For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டயட் மேற்கொள்வதற்கு முன் அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டியவை!!!

|

டயட்டில் பல வகை இருக்கின்றது. அதில் உங்களுக்கு எது பொருந்தும், உங்களுக்கு எந்த டயட் பயனளிக்கும் என்று அறிந்துக் கொண்டு அந்த டயட்டை மேற்கொள்ள வேண்டியது அவசியம். நிறைய பேர் அவர்களது நண்பருக்கு அந்த டயட் நல்ல பயனளித்தது, உறவினருக்கு அந்த டயட் நல்ல பலனளித்தது என்று டயட்டை மேற்கொண்டு அதனால் எந்த பலனும் கிடைக்கவில்லை என்று கூறுவது உண்டு.

நீங்கள் கட்டாயம் நம்பக்கூடாத சில உடல் எடை குறைப்பு டிப்ஸ்...

உங்கள் உடல் நிலை, உடல் நலம் பற்றி முதலில் ஓர் நல்ல மருத்துவரிடம் கலந்தாய்வு செய்த பிறகு, உங்களின் உடல் எடையை குறைக்க உங்கள் உடல் நலத்தை பாதிக்காத வண்ணம் எந்த டயட் பயனளிக்கும் என்று கேட்டறிந்து அந்த டயட்டில் இறங்குவது தான் சிறந்த முறை என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்....

30 நாட்களில் உடல் எடையைக் குறைக்க வேண்டுமா? அப்ப இத ஃபாலோ பண்ணுங்க...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அனைவருக்கும் பொருந்தாது

அனைவருக்கும் பொருந்தாது

ஒரே டயட் அனைவருக்கும் பலனளிக்காது என்பதை நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும். உங்கள் நண்பர், உறவினருக்கு அது பலனளித்தது என்று நீங்களும் முயற்சிக்கலாம் ஆனால், அது உங்களுக்கு பயனளிதிருக்காது. ஏனெனில், உங்கள் உடல்நிலை மற்றும் நீங்கள் எடுத்துக் கொள்ளும் மருந்துகளின் திறனுக்கு ஏற்ப டயட்டை மேற்கொள்ள வேண்டியது அவசியம். அனைவரது உடல்நிலையும் ஒரே மாதிரியானது அல்ல. டயட் மற்றும் உடற்பயிற்சி இரண்டுக்கும் இது பொருந்தும்.

சரியாக திட்டமிடுங்கள்

சரியாக திட்டமிடுங்கள்

உங்களது உடல்நலத்தை முதலில் கருத்தில் கொள்ளுங்கள். அதற்கு ஏற்ப எப்படி, எந்த அளவில் டயட்டில் இறங்க வேண்டும் என்று முடிவு செய்யுங்கள். உடல்நலம் சரியில்லாமல் கடுமையான டயட்டை மேற்கொள்வது உங்கள் உடல்நலத்தை மென்மேலும் பாதிப்படைய வைக்கும்.

நீங்கள் மேற்கொள்ளும் டயட் சரியானதா?

நீங்கள் மேற்கொள்ளும் டயட் சரியானதா?

ஊட்டச்சத்து நிபுணரிடம் கலந்தாய்வு செய்த பிறகு டயட்டை மேற்கொள்வது தான் சிறந்த முறையாகும். இணையத்தில், புத்தகத்தில் நீங்கள் படிக்கும் டயட் அனைத்தும் பயனுள்ளதாக தான் இருக்கும். ஆனால், அது உங்கள் உடல்நிலைக்கு ஏற்றதா என்று தெரிந்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

உங்கள் தேவை என்ன ?

உங்கள் தேவை என்ன ?

உங்கள் உடல் பருமன், உடல்நிலை எப்படி, எந்த அளவு இருக்கிறது அதற்கு ஏற்ப எந்த டயட் மேற்கொள்ள வேண்டும் என்று யோசியுங்கள். 100, 150, 90 அனைத்துமே உடல் பருமன் தான் ஆனால், எந்த எடைக்கு எந்த வகையான, எவ்வளவு கால இடைவெளியில் நீங்கள் உடல் எடை குறைக்க எண்ணுகிறீர்கள், உங்களது தேவை என்ன என்று கருத்தில் கொண்டு அதற்கு ஏற்ப டயட்டை மேற்கொள்ளுங்கள்.

வேறேதேனும் தேவை?

வேறேதேனும் தேவை?

அனைவருக்கும் ப்ரோடீன் பவுடர் போன்ற துணை பொருட்களின் அவசியம் இருக்காது. ஆனால், நிறைய பேர் அவர்களது நண்பர் உட்கொண்டு பயன்பெற்றார் என்று இவர்களும் உட்கொள்வார்கள். இது தேவையற்றது, உண்மையாகவே உங்களுக்கு அதன் உதவி அல்லது பயன் தேவைப்பட்டால் மட்டும் உட்கொள்ளுங்கள். இல்லையேல், விட்டுவிடுங்கள். ஏனெனில், இவற்றின் மூலம் பக்க விளைவுகள் ஏற்படும் அபாயங்கள் இருக்கின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Five Things You Should Consider Before Going On A Diet

Here we are going to see about the five things everyone should consider before going on a diet, in tamil.
Desktop Bottom Promotion