Latest Updates
-
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா? -
ஆண்களே! உங்க விந்துவை கெட்டிபடுத்தணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவிலிருந்து ரகசியமாக கொண்டுவந்த பொருட்கள் இப்ப கிடைச்சிருக்கு - அதுல என்னென்ன இருக்கு? -
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது! -
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்..
ரோஸ் வாட்டரோடு இந்த பொருட்கள சேர்த்து யூஸ் பண்ணா... அது உங்க முகத்துக்கே ஆபத்தா மாறுமாம்..!
Rose water for skin: பெரும்பலான பெண்கள் தங்கள் அழகு பராமரிப்பு வழக்கத்தில், ரோஸ் வாட்டரை இணைத்துள்ளனர். இது பல்வேறு அழகு நன்மைகளைக் கொண்டுள்ளது. ஆனால் மற்ற அழகுப் பொருட்களைப் போலவே, ரோஸ் வாட்டரையும் சில பொருட்களோடு சேர்த்து பயன்படுத்தக்கூடாது என்பது தெரியுமா?
மிகவும் பிரபலமான வீட்டு வைத்தியங்களில் ஒன்று சருமத்திற்கு ரோஸ் வாட்டரைப் பயன்படுத்துவது. இது பொதுவாக இயற்கையான தோல் டோனராகப் பயன்படுத்தப்படுகிறது. ரோஸ் வாட்டர் சருமத்தை மென்மையாக்குகிறது. சரும துளைகளில் உள்ள மாசு மற்றும் அழுக்குகளை நீக்குகிறது என்பதால் பலர் ரோஸ் வாட்டரை பயன்படுத்துகிறார்கள்.

ஆனால், சில நேரங்களில் அது உங்கள் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும். குறிப்பாக நீங்கள் சில பொருட்களுடன் ரோஸ் வாட்டரை கலக்க முயற்சித்தால், அது உங்கள் சருமத்தில் பிரச்சனையை ஏற்படுத்தலாம். மந்தமான மற்றும் வறண்ட சருமம் உள்ளவர்கள் ரோஸ் வாட்டரை கிளிசரினுடன் கலந்து பயன்படுத்தலாம். ரோஸ் வாட்டருடன் நீங்கள் பயன்படுத்தக்கூடாத பொருட்கள் என்னென்ன என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
ரோஸ் வாட்டரை எப்படி பயன்படுத்துவது?
ரோஸ் வாட்டர் அடிப்படையில் ரோஜா இதழ்களில் இருந்து எடுக்கப்படும் சாறு ஆகும். பெரும்பாலும் எல்லா அழகுக் கடைகளில் ரோஸ் வாட்டர் கிடைக்கும். உங்கள் முகத்தை க்ளென்சர் அல்லது ஃபேஸ் வாஷ் கொண்டு கழுவிய பின், சருமத்திற்கு ரோஸ் வாட்டரைப் பயன்படுத்தலாம். காட்டன் பேடில் சில துளிகள் ரோஸ் வாட்டரை நனைத்து முகம் முழுவதும் பயன்படுத்தவும்.
ரோஸ் வாட்டருடன் மோசமான சேர்க்கைகள்
ரோஸ் வாட்டர் சருமத்திற்கு மிகவும் மென்மையானது. இது உண்மையில் அதிக தீங்கு செய்யாது, ஏனெனில் இது தோலின் அமிலத்தன்மை அளவைக் குறிக்கும் சாத்தியமான ஹைட்ரஜனை (pH) மாற்றாது. ஆனால் பின்வரும் பொருட்களுடன் நீங்கள் ரோஸ் வாட்டரை சேர்த்து பயன்படுத்தினால், அது உங்கள் சருமத்தை பாதிக்கும்.
அத்தியாவசிய எண்ணெயுடன் ரோஸ் வாட்டர்
அத்தியாவசிய எண்ணெயுடன் கூடிய ரோஸ் வாட்டரைப் பெரும்பலான மக்கள் அடிக்கடி பயன்படுத்துகிறார்கள். இது சிலருக்கு வேலை செய்யலாம். ஆனால் உங்களுக்கு வாசனை ஒவ்வாமை இருந்தால் அல்லது உங்களுக்கு ஆஸ்துமா, அடோபிக் டெர்மடிடிஸ் பிரச்சனை இருந்தால், உங்கள் தோல் எதிர்வினையாற்றலாம். எனவே, அத்தியாவசிய எண்ணெய்களுடன் ரோஸ் வாட்டரைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
விட்ச் ஹேசல் கொண்ட ரோஸ் வாட்டர்
விட்ச் ஹேசல் ஒரு இயற்கையான அஸ்ட்ரிஜென்ட் ஆகும். நீங்கள் இதை ரோஸ் வாட்டருடன் இணைக்கும்போது, அது சில நேரங்களில் அதிக வறட்சி அல்லது தோல் எரிச்சலை ஏற்படுத்தும் என்கிறார்கள் நிபுணர்கள். ஆதலால், விட்ச் ஹேசலுடன் ரோஸ் வாட்டரை இணைக்க வேண்டாம்.
பேக்கிங் சோடாவுடன் ரோஸ் வாட்டர்
பேக்கிங் சோடா ஒரு இயற்கை ஆண்டிசெப்டிக் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டதாக அறியப்படுகிறது. நீங்கள் அதை மேற்பூச்சாகப் பயன்படுத்தினால், அது உங்களுக்கு முகப்பரு பிரச்சனையைக் கொடுக்கும் பாக்டீரியாவைக் குறைக்க உதவும். ஆனால் பேக்கிங் சோடாவுடன் ரோஸ் வாட்டரைப் பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் அது உங்கள் சருமத்தின் pH ஐ மாற்றி, சருமத்தை மிகவும் வறண்டதாகவும் உணர்திறன் உடையதாகவும் மாற்றும்.
வினிகருடன் ரோஸ் வாட்டர்
வினிகர் கறைகள் மற்றும் முகப்பருவை குறைக்கவும் தடுக்கவும் உதவுகிறது. ஆனால் ரோஸ் வாட்டருடன் இதைப் பயன்படுத்தினால் உங்கள் சருமத்தின் pH மாறுகிறது. இதனால், நீங்கள் சருமத்தில் எரிச்சலை உணரலாம்.
எலுமிச்சை சாறுடன் ரோஸ் வாட்டர்
வைட்டமின் சி நிறைந்த எலுமிச்சை சாறு சில நேரங்களில் முகப்பரு சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது. எலுமிச்சை சாறுடன் ரோஸ் வாட்டரைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இந்த கலவையானது உங்கள் சருமத்தின் pH ஐ மாற்றுவதன் மூலம் தோல் தோற்றத்தை சீர்குலைக்கலாம்.
ரோஸ் வாட்டர் சருமத்திற்கு சிறந்தது. ஆனால் உங்கள் சொந்த வீட்டு வைத்தியத்தை இதனுடன் சேர்த்து கொண்டு வர வேண்டாம். பளபளப்பான சருமத்தை நீங்கள் பெறுவதற்கு பதிலாக அவை உங்கள் சருமத்திற்கு அதிக தீங்கு விளைவிக்கலாம். எனவே, ரோஸ் வாட்டரை பயன்படுத்துவதற்கு முன்பு, சரியான கலவையில் சேர்ப்பதை உறுதி செய்யுங்கள்.



Click it and Unblock the Notifications
