசர்ஸ்' :

இந்த பயிற்சியானது வீட்டிலேயே வயிற்று சதையை குறைப்பதற்கு உதவுகிறது.மேலே பார்த்தவாறு படுத்து கால் விரல்களை தலையின் பின்புறம் வைத்துக்கொள்ள வேண்டும்.

இடதுமுழங்கையை உயர்த்தி வலது முழங்காலை தொட வேண்டும்.பின்னர் பழைய நிலைக்கு வந்து, வலது முழங்கால் மூலம் இதே பயிற்சியை செய்ய வேண்டும்.பின்னர் இதனை இருபுறமும் மாற்றி பதினைந்து முறை செய்ய வேண்டும்.

6 .'ரிவர்ஸ் க்ரன்ச் வித் ரெஸிஸ்ட்னஸ் பேண்ட்ஸ்' :

6 .'ரிவர்ஸ் க்ரன்ச் வித் ரெஸிஸ்ட்னஸ் பேண்ட்ஸ்' :

மேலே பார்த்தவாறு படுத்து கால்முட்டிகளை மடக்கி வைக்கவும். முழங்காலுக்கும் கணுக்காலுக்கும் இடையே கைப்பட்டையை நன்கு சுற்றி அதன் இரு முனைகளை கைகளால் பற்றிக்கொள்ளவும்.

இடுப்புப்பகுதி தரையில் இருந்து உயரும் வரை முழங்கால்களை உயர்த்த வேண்டும். இரண்டு பகுதிகளாக இந்த பயிற்சியை பத்துமுறை மேற்கொள்ள வேண்டும்.

7 . 'நீ அப்ஸ் ' :

7 . 'நீ அப்ஸ் ' :

பின்தாங்கியுடன் உள்ள இரண்டு இருக்கைகளுக்கு இடையில் நின்று கொள்ள வேண்டும். படிப்படியாக முழங்கால்களை உடலின் நடுப்பகுதிக்கு உயர்த்த வேண்டும்.

இந்த பயிற்சியை மூன்று பகுதிகளாக பதினைந்து முறை செய்ய வேண்டும்.வயிற்று கொழுப்பை குறைக்க இது ஒரு சுலபமான உடற்பயிற்சியாகும்.

8 . 'லெக் ஸ்விங்ஸ்' :

8 . 'லெக் ஸ்விங்ஸ்' :

மேலே பார்த்தவாறு படுத்து கால்களை உயர்த்த வேண்டும். கையை பக்கவாட்டில் வைத்துகொள்ள வேண்டும்.கால்களை இடதுபுறமாக தரையில் இருந்து ஐந்து இன்ச் அளவிற்கு தாழ்த்த வேண்டும்.

பின்னர் பழைய நிலைக்கு வந்து,அதே பயிற்சியை வலதுபுறமும் செய்ய வேண்டும்.சுமார் பதினைந்து முறை இந்த பயிற்சியை தொடர வேண்டும்.

 9 . ' பால் லெக் லிப்ட் ' :

9 . ' பால் லெக் லிப்ட் ' :

கைகளை தரையில் ஊன்றி கீழ்நோக்கி பார்த்தவாறு படுக்க வேண்டும்.கால்களை ஒரு பந்தின் மேல் வைத்துக்கொள்ள வேண்டும். மெதுவாக வலது காலினை இரண்டு அல்லது மூன்று இன்ச் மேல்நோக்கி உயர்த்த வேண்டும்.

சுமார் மூன்று நொடிகள் அந்த நிலையில் இருக்க வேண்டும். பின்னர் அடுத்த கால் மூலம் இந்த பயிற்சியை செய்ய வேண்டும். இந்த சிறப்பான உடற்பயிற்சியின் மூலம் வயிற்று கொழுப்பை விரைவாக குறைக்க முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

burn bellyb fat in 14 days with exercise

Do you want to reduce belly fat in 14 days. try these exercises,
Story first published: Friday, December 16, 2016, 14:24 [IST]
Desktop Bottom Promotion