முகத்தை ப்ளீச்சிங் செய்வதால் உண்மையில் என்ன மாற்றம் நிகழ்கிறது தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

இந்திய பெண்களுக்கு மட்டுமின்றி, ஆண்களுக்கும் வெள்ளையாக வேண்டுமென்ற ஆசை இருக்கும். அதற்காக அழகு நிலையங்களுக்குச் சென்று ப்ளீச்சிங் செய்து கொள்வார்கள். ஆனால் ப்ளீச்சிங் செய்வதால், சருமத்தின் நிறம் அதிகரிக்காது என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டுமென்று நிபுணர்கள் கூறுகின்றனர். மாறாக சருமத்தில் உள்ள முடியின் நிறத்தைத் தான் அது மறைக்கிறது.

சில பெண்கள் சருமத்தில் வளரும் சிறிய முடிகளை நீக்க த்ரெட்டிங் மற்றும் வேக்சிங் போன்றவற்றை மேற்கொண்டு, சரும முடிகளை நீக்குகின்றனர். இன்றும் சிலர் லேசர் சிகிச்சைகளை மேற்கொள்கின்றனர். இருப்பினும் உங்களுக்கு ப்ளீச்சிங் தான் சரும நிறத்தை அதிகரிக்க உதவும் வழிகளில் ஒன்றாக கருதினால், ப்ளீச்சிங் செய்தால் உண்மையில் நம் சருமத்தில் ஏற்படும் மாற்றங்கள் என்னவென்று முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சரும வறட்சி

சரும வறட்சி

ப்ளீச்சிங் செய்தால், சருமம் அதிக வறட்சிக்கு உள்ளாகும். இதற்கு ப்ளீச்சிங் செய்யப் பயன்படுத்தும் பொருட்களில் உள்ள கெமிக்கல்கள் தான். எனவே அழகு நிலையங்களில் கெமிக்கல் பொருட்களைக் கொண்டு ப்ளீச்சிங் செய்வதைத் தவிர்த்து, இயற்கைப் பொருட்களைக் கொண்டு ப்ளீச்சிங் செய்து, பின் பால் அல்லது தயிர் கொண்டு மசாஜ் செய்து கழுவினால், சருமம் வறட்சியடைவதைத் தடுக்கலாம்.

விரைவில் முதுமைத் தோற்றம்

விரைவில் முதுமைத் தோற்றம்

ப்ளீச்சிங்கை அடிக்கடி செய்து வந்தால், விரைவில் முதுமைத் தோற்றத்தைப் பெறக்கூடும். இதற்கு ப்ளீச்சிங் செய்யப் பயன்படுத்தும் பொருட்கள் சருமத்தில் உள்ள எண்ணெய்களை முழுமையாக உறிஞ்சி, சீக்கிரம் முதுமைத் தோற்றத்தைப் பெற வழிவகுக்கும்.

சரும புற்றுநோய்

சரும புற்றுநோய்

ப்ளீச்சிங் செய்தால், சரும புற்றுநோய் வரும் வாய்ப்புள்ளது தெரியுமா? உங்கள் சருமம் மிகவும் சென்சிடிவ் என்றால், ப்ளீச்சிங் பொருட்கள், சரும அடுக்கினை மெதுவாக பாதித்து, நாளடைவில் சரும புற்றுநோயை உருவாக்கும். எனவே அடிக்கடி ப்ளீச்சிங் செய்யாதீர்கள்.

கருமையாக்கும்

கருமையாக்கும்

ப்ளீச்சிங் செய்துவிட்டு, வெயிலில் சென்றால், சூரியக்கதிர்கள், சருமத்தில் அரிப்புக்களை ஏற்படுத்துவதோடு, கருமையையும் உண்டாக்கும். எனவே ப்ளீச்சிங் செய்யும் முன் யோசிக்கவும்.

சரும எரிச்சல்

சரும எரிச்சல்

ப்ளீச்சிங் செய்ய சருமத்தில் அக்கலவையைத் தடவும் போது ஒருவித எரிச்சல் மற்றும் அரிப்பு ஏற்படக்கூடும். இது சாதாரணமாக இருந்தாலும், சருமத்திற்கு நல்லதல்ல. எப்போது ஒரு பொருளை சருமத்திற்கு பயன்படுத்தும் போது எரிச்சல், அரிப்பை உணர நேரிடுகிறதோடு, அப்போது அந்த பொருளானது நம் சரும செல்களை அழித்துக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம். எனவே கவனமாக இருங்கள்.

சருமத்தை எரித்துவிடும்

சருமத்தை எரித்துவிடும்

ப்ளீச்சிங் செய்யும் போது, அதனை நீண்ட நேரம் சருமத்தில் வைத்திருந்தால், அந்த பொருள் சருமத்தை எரித்துவிடும். எனவே ப்ளீச்சிங் செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், கடுமையான பக்க விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

முகப்பரு வரும்

முகப்பரு வரும்

உங்களுக்கு ஏற்கனவே அடிக்கடி முகப்பருக்கள் வருமாயின், ப்ளீச்சிங் செய்யாதீர்கள். ஏனெனில் இது நிலைமையை இன்னும் மோசமாக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

What Happens When You Bleach Your Skin

Do you know what happens to your skin when you bleach it? Well, here are some of the things you should keep in mind the next time you want to use bleach.
Subscribe Newsletter