For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரித்திக் ரோஷன் தன் தொப்பையைக் குறைத்து எப்படி சிக்ஸ் பேக் வைத்தார் தெரியுமா?

இங்கு ரித்திக் ரோஷன் தன் தொப்பையைக் குறைத்து எப்படி சிக்ஸ் பேக் வைத்தார் என்று கொடுக்கப்பட்டுள்ளது.

|

பல மில்லியன் பெண்களுக்கு ரித்திக் ரோஷன் மீது பைத்தியம் பிடிப்பதற்கு காரணம் அவரது ஃபிட்டான உடலமைப்பு தான். ஆனால் அதைப் பெற அவர் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார் என்று உங்களுக்குத் தெரியுமா? ரித்திக் ரோஷனை சிக்ஸ் பேக் இல்லாமல் பார்த்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் படம் ஒன்றிற்காக சிக்ஸ் பேக் வைக்காமல் ஓரளவு தொப்பையுடன் இருந்தார்.

'தி ராக்' போல உடற்கட்டு வேண்டுமா? அப்போ அவரோட ஃபிட்னஸ் ரகசியத்த தெரிஞ்சுக்குங்க!!!

அப்படத்திற்கு பின் ஒருசில உடைகளை போதாமல் போக, தன் உடலை மீண்டும் ஃபிட்டாக வைத்துக் கொள்ள ஃபிட்னஸ் நிபுணர் கிரிஸ் கெதின் (Kris Gethin) அவர்களின் உதவியுடன், மீண்டும் சிக்ஸ் பேக் வைத்தார். ஒருவர் தன் உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள பின்பற்ற வேண்டியது, சரியான உடற்பயிற்சியுடன், உணவுகளும் தான்.

முதன்முறையாக 10 பேக் வைத்து அசர வைத்த நடிகர் ஷாருக்கானின் டயட் ரகசியங்கள்!!!

எனவே நீங்களும் உங்கள் தொப்பையைக் குறைத்து ஃபிட்டாக இருக்க வேண்டுமெனில், கீழே கொடுக்கப்பட்டுள்ளதை முதலில் பின்பற்றுங்கள். குறிப்பாக இவை சிக்ஸ் பேக் வைப்பதற்கு தொப்பையைக் குறைக்க மேற்கொள்ளும் அடிப்படை உடற்பயிற்சிகள்.

ஜப்பானிய மக்கள் தொப்பை இல்லாமல் இருப்பதன் ரகசியம் தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிட்-அப்ஸ்

சிட்-அப்ஸ்

கால்களை அகல வைத்துக் கொண்டு, ஒரு 7-10 கிலோ எடைக்கல்லை இருக்கைகளால் முன்புறம் பிடித்துக் கொண்டு, முதுகை வளைக்காமல் அப்படியே உட்கார்ந்து எழ வேண்டும். இம்மாதிரி 12 முறை என 3 செட்டுகள் செய்ய வேண்டும்.

க்ரஞ்சஸ் (Crunches)

க்ரஞ்சஸ் (Crunches)

உங்களுக்கு சிட்-அப்ஸ் செய்வதற்கு வசதியாக இருக்கும் போது, சற்று சவாலான உடற்பயிற்சிகளான க்ரஞ்சஸ் மேற்கொள்ள ஆரம்பியுங்கள். அதுவும் தரையில் படுத்துக் கொண்டு, கைகளை தலைக்கு பின் வைத்துக் கொண்டு, முழங்கால்களை மடக்கி, முன் உடலை மேலே தூக்க வேண்டும். இப்படி ஒரு செட்டிற்கு 12 என்ற வீதம் 3 செட் செய்து வர வேண்டும். 2 நாட்களுக்குப் பின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டு இப்பயிற்சியை மேற்கொள்ளுங்கள். இதனால் அடிவயிற்றில் உள்ள கொழுப்புக்கள் கரையும்.

லெக் லிப்ட்ஸ் (Leg Lifts)

லெக் லிப்ட்ஸ் (Leg Lifts)

ஒரு கம்பியில் தொங்கிக் கொண்டு, முழங்கால்களை மடக்கி, மார்பகத்தை தொடும் வகையில் தூக்க வேண்டும் அல்லது கால்களை மடக்காமல், இடுப்பளவில் கால்களை முன்னோக்கித் தூக்க வேண்டும். இது ஒரு ஆப்ஸ் உடற்பயிற்சி மற்றும் இப்படி செய்வதன் மூலம் இடுப்பைச் சுற்றியுள்ள கொழுப்புக்கள் குறையும்.

உடலைத் தாங்குதல்

உடலைத் தாங்குதல்

இந்த உடற்பயிற்சிக்கு புஷ்-அப் போன்று படுத்துக் கொண்டு, கைகளால் உடலைத் தாங்காமல், முழங்கையால் உடலைத் தாங்க வேண்டும். அப்படி தாங்கும் போது, உடலும், காலும் ஒரே நேராக இருக்க வேண்டும். இந்நிலையில் 1 நிமிடம் என 3 முறை செய்து வந்தால், வயிற்றில் இருக்கும் கொழுப்புக்கள் கரையும்.

அளவுக்கு அதிகமாக வேண்டாம்

அளவுக்கு அதிகமாக வேண்டாம்

தொப்பையை வேகமாக குறைக்க வேண்டுமென்று, ஆர்வக்கோளாறில் அளவுக்கு அதிகமாகவோ அல்லது நீண்ட நேரமோ உடற்பயிற்சியில் ஈடுபடுவதை முதலில் தவிர்க்க வேண்டும்.

குறிப்பு

குறிப்பு

இப்படி அன்றாடம் செய்து வந்தால், நீங்களும் ரித்திக் ரோஷன் போன்று சிக்ஸ் பேக் உடலுடன் அழகாகத் திகழலாம். ஏனெனில் இவரும் இப்படி சிம்பிளான உடற்பயிற்சிகளைத் தான் எப்போதும் அன்றாடம் பின்பற்றுவார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How Hrithik Roshan Came Out from Belly Fat and Made Six Packs?

Do you know How Hrithik Roshan Came Out from Belly Fat and Made Six Packs? Read more to know...
Desktop Bottom Promotion