Latest Updates
-
திரிகிரக யோகம் மிதுன ராசியில் உருவாகப்போவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கணவர் வெளிநாடு தப்பிச் செல்வதைத் தடுக்க முடியுமா? சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு பெண்களுக்கு தரும் பாதுகாப்பு என்ன? -
கறிவிருந்து ஸ்டைல் மட்டன் எலும்பு குழம்பு ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வைத்தால் போதும்… வாஸ்து தோஷம் நீங்கி பணவரவு கொட்டும்! -
உங்களை விட 3 மடங்கு அதிக சம்பளம் வாங்குபவரை திருமணம் செய்யாதீர்கள்! உறவில் விரிசல் ஏற்படுத்தும் அந்த ஒரு விஷயம் இதுதான்! -
வார ராசிபலன் (07 ஜூன் 2026 - 13 ஜூன் 2026)- இந்த வாரம் உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? -
உடலுறவு மூலம் துணையை தேர்ந்தெடுக்கும் பெண்கள் முதல் வயதான பெண்ணுடன் உறவு வரை வினோத பாலியல் சடங்கு உள்ள நாடுகள் -
அஞ்சப்பர் ஹோட்டல் வெஜ் பிரியாணி ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
சூரியன்-சுக்கிரன் இணைப்பால் ஜூன் 08-க்கு பின் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சாணக்கிய நீதி படி இப்படிப்பட்டவர்களுக்கு தானம் செய்வது உங்களை ஏழையாக மாற்றுமாம் - ஜாக்கிரதை
உங்க முகம் ஹீரோயின் மாதிரி ஜொலிக்க... வீட்டில் செய்யும் இந்த ஃபேஸ் மாஸ்க்குகளை யூஸ் பண்ணுங்க!
கோடை காலம் வந்தாலே, சரும பிரச்சனைகளும் கூடவே வருகிறது. ஏனெனில், கொளுத்தும் கோடை வெப்பம் உங்கள் சருமத்தில் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும். உங்கள் சருமப் பிரச்சனைகள் அனைத்தையும் தீர்த்து வைக்கும் என போலியான சருமப் பராமரிப்புப் பொருட்களுக்கு அதிக பணம் செலவழிக்க வேண்டாம்.
இதற்கான சரும தயாரிப்புகளையும் பொருட்களையும் வேறு எங்கேயும் நீங்கள் தேட வேண்டாம். ஏனெனில், அவை, உங்கள் சமையலறையிலேயே உள்ளது. பீல்-ஆஃப் மாஸ்க்குகள்(Peel-Off Masks) உங்கள் சருமத்தைப் பாதுகாப்பதற்கும் உங்கள் குறிப்பிட்ட தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் மிகவும் எளிதான வழியாகும்.

எண்ணெய் பசையிலிருந்து முகப்பருக்கள் வரை, சுருக்கங்கள் முதல் வெயிலில் சரும எரிச்சல் ஏற்படுவது வரை, உங்கள் தோல் பிரச்சனைகளை இந்த சமையலறை பொருட்களை கொண்டு சரிசெய்யலாம். பீல்-ஆஃப் மாஸ்க்குகளை வீட்டிலேயே எப்படி தயாரிக்கலாம்? அது உங்களுக்கு எப்படி உதவுகின்றன? என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
எண்ணெய் சருமத்திற்கு கரி பீல் ஆஃப் மாஸ்க்(Peel-Off Masks)
கரி உங்கள் சருமத்திற்கு பல மாயாஜாலங்களை செய்கிறது. இது அதிகப்படியான எண்ணெய் மற்றும் அசுத்தங்களை உறிஞ்சும் திறனுக்காக அறியப்படுகிறது. எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு ஒரு சிறந்த மூலப்பொருளாக கரி இருக்கும். ஆதலால், எண்ணெய் சருமம் உள்ளவர்கள் கரி பீல் ஆஃப் மாஸ்க்கை பயன்படுத்தலாம்.
இந்த மாஸ்க்கை உருவாக்க, ஒரு சிறிய கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி செயல்படுத்தப்பட்ட கரி தூள், ஒரு தேக்கரண்டி பெண்டோனைட் களிமண் மற்றும் ஒரு தேக்கரண்டி சுவையற்ற ஜெலட்டின் ஆகியவற்றை ஒன்றாக கலக்கவும். ஒரு மேசைக்கரண்டி தண்ணீர் சேர்த்து மென்மையான பேஸ்ட் வரும் வரை கலக்க வேண்டும். இந்த பேஸ்ட்டை உங்கள் முகத்தில் தடவி 15-20 நிமிடங்கள் உலர விட்டு, பின்னர் மெதுவாக அதை உரிக்க வேண்டும்.
முட்டையின் வெள்ளைக்கரு பீல் ஆஃப் மாஸ்க்
முட்டையின் வெள்ளைக்கரு புரதத்தின் சிறந்த மூலமாகும். இது சருமத்தை இறுக்கமாக்கவும், முகப்பரு தழும்புகளின் தோற்றத்தை குறைக்கவும் உதவும். முட்டையின் வெள்ளைக்கரு பீல் ஆஃப் மாஸ்க்கை உருவாக்க, முட்டையின் வெள்ளைக்கருவை மஞ்சள் கருவில் இருந்து பிரித்து நுரை வரும் வரை நன்றாக அடிக்க வேண்டும். அதை உங்கள் முகத்தில் தடவி 10-15 நிமிடம் உலர விடவும், பின்னர் அந்த தோலை நீக்க வேண்டும்.
எலுமிச்சை மற்றும் தேன் பீல் ஆஃப் மாஸ்க்
எலுமிச்சையில் வைட்டமின் சி அதிகளவு உள்ளது. இது சருமத்தை பொலிவாக்கவும் கரும்புள்ளிகளின் தோற்றத்தை குறைக்கவும் உதவுகிறது. தேன் ஒரு இயற்கை மாய்ஸ்சரைசர் என்பதால், சருமத்தை மென்மையாக்க உதவுகிறது.
எலுமிச்சை மற்றும் தேன் பீல் ஆஃப் மாஸ்க்கை உருவாக்க, ஒரு சிறிய கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி புதிய எலுமிச்சை சாறு, ஒரு தேக்கரண்டி தேன் மற்றும் ஒரு தேக்கரண்டி சுவையற்ற ஜெலட்டின் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து கலக்க வேண்டும். அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மென்மையான பேஸ்ட் வரும் வரை கலக்கி முகத்தில் தடவ வேண்டும். பின்னர், 20 நிமிடங்கள் கழித்து தோலை உரிக்க வேண்டும்.
காபி பீல் ஆஃப் மாஸ்க் (Peel-Off Masks)
காபி ஒரு இயற்கை ஆக்ஸிஜனேற்றியாகும். இது முன்கூட்டிய வயதாவதைத் தடுக்கவும், வீக்கத்தைக் குறைக்கவும், சருமத்தை பிரகாசமாக்கவும் உதவுகிறது. காபி பீல்-ஆஃப் மாஸ்க்கை உருவாக்க, ஒரு சிறிய கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி நன்றாக அரைத்த காபி தூள், ஒரு தேக்கரண்டி சுவையற்ற ஜெலட்டின் மற்றும் ஒரு தேக்கரண்டி தேன், சிறிதளவு தண்ணீர் ஊற்றி ஒன்றாக கலக்க வேண்டும்.
அந்த பேஸ்ட்டை உங்கள் முகத்தில் தடவி 15-20 நிமிடங்கள் உலர விட்டு, பின்னர் மெதுவாக அதை உரிக்க வேண்டும். இந்த மாஸ்க் உங்கள் சருமத்தை மென்மையாகவும், புத்துணர்ச்சியுடனும் உணர வைப்பது மட்டுமல்லாமல், நேர்த்தியான கோடுகள் மற்றும் சுருக்கங்களின் தோற்றத்தையும் குறைக்க உதவுகிறது.
வெள்ளரிக்காய் பீல் ஆஃப் மாஸ்க்
கொளுத்தும் கோடை வெப்பத்தால் சருமம் அதிகளவு பாதிக்கப்படுகிறது. கோடை வெப்பத்தை சமாளிக்க குளிர்ச்சியான வெள்ளரியை நீங்கள் சருமத்தில் பயன்படுத்தலாம். வெள்ளரிக்காய் ஒரு இயற்கையான குளிரூட்டியாக இருப்பதால், வெயிலால் பாதிக்கப்பட்ட சருமத்தை ஆற்றவும், சரும சிவத்தலைக் குறைக்கவும் உதவும்.
வெள்ளரிக்காய் பீல் ஆஃப் மாஸ்க்கை உருவாக்க, ஒரு சிறிய வெள்ளரிக்காயை அரைத்து மென்மையான பேஸ்ட்டாக உருவாக்க வேண்டும். அதில், ஒரு தேக்கரண்டி சுவையற்ற ஜெலட்டின் சேர்த்து நன்கு கலக்கி, முகத்தில் தடா வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து தோலை உரிக்க வேண்டும்.
பீல்-ஆஃப் மாஸ்க்குகள் உங்கள் சருமத்தை அழகாக ஜொலிக்க வைக்க உதவும் ஒரு சிறந்த வழியாகும். உங்கள் சமையலறையில் காணப்படும் எளிய பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம், உங்கள் குறிப்பிட்ட தோல் வகை அல்லது தோல் பிரச்சனையை சரிசெய்யும் ஃபேஸ் மாஸ்க்குகளை நீங்கள் உருவாக்கலாம். எனவே, எளிதான இந்த பீல்-ஆஃப் மாஸ்க்குகளை பயன்படுத்தி உங்கள் சருமத்தை அழகாக மாற்றுங்கள்.



Click it and Unblock the Notifications

