Latest Updates
-
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்..
உங்க முகத்தை சோப்பு போட்டு கழுவுறீங்களா? அப்ப இனிமே அந்த தப்ப பண்ணாதீங்க...என் தெரியுமா?
ஃபேஸ் வாஷை பயன்படுத்தி உங்கள் முகம் முழுவதையும் சுத்தம் செய்யலாம். ஆனால், நீங்கள் இயற்கையான ஃபேஸ் வாஷை பயன்படுத்துகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.
நாம் நம் முகத்தை அழகாகவும் பாதுகாப்பாகவும் பராமரிப்பதற்காக தினமும் சோப்பால் சுத்தம் செய்கிறோம். பெரும்பலான மக்களின் அன்றாட பழக்கமாக இது இருக்கிறது. ஆனால், என்றாவது சோப்பை முகத்தில் பயன்படுத்துவது நல்லதா என்று யோசித்து இருக்கிறீர்களா? உங்கள் முகத்தை கழுவுதல் அல்லது சுத்தப்படுத்துதல் என்பது எந்த ஒரு தோல் பராமரிப்பு வழக்கத்தின் இன்றியமையாத பகுதியாகும். சுத்தமான முகம் உங்கள் சரும துளைகள் அடைக்கப்படாமல் இருப்பதையும், உங்கள் சருமப் பராமரிப்புப் பொருட்கள் சிறப்பாக உறிஞ்சப்படுவதையும், முகப்பரு மற்றும் கரும்புள்ளிகளை ஏற்படுத்தக்கூடிய அழுக்கு, கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்கள் இல்லாமல் உங்கள் சருமம் இருப்பதையும் உறுதி செய்கிறது.

ஆனால் ஒரு சிலர் சோப்பு போட்டு முகத்தை கழுவும் தவறை செய்துவருகிறார்கள். உடலை சுத்தப்படுத்த சோப்பு பயன்படுத்துவது பொதுவான நடைமுறையாக இருந்தாலும், அதைக் கொண்டு முகத்தை கழுவுவது சரியான பராமரிப்பு அல்ல. உங்கள் முகத்தை சோப்பினால் கழுவுவதால் ஏற்படும் பக்க விளைவுகளைப் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

சோப்பு போட்டு முகத்தை கழுவுவது பாதுகாப்பானதா?
உடலிலுள்ள மற்ற பகுதிகளை விட முகத்தில் உள்ள தோல் மிகவும் மென்மையாக இருக்கும். எனவே, சோப்பு உங்கள் முக தோலை எரிச்சலடையச் செய்து, வறண்ட சருமம், அரிப்பு மற்றும் பிரேக்அவுட்கள் போன்ற பிற தோல் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். சோப்பு மட்டுமல்ல, உங்கள் உடலைச் சுத்தப்படுத்த நீங்கள் பயன்படுத்தும் எந்தப் பொருட்களும் உங்கள் முகத் தோலுக்குப் பொருத்தமாக இருக்காது. முகத்திற்கு மென்மையான அமைப்புடன் கூடிய க்ளென்சர் தேவைப்படுகிறது. இது சருமத்திலுள்ள இயற்கையான எண்ணெயை அகற்றாது மற்றும் சருமத்தை மென்மையாகவும் ஈரப்பதமாகவும் வைத்திருக்க உதவும்.

சருமத்திற்கு மிகவும் கடுமையானது
உங்கள் முகத்தை சரியாக சுத்தம் செய்வதற்காக ஒரு சோப்பை நேரடியாக உங்கள் முகத்தில் பயன்படுத்தும்போது, உங்கள் சருமம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. ஏனெனில், உங்கள் முக தோல் மிகவும் மென்மையானது. செயற்கை ரசாயனங்களை கொண்டு தயாரிக்கப்படும் சோப்புகள் உங்கள் சருமத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். உங்கள் முகத்தில் சோப்பை பயன்படுத்திய பிறகு தோல் அரிப்பு மற்றும் எரிச்சலை ஏற்படுத்தலாம்.

வறட்சிக்கு வழிவகுக்கிறது
உங்கள் தோல் அமிலத்தன்மை கொண்டது. ஆனால் பெரும்பாலான சோப்புகள் காரத்தன்மை கொண்டவை. எனவே, சோப்பு பயன்படுத்துவது உங்கள் சருமத்தின் pH சமநிலையை பாதிக்கும். மேலும், சோப்புகளில் கடுமையான இரசாயனங்கள் உள்ளன. அவை உங்கள் சருமத்தை அதன் இயற்கையான ஈரப்பதத்திலிருந்து வெளியேற்றி, அதை இன்னும் வறண்டு, மந்தமானதாக மாற்றும். மிகவும் வறண்ட சருமத்தின் விளைவாக தோலில் வெடிப்புகள் ஏற்படலாம். இது உங்கள் முக அழகையே சீர்குலைக்கும்.

ஃபேஸ் வாஷை பயன்படுத்தலாம்
ஃபேஸ் வாஷை பயன்படுத்தி உங்கள் முகம் முழுவதையும் சுத்தம் செய்யலாம். ஆனால், நீங்கள் இயற்கையான ஃபேஸ் வாஷை பயன்படுத்துகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். சோப்பு மூலம், முகத்தை நன்கு கழுவுவது கடினம். சோப்பைப் பயன்படுத்தும் போது உங்கள் சருமத்தின் பளபளப்பை பொலிவை நீங்கள் இழக்க நேரிடலாம்.

சோப்பு சுகாதாரமற்றது
சோப்பு உங்களை சுகாதாரமாக வைத்திருப்பதாக அனைவரும் நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள். ஆனால், உண்மையில் சோப்பு உங்களை சுத்தமாக வைத்திருக்காது. இது உங்கள் சருமத்தில் நிறைய அழுக்கு மற்றும் பாக்டீரியாக்களை சேகரிக்கும் போக்கைக் கொண்டுள்ளது. அதை நீங்கள் உங்கள் முகத்தில் பயன்படுத்தும்போது, அங்கும் பரப்பலாம். இது முகப்பரு, கரும்புள்ளிகள், வெண்புள்ளிகள் மற்றும் சரும துளைகளில் அடைப்பை ஏற்படுத்துகிறது.

சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும்
பாராபென் மற்றும் ஃபார்மால்டிஹைடு போன்ற கடுமையான இரசாயனங்கள், சோப்பின் காரத் தன்மை மற்றும் அதன் அதிகப்படியான வாசனை மற்றும் சாயத்தின் உள்ளடக்கம் ஆகியவற்றால் உங்கள் முக சருமம் முற்றிலும் பாதிக்கப்படும். உங்கள் தோலில் சுருக்கங்கள் மற்றும் நேர்த்தியான கோடுகள் போன்ற வயதான அறிகுறிகளை சோப்பு ஏற்படுத்தலாம். மேலும் சருமம் வறண்டு போவதால் சூரிய பாதிப்புக்கும் ஆளாகிறது. நீண்ட காலம் உங்கள் முகத்தில் சோப்பைப் பயன்படுத்தினால், உங்கள் சருமம் மந்தமாகி, அதன் மென்மையையும் பிரகாசத்தையும் இழந்துவிடும்.

இறுதிக்குறிப்பு
உங்கள் சருமத்தின் வகைக்கு ஏற்ப ஃபேஸ் வாஷ் ஒன்றைத் தேர்ந்தெடுப்பது நல்லது. ஏனெனில் இது மிகவும் சுகாதாரமானது மற்றும் உங்கள் சருமத்தின் ஆரோக்கியத்தை பராமரிக்க தேவையான அளவு பொருட்களைக் கொண்டுள்ளது. உங்கள் சருமத்திற்கு ஊட்டச்சத்தை வழங்க உங்கள் ஃபேஸ் வாஷில் ஹைலூரோனிக் அமிலங்கள், கிளிசரின் மற்றும் நியாசினமைடு போன்ற பொருட்கள் உள்ளன. மேலும், நீங்கள் எந்த ஃபேஸ் வாஷை பயன்படுத்துகிறீர்கள் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications
