For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இரவு நேரத்துல 'இத' மட்டும் நீங்க செஞ்சா... பளபளன்னு மின்னும் பொலிவான சருமத்தை பெறலாமாம்!

|

சருமத்தை நன்கு கவனித்துக்கொள்ளுவது மிகவும் முக்கியம் அதுவும் இரவுநேரங்களில் சருமத்தை நன்கு பார்த்துக்கொள்ள வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் மட்டும் செலுத்தாமல், சரும ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டியது மிக அவசியம். உங்கள் முகத்தில் ஏற்படும் சரும பிரச்சனைகளை போக்குவதற்கு நீங்கள் தினமும் உங்கள் சருமத்தை கவனித்துக்கொண்டாலே போதும். குறைபாடற்ற சருமத்தைப் பெற, நீங்கள் ஒரு இரவு தோல் பராமரிப்பு வழக்கத்தை கடைபிடிக்க வேண்டும். ஏனெனில், பொலிவான மற்றும் அழகான சருமத்தைப் பெற, தினசரி இரவு தோல் பராமரிப்பு முறை முக்கியமானது.

வெளிப்புற மாசுக்கள் மற்றும் மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை காரணமாக, உங்கள் தோல் சில சமயங்களில் மோசமடைந்து மந்தமாகத் தோன்றும். ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் இரவு தோல் பராமரிப்பு வழக்கத்துடன், தோல் செல்கள் தங்களை மீட்டெடுக்க சருமத்தை சரிசெய்யத் தொடங்குகின்றன. இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள அடிப்படை படிகள் மூலம், இரவு நேர தோல் பராமரிப்பு முறையை பயன்படுத்தி பலனடையுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஏன் இரவு நேரம்?

ஏன் இரவு நேரம்?

பெரும்பாலும் இரவு நேர சரும பராமரிப்பை தான் அழகு நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இரவு தோல் பராமரிப்பு முறையானது சருமத்தை விரைவாக மீட்டெடுப்பதற்கு உத்தரவாதம் அளிக்கிறது. இரவு நேரத்தில் தான் சருமம் தன்னை சீரமைத்துக்கொள்ளும். மேலும் இரவில் தான் செல்கள் புதுப்பிக்கும் அப்போதுதான் முகம் பொலிவு பெரும். ஸ்ட்ரெஸ்ஸினால் முகத்தில் காணப்படும் வயதான தோற்றம், சுருக்கங்கள், ஆகியவை மறைந்து சருமம் ஆரோக்கியமானதாக மாறும்.

மேக் அப்-ஐ அகற்றுங்கள்

மேக் அப்-ஐ அகற்றுங்கள்

படுக்கைக்குச் செல்வதற்கு முன் வெளிப்புற அடுக்கு அழகுசாதனப் பொருட்களை அகற்ற வேண்டும் என்று தொடர்ந்து பரிந்துரைக்கப்படுகிறது. ஆதலால், இரவில் தூங்குவதற்குமுன் கண்டிப்பாக உங்கள் முகத்தில் நீங்கள் போட்டிருக்கும் மேக் அப்-ஐ கண்டிப்பாக அகற்ற வேண்டும். உங்கள் மேக்கப்பை சரியான க்ளீனரைக் கொண்டு வெளியே எடுப்பது சருமப் பராமரிப்புக்கு இன்றியமையாததாக இருக்க வேண்டும்.

டோனர்

டோனர்

மென்மையான மற்றும் ஈரப்பதமூட்டும் சருமத்திற்கு அஸ்ட்ரிஜென்ட் அல்லது டோனரைப் பயன்படுத்தவும். டோனர்கள் கூடுதலாக மண், எண்ணெய்கள் மற்றும் மாசுபாட்டை சுத்தம் செய்ய உதவுகின்றன. ஒரு டோனர் சருமத்தை ஹைட்ரேட் செய்து, துளைகளை சுருக்கி சரி செய்கிறது. நீங்கள் ஒரு பருத்தியில் சிறிது டோனரை ஊற்றி தோலில் மென்மையாக தேய்க்க வேண்டும் அல்லது சமமாக தெறிக்க வேண்டும். ரோஸ் வாட்டர் அல்லது வெள்ளரிக்காய் டோனரை உங்கள் முகத்தில் தெளித்து, உங்கள் முகம் மற்றும் கழுத்து முழுவதும் தடவவும். சிறிது நேரம் உறிஞ்சுவதற்கு அனுமதிக்கவும்.

சீரம்

சீரம்

உங்கள் தோலின் வெளிப்புற அடுக்கைப் பாதுகாக்க சீரம் தடவலாம். உங்கள் சருமத்திற்கு ஏற்ற பயனுள்ள பொருட்களுடன் சீரம் பயன்படுத்த எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். இது சருமத்தை புத்துணர்ச்சியோடும் பொலிவோடும் வைத்திருக்கும். எல்-அஸ்கார்பிக் அமிலத்துடன் ஹைலூரோனிக் அமிலம் கொண்ட முக சீரம் சருமத்திற்கு சிறந்தது.

இயற்கை சரும பொருட்களை பயன்படுத்துங்கள்

இயற்கை சரும பொருட்களை பயன்படுத்துங்கள்

உங்கள் சருமத்தை ஈரப்பதமாக்குவது சமமாக முக்கியமானது. இருப்பினும், சந்தையில் ஏராளமான ஃபேஸ் க்ரீம்கள் ஆர்கானிக் மற்றும் கனிமத்தால் நிரம்பி வழிகின்றன. மஞ்சள், தயிர் போன்ற இயற்கை ஃபேஸ் பேக்குகளை இரவு நேரத்தில் சருமத்தில் நீங்கள் பயன்படுத்தலாம்.

தண்ணீர் குடிக்க வேண்டும்

தண்ணீர் குடிக்க வேண்டும்

உங்கள் முகத்தை சாஃப்ட் மற்றும் ஆரோக்கியமாக வைத்திருக்க முகத்தை நன்கு ஹைட்ரேட் செய்ய வேண்டும். இதற்கு அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் உங்கள் சருமத்திற்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது.

இறுதி குறிப்பு

இறுதி குறிப்பு

இரவு நேரங்களில், மேற்கூறிய அனைத்து ஸ்டெப்புகளையும் பின்பற்றிவந்தால் உங்கள் சருமத்தை ஆரோக்கியமாகவும் எந்த வித பிரச்சனைகளும் வராமல் பொலிவுடன் காத்துக்கொள்ளலாம். இது உங்க சருமத்தை புத்துணர்ச்சியோடும் பளபளப்பாகவும் பொலிவாகவும் மாற்றும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Night skincare regime to get glowing skin in tamil

Here we are talking about the Night skincare regime to get glowing skin in tamil.
Story first published: Friday, March 4, 2022, 16:40 [IST]
Desktop Bottom Promotion