விராத் கோலியின் 1௦ உடற்திறன் இரகசியங்கள்.

Posted By: viswa
Subscribe to Boldsky

உலகக் கோப்பை இந்திய அணியில் தற்போது நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் வீராத் கோலியின் சிறப்பு தன்மையே அவரது உடல் வலிமை தான். முதல் விக்கெட்டிற்கு களமிறங்கினாலும் கடைசி வரை நிலைத்து விளையாடும் அதிரடி ஆட்டக்காரர் என்ற சிறப்பிற்கு சொந்தகாரர் வீராத் கோலி. சிறு வயதிலேயே இருபதற்கும் மேற்பட்ட சதங்கள் அடித்து இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் மட்டுமல்லாது இந்தி நடிகை அனுஷ்கா ஷர்மாவின் மனத்திலும் இடம் பிடித்தவர் நமது இந்திய கிரிக்கெட் அணியின் நட்சித்திர வீரர் வீராத் கோலி. பவலியனில் அனுஷ்கா ஷர்மா அமர்ந்திருந்தால் போதும், இவர் எதிர்கொள்ளும் அனைத்து பந்துகளும் பவுன்டரிகளைத் தாண்டும்.

உலகக் கோப்பையில் பங்குபெறும் அனைத்து அணி பந்து வீச்சாளர்களையும் அச்சுறுத்தும் வகையிலாக இவரது பேட்டிங் இருக்கும் என இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இவரது இந்த அதிரடியான ஆட்டம் மற்றும் பீல்டிங் போன்றவைகளுக்குக் காரணாமாய் இருப்பது இவரது உடல்திறன் தான். அப்படி என்னதான் நமது இந்திய நட்சித்திர பேட்ஸ்மேன் வீராத் கோலியின் உடல்திறன் இரகசியம் என தெரிந்துக்கொள்ள வேண்டுமா? தொடர்ந்து படியுங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வாரம் தோறும் உடற்பயிற்சி

வாரம் தோறும் உடற்பயிற்சி

வீராத் கோலியின் உடற்திறன் இரகசியத்தில் முதலாவதாக இருப்பது, அவர் வாரம் தோறும் 5 நாட்கள் தடையில்லாது செய்யும் உடற்பயிற்சிகள். முக்கியமாக அவர் கார்டியோ உடற்பயிற்சிகளும் மேற்கொள்வது அவருக்கு நல்ல உடற்தகுதியை அளிப்பதாக ஓர் பேட்டியில் கூறியுள்ளார்.

ஓய்வு

ஓய்வு

5 நாட்கள் உடற்பயிற்சியில் ஈடுப்படும் வீராத் கோலி அதேப் போல வாரத்தில் இரண்டு நாட்கள் ஓய்வெடுக்கிறார். என்ன தான் உடற்பயிற்சி செய்தாலும். அதற்கு ஏற்ப உடலுக்கு ஓய்வும் அளிப்பது அவசியம். அதை நன்கு புரிந்து செய்கிறார் வீராத் கோலி.

கெட்டப் பழக்கங்கள் இல்லை

கெட்டப் பழக்கங்கள் இல்லை

வீராத் கோலியிடம் இருந்து அவரது ரசிகர்கள் கற்றுக்கொள்ளவேண்டிய விஷயம் என்னவெனில், கெட்டப் பழக்கங்களை கைவிடுவது. வீராத் கோலிக்கு புகை மற்றும் மது போன்ற தீயப் பழக்கங்கள் அறவே கிடையாது. களத்தில் ஆக்ரோஷமாக இருந்தாலும் ஒழுக்கத்துடனும் செயல்பட கூடியவர் கோலி.

உணவு கட்டுப்பாடு

உணவு கட்டுப்பாடு

விராட் கோலிக்குப் பிடித்தாமான உணவு நானும் சிக்கனும் ஆகும். இவர் தேவைப்படும் அளவிலான கலோரிகளுக்கு ஏற்ப உணவை உட்கொள்வதை தனது உணவுக் கட்டுப்பாடாய் வைத்துள்ளார். இது அனைவருக்கும் பொருத்தமான உடல்கட்டுப்பாடாக இருக்கிறது.

கலோரிகள்

கலோரிகள்

சிலர் உணவு அதிகமாக உட்கொண்டால் அதற்கு ஏற்ப உடற்பயிற்ச்சி செய்யமாட்டார்கள். இது தவறான அணுகுமுறை ஆகும். நாம் உட்கொள்ளும் உணவுகளுக்கு ஏற்ப உடற்பயிற்சி செய்வது அவசியம். இல்லையெனில், கலோரிகள் கொழுப்பாக மாறி குடைச்சல் தர ஆரம்பித்துவிடும். வீராத் கோலி இதை சரியாக கடைபிடிக்கிறார். கலோரிகளை கொழுப்பாக மாறவிடாது சரியாக உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக வைத்துள்ளார் வீராத் கோலி.

இரவு உணவு

இரவு உணவு

இரவு நேரங்களில் கடின உணவுகளை வீராத் கோலி தொடுவதே இல்லை. அதே போல வீண் தின்பண்டங்களையும் ஒதுக்கிவிடுகிறார் வீராத். இது வீராத் கோலியின் உடற்திறனை அதிகரிக்க உதவுகிறது.

தண்ணீர்

தண்ணீர்

உடலில் நீர் அளவை கட்டுக்கொள் வைக்க தினமும் நிறைய நீர் பருகுகிறார் வீராத் கோலி. இந்த பழக்கத்தை அவர் ஒருநாளும் தவறவிடுவதில்லை.

விளையாட்டு

விளையாட்டு

உடற்திறன் அதிகரிக்க இவர் உடற்பயிற்சி மட்டுமில்லாது தினமும் கிரிக்கெட், வாலிபால் மற்றும் கால்பந்து போன்ற விளையாட்டுகளிலும் ஈடுப்படுகிறார். இது அவருக்கு நல்ல உடற்திறனை அளிப்பதாகவும் சோர்வு அடையாமல் இருக்கவும் உதவுவதாகவும் கூறுகிறார் வீராத் கோலி.

கவனம்

கவனம்

இதை அனைத்தையும் தாண்டி அவர் நன்கு களத்தில் நின்று விளையாட உதவியாக இருப்பது, ஆட்டத்தின் மேல் அவருக்கு உள்ள அவரது கவனமும், ஒருமுகமும் என வீராத் கோலி கூறியுள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

10 Fitness Secrets Of Virat Kohli

here you can know about the 10 fitness secrets of virat kohli.
Story first published: Wednesday, February 11, 2015, 12:50 [IST]