Latest Updates
-
1 மாம்பழமும், மைதா மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட்டை செய்யுங்க.. அள்ளும்.. -
இந்த 4 ராசி ஆண்கள் மனைவி மீது உண்மையான அக்கறை செலுத்தும் அன்பான கணவராக இருப்பார்களாம் - உங்க ராசி என்ன? -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: ஜூலை 24 முதல் இந்த 4 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
இந்திய ரூபாய் நோட்டுகளில் அச்சிடப்பட்டுள்ள நினைவுச்சின்னங்கள் என்னென்ன? அவை எங்கு உள்ளது தெரியுமா? -
புடலங்காயும், வேர்க்கடலையும் இருந்தா.. இப்படி சைடு டிஷ் செய்யுங்க.. சப்பாத்தி, சாதத்துக்கு அள்ளும்.. -
கண்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப உங்களுக்கு கொழுப்பு கல்லீரல் நோய் இருக்க வாய்ப்பிருக்கு.. உஷார்.. -
கத்திரிக்காய் வாங்குனா இந்த அரைச்சுவிட்ட மசாலா குழம்பை ட்ரை பண்ணுங்க - சாதத்தோட சாப்பிட அருமையா இருக்கும் -
சாணக்கிய நீதி படி இந்த பழக்கங்களில் ஒன்று இருந்தாலும் உங்களுக்கு வேகமாக வயது ஏறி முதுமை வந்துருமாம் -
ஜூலை 04-ல் சிம்ம ராசிக்கு செல்லும் சுக்கிரன்: இந்த 4 ராசிக்கு பணம், புகழ், வெற்றி எல்லாம் தேடி வரப்போகுது! -
பச்சை பயறு இட்லியும், கார மற்றும் தேங்காய் மல்லி சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
முகத்தில் அசிங்கமா கருந்திட்டுகள் இருக்கா? அப்ப எலுமிச்சையை இப்படி 2 வாரம் யூஸ் பண்ணுங்க.. போயிடும்...
Skin Care Tips In Tamil: அழகைக் கெடுக்கும் வகையில் சருமத்தில் பலவிதமான பிரச்சனைகள் தோன்றும். அப்படிப்பட்ட ஒரு பிரச்சனை தான் கருந்திட்டுகள். இதை மங்கு என்றும் அழைப்பர். கருந்திட்டுகள் வயதாகும் போது சருமத்தில் தோன்றும். இது தவிர வெயிலில் அதிகம் சுற்றுவது, சுற்றுச்சூழல் மாசுபாடு அல்லது ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் போன்றவையும் இந்த பிரச்சனையை வரத் தூண்டலாம்.
இந்த கருந்திட்டுகள் ஒருவரது அழகையே கெடுத்துவிடும். கருந்திட்டுகளைப் போக்க பலர் பலவிதமான க்ரீம்களை வாங்கி பயன்படுத்துவார்கள். ஆனால் நம் வீட்டில் உள்ள ஒருசில பொருட்களே இந்த கருந்திட்டுகளைப் போக்க பெரிதும் உதவி புரியும். அதில் ஒன்று தான் எலுமிச்சை.

இந்த எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் சருமத்தில் ஏற்படும் பலவிதமான பிரச்சனைகளைப் போக்கும். இப்போது முக அழகை கெடுக்கும் கருந்திட்டுகளைப் போக்க எலுமிச்சையை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதைக் காண்போம்.
1. மஞ்சள் மற்றும் எலுமிச்சை சாறு
* ஒரு பௌலில் 1 டீஸ்பூன் மஞ்சள் தூளுடன், 1/2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் பால் சேர்த்து பேஸ்ட் போல் கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை கருந்திட்டு/மங்கு உள்ள இடத்தில் தடவி 10 நிமிடம் நன்கு காய வைக்க வேண்டும்.
* பின்பு வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.
* இப்படி வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தினால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.
2. தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு
* ஒரு பௌலில் 2-3 துளிகள் தேங்காய் எண்ணெயை எடுத்துக் கொண்டு, அத்துடன் 2-3 துளிகள் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி 20-25 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு வெதுவெதுப்பான நீரில் நனைத்த துணியால் துடைத்து எடுக்க வேண்டும்.
* இப்படி தினமும் ஒருமுறை செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
* இன்னும் சிறப்பான பலன் கிடைக்க, அத்துடன் சிறிது சர்க்கரை சேர்த்துக் கொள்ளுங்கள்.
3. ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் எலுமிச்சை சாறு
* ஒரு பௌலில் 1/2 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை எடுத்து, அத்துடன் 1/2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் சிறிது நீரை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் பஞ்சுருண்டையை பயன்படுத்தி முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* இப்படி வாரத்திற்கு 4-5 முறை பயன்படுத்தி வர, கருந்திட்டுகள் சீக்கிரம் மறையும்.
4. வெள்ளரிக்காய் மற்றும் எலுமிச்சை சாறு
* ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் வெள்ளரிக்காய் சாற்றினை எடுத்து, அத்துடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1/2 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* இப்படி தினமும் 2-3 முறை பயன்படுத்தினால், விரைவில் கருந்திட்டுகள் மறையும்.
5. ஆலிவ் ஆயில் மற்றும் எலுமிச்சை சாறு
* ஒரு பௌலில் 1/2 டீஸ்பூன் ஆலிவ் ஆயிலை எடுத்து, அத்துடன் 1/2 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை கருந்திட்டுகளின் மீது தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* இப்படி தினமும் 2 முறை பயன்படுத்தி வர மங்கு மறைந்துவிடும்.
6. தயிர் மற்றும் எலுமிச்சை சாறு
* முதலில் எலுமிச்சை சாற்றினை கருந்திட்டுகளின் மீது தடவி நன்கு காய வைக்க வேண்டும்.
* நன்கு காய்ந்ததும், அதன் மேல் தயிரைத் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* இப்படி தினமும் ஒருமுறை செய்து வந்தால், கருந்திட்டுகள் சீக்கிரம் மறையும்.
7. தக்காளி சாறு மற்றும் எலுமிச்சை சாறு
* ஒரு பௌலில் 1 டீஸ்பூன் தக்காளி சாறு மற்றும் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை எடுத்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை கருந்திட்டுகள் உள்ள இடத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் கழுவி உலர்த்திய பின், மாய்ஸ்சுரைசரை தடவ வேண்டும்.
* இப்படி தினமும் ஒருமுறை பயன்படுத்தி வந்தால் கருந்திட்டுகள் காணாமல் போகும்.
8. பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை சாறு
* ஒரு பௌலில் 1 டீஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் சிறிது எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை மங்கு/கருந்திட்டு உள்ள இடத்தில் தடவி 3-4 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* இப்படி ஒருமுறை செய்து வந்தால், மங்கு சீக்கிரம் மறைந்துவிடும்.



Click it and Unblock the Notifications