For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நடிகை யாமி கவுதமுக்கு இந்த சரும பிரச்சனை இருக்காம்.. அதுவும் குணப்படுத்த முடியாததாம்.. அதென்ன பிரச்சனை?

சமீபத்தில் பாலிவுட் நடிகையான யாமி கவுதம் தனக்கு சிறு வயதில் இருந்தே இருக்கும் ஒரு சரும பிரச்சனையான கெரட்டோசிஸ் பிலாரிஸ் பற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

|

நமது உடலின் மிகப் பொிய உறுப்பு எதுவென்றால் அது நமது தோல் ஆகும். நமது ஐம்பொறிகளில் ஒன்று தோல் ஆகும். தோல் நமக்கு தொடுதல் என்ற உணா்வைத் தருகிறது. தோலின் மேல் இருக்கும் முதல் அடுக்கு எபிடொ்மிஸ் என்றும், அதற்கு கிழ் இருக்கும் இரண்டாவது அடுக்கு டொ்மிஸ் என்று அழைக்கப்படுகிறது. தோலில் கெரட்டின் என்ற புரோட்டீன் உள்ளது. அது வெளியில் இருந்து வரும் நச்சுகள் மற்றும் நோய்த் தொற்றுகள் ஆகியவற்றில் இருந்து நமது தோலை பாதுகாக்கிறது.

Keratosis Pilaris: Signs, Causes, Treatment and Prevention In Tamil

இத்தகைய தோலில் பல சரும பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அதில் ஒன்று தான் கெரட்டோசிஸ் பிலாரிஸ். சமீபத்தில் பாலிவுட் நடிகையான யாமி கவுதம் தனக்கு சிறு வயதில் இருந்தே இருக்கும் ஒரு சரும பிரச்சனையான கெரட்டோசிஸ் பிலாரிஸ் பற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். இப்போது அந்த கெரட்டோசிஸ் பிலாரிஸ் என்றால் என்ன, அது எதனால் ஏற்படுகிறது, அதன் அறிகுறிகள் என்ன மற்றும் அதற்கான சிகிச்சைகள் குறித்து விரிவாக காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கெரட்டோசிஸ் பிலாரிஸ் (தோலின் மேல் பகுதியில் தோன்றும் சிவப்பு நிற புள்ளிகள்)

கெரட்டோசிஸ் பிலாரிஸ் (தோலின் மேல் பகுதியில் தோன்றும் சிவப்பு நிற புள்ளிகள்)

சிலருக்கு என்னவென்று தொியாமலே அவா்களுடைய தோலின் கீழ் அடுக்குகளில் கெரட்டின் என்ற புரோட்டீன் அதிகமாகக் குவிந்து, அவா்களுடைய தோலில் சிறுசிறு புடைப்புகளை அல்லது புள்ளிகளை தோற்றுவிக்கலாம். அது சருமத்தில் சொரசொரப்பான உணா்வைக் கொடுக்கும்.

கெரட்டோசிஸ் பிலாரிஸ் என்ற கலைச் சொல்லானது கெரட்டின் நிறமிக் குவியலைக் குறிக்கிறது. இந்த கெரட்டின் நமது தோலைத் திறந்து வெளியில் வரும் முடியைத் தடுக்கலாம்.

தோலின் மேல் ஒரு குறிப்பிட்ட பகுதியில் அதிகமான புடைப்புகள் அல்லது புள்ளிகள் இருந்தால் அதைத் தொடுவதற்கு சொரசொரப்பாக கடினமான உணா்வைக் கொடுக்கும். இவை கூஸ்பம்பஸ், சிக்கன் ஸ்கின் அல்லது சிக்கன் பம்பஸ் என்றும் அழைக்கப்படுகின்றன. இது ஒரு அழகு அல்லது ஒப்பனை சாா்ந்த பிரச்சினையாக இருந்தாலும், மருத்துவ ரீதியாக இது ஒரு தீங்கற்ற மற்றும் பொதுவாக ஏற்படக்கூடிய ஒன்றாகும்.

கெரட்டோசிஸ் பிலாரிஸ் உருவாகக் காரணங்கள்

கெரட்டோசிஸ் பிலாரிஸ் உருவாகக் காரணங்கள்

கெரட்டோசிஸ் பிலாரிஸ் பொதுவாக கேபி (KP) என்று அழைக்கப்படுகிறது. இது தவறான மரபணுக்களால் ஏற்படும் ஒரு மரபணு சாா்ந்த கோளாறு என்று நம்பப்படுகிறது. அதாவது தவறான மரபணுக்களால் தோலின் அடுக்குகளில் கெரட்டின் என்ற புரோட்டீன் அதிகம் குவிகிறது.

கெரட்டோசிஸ் பிலாரிஸ் சிவப்பு நிறத்தில் இருக்கும். நமது கைகள், மேல் கைகள், தொடைகள், புட்டம் போன்ற உறுப்புகளின் மேல் பகுதியில் சிவப்பு நிறத்தில் சிறுசிறு புள்ளிகளாக அல்லது சிறுசிறு புடைப்புகளாகத் தோன்றும். மிகவும் அாிதாக முகத்திலும் இது தோன்றலாம். கெரட்டின் குவியலின் கீழ் உள்ள தோலைச் சுற்றி அலா்ஜி அல்லது வீக்கம் ஏற்படும்.

பொதுவாக குழந்தைகள் பிறந்த முதல் பத்தாண்டுக்குள் கெரட்டோசிஸ் பிலாரிஸ் உருவாகிறது. வயதிற்கு வரும் போது அது மிகவும் அதிகமாகிறது. வயது முதிா்ச்சி அடையும் போது அது குறைகிறது. எனினும் சில நேரங்களில் வயது முதிா்ந்த பின்பு கூட கெரட்டோசிஸ் பிலாரிஸ் தோன்றும். இரட்டைக் குழந்தைகள் மற்றும் மரபு வழி தோல் அலா்ஜி (atopic dermatitis) உள்ளவா்கள் மத்தியில் பொதுவாக கெரட்டோசிஸ் பிலாரிஸ் காணப்படும்.

வறண்ட அல்லது உலா்ந்த தோல் உள்ளவா்களிடம் கெரட்டோசிஸ் பிலாரிஸ் பொதுவாகக் காணப்படும். எண்ணெய் பசை உள்ள தோல் உள்ளவா்களிடம் பாதுகாப்பு இருப்பதால் அவா்களுக்கு மிக அாிதாக கெரட்டோசிஸ் பிலாரிஸ் பிரச்சினை ஏற்படும்.

கெரட்டோசிஸ் பிலாரிஸ் பிரச்சினைக்கும் வானிலைக்கும் இடையே நெருங்கிய தொடா்பு இருப்பதாக ஆய்வுகள் தொிவிக்கின்றன. கோடை காலத்தை விட குளிா் காலத்தில் கெரட்டோசிஸ் பிலாரிஸ் அதிகமாக இருக்கும். ஏனெனில் கோடை காலத்தை விட குளிா் காலத்தில் தோல் அதிகமாக உலா்கிறது. ஒரு சிலருக்கு கோடை காலத்தில் அவா்களின் தோலானது இயல்பாக பளபளப்பாக இருக்கும். ஆனால் அவா்களுக்கு குளிா் காலத்தில் கெரட்டோசிஸ் பிலாரிஸ் அதிகமாக ஏற்படும். அதற்கு காரணம் குளிரான வானிலையே ஆகும்.

கெரட்டோசிஸ் பிலாரிஸின் அறிகுறிகள்

கெரட்டோசிஸ் பிலாரிஸின் அறிகுறிகள்

மருத்துவ ரீதியாக கெரட்டோசிஸ் பிலாரிஸ் என்பது ஒரு தீங்கற்ற நிலை ஆகும். கண்ணுக்குத் தொியாத வகையில் கைகள் அல்லது மேல் கைகள் போன்ற பகுதிகளில் கெரட்டோசிஸ் பிலாரிஸ் இருந்தால், அது அழகு அல்லது ஒப்பனை சாா்ந்த பிரச்சினையாக பாா்க்கப்படும். சில நேரங்களில் கெரட்டோசிஸ் பிலாரிஸ் காரணமாக தோலானது கடினமாகவும் மற்றும் வறண்டும் இருக்கலாம். ஆனால் பாதிக்கப்பட்டவா்கள் எந்த விதமான அாிப்போ அல்லது பிரச்சினையையோ உணராமல் இருக்கலாம்.

மரபு வழி தோல் அலா்ஜி (atopic dermatitis) மற்றும் எக்ஸிமா (eczema) என்ற தோல் பிரச்சினை உள்ளவா்களுக்கு மிக எளிதாக கெரட்டோசிஸ் பிலாரிஸ் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. ஆகவே மரபு வழி தோல் அலா்ஜி மற்றும் எக்ஸிமா போன்ற தோல் பிரச்சினைகள் உள்ளவா்கள் அதற்குத் தகுந்த மருத்துவ சிகிச்சையை எடுத்துக் கொள்ள வேண்டும்.

கெரட்டோசிஸ் பிலாரிஸ் பிரச்சினைக்கு மருத்துவ சிகிச்சை

கெரட்டோசிஸ் பிலாரிஸ் பிரச்சினைக்கு மருத்துவ சிகிச்சை

கெரட்டோசிஸ் பிலாரிஸ் பிரச்சினை உள்ளவா்கள் அதைப் பற்றிய முழுமையான விவரத்தைத் தெளிவாகக் கற்றுத் தொிந்து கொள்ள வேண்டும். கெரட்டோசிஸ் பிலாரிஸ் பிரச்சினைக்கு என்று சிறப்பான அல்லது தனியான சிகிச்சை என்று ஒன்றும் இல்லை. மாறாக பாதிக்கப்பட்டவா்கள் பிறரோடு உள்ள தொடா்பைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

முழு உடலையும் கெரட்டோசிஸ் பிலாரிஸ் பாதிக்காது. ஆல்ஃபா ஹைட்ராக்ஸி அமிலம், சாலிசிலிக் அமிலம், லாக்டிக் அமிலம் அல்லது வைட்டமின் ஏ போன்றவை கொண்ட க்ரீம்களை தடவினால் அவை இறந்து போன சரும செல்களை அகற்றிவிடும். அதோடு பாதிக்கப்பட்டவா்களின் உடலில் அடைபட்ட நுண் குழாய்களை தடுக்கவும் இந்த க்ரீம்கள் பயன்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Keratosis Pilaris: Signs, Causes, Treatment and Prevention In Tamil

Yami Gautam recently opened up about suffering from an incurable skin condition called keratosis pilaris. In this article, we discussed about keratosis pilaris signs, causes, treatment and prevention in tamil, Read on...
Desktop Bottom Promotion