தாடி வைத்த ஆண்களுக்கு உள்ள பிளஸ் இது தான்!

Written By:
Subscribe to Boldsky

ஆண்கள் சிலர் தனது முகம் மற்றும் மார்பு பகுதிகளில் உள்ள முடிகளை அசிங்கமாக உள்ளது என்று எண்ணி ஷேவ் செய்துவிடுகிறார்கள். இது பெண்களுக்கு பிடிக்காது என்பது போன்ற கருத்தும் நிலவி வருகிறது. மேலும் ஆண்கள் 'நோ ஷேவ் நவம்பர்' என்று ஒன்றையும் செயல்படுத்தினர். இந்த மாதம் முழுவதும் ரேசர் பயன்படுத்தாமல் இருப்பது தான் இதன் நோக்கம்.

பெண்களும் இந்த இடத்தில் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். தாடி, மீசை எல்லாம் ஆண்களின் அடையாளங்கள். அவை உள்ள ஆண், பெண்கள் மத்தியில் கம்பீரமாக திகழ்கிறான். முகத்தில் உள்ள இந்த முடிகளால் சில ஆரோக்கிய நன்மைகளும் ஏற்படுகின்றன. அது பற்றி இந்த பகுதியில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. சரும புற்றுநோய் வராமல் இருக்க

1. சரும புற்றுநோய் வராமல் இருக்க

சரும புற்றுநோய் சூரியனில் இருந்து வரும் அலட்ராவயலட் கதிர்கள் நேரடியாக நமது சருமத்தின் மீது படுவதால் உண்டாகிறது. சருமத்தின் மீது முடி இருப்பதால் அந்த கதிர்களின் தாக்கம் குறைக்கப்படுகிறது.

2. ஆய்வு :

2. ஆய்வு :

2011 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், தாடியானது சருமத்தின் மீது விழும் சூரிய கதிர்களின் தாக்கத்தை குறைக்கிறது என்று கூறியுள்ளது. இது சூரிய கதிர்களின் தாக்கத்தை 90-95 சதவீதம் வரை கட்டுப்படுத்துகிறது. இது தோல் புற்றுநோய் வருவதில் இருந்து காக்கிறது. மேலும் இது சன் க்ரீம்களை விட சிறந்ததாகும்.

3. பெண்களை கவர்கிறது

3. பெண்களை கவர்கிறது

தாடி வைத்த ஆண்களை பெண்கள் அதிகமாக விரும்புகின்றனர். பெண்களுக்கு தாடி மீது எப்போதும் ஒரு தனி ஈர்ப்பு இருக்க தான் செய்கிறது. தாடி, மீசை ஆகியவை கொண்ட ஆண்களை பெண்கள் அதிகம் ரசிக்கிறார்கள். அவர்களுடன் பழக வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது. இது அறிவியல் பூர்வமான உண்மையாகும்.

4. நம்பிக்கையை தருகிறது

4. நம்பிக்கையை தருகிறது

தாடி வைத்த ஆண்களுக்கு வெளியிடங்களில் ஒரு தனி மதிப்பு இருக்கிறது. இவர்களை பிறர் எளிதில் நம்பி விடுவார்கள். க்ளீன் சேவ் செய்த ஆண்களை நம்புவதை விட பிறர் தாடி வைத்த ஆண்களை தான் எளிதாக நம்புகிறார்களாம். இதனை உலகின் தலை சிறந்த மார்க்கெட்டிங் நாளிதல் ஒன்று தெரிவித்துள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Benefits of facial hair

Benefits of facial hair
Subscribe Newsletter