For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சருமம் ஆரோக்கியமாக இருக்க அன்றாடம் பின்பற்ற வேண்டியவைகள்!!!

By Maha
|

வெறும் நீரில் கழுவினால் மட்டும் சருமம் ஆரோக்கியமாக இருப்பதில்லை. அதற்கு நாம் ஒருசில செயல்களை அன்றாடம் பின்பற்றவும் வேண்டும். சருமம் ஆரோக்கியமாக இருந்தால், சரும பிரச்சனைகள் வருவதைத் தடுக்க முடியும். ஏனெனில் நம்மைச் சுற்றி மாசுக்கள் நிறைந்திருப்பதால், சருமத்திற்கு போதிய பராமரிப்புக்களை மேற்கொள்ள வேண்டும்.

அதுமட்டுமின்றி, ஆரோக்கியமான உணவுகளையும் உட்கொள்ள வேண்டியது அவசியம். சரி, இப்போது சருமம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில், அன்றாடம் பின்பற்ற வேண்டியவைகள் என்னவென்று பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மாசுக்களில் இருந்து பாதுகாப்பு கொடுங்கள்

மாசுக்களில் இருந்து பாதுகாப்பு கொடுங்கள்

உடல்நல நிபுணர்கள், மாசுக்களில் இருந்து சருமத்திற்கு பாதுகாப்பு வழங்க துணியைக் கொண்டு சுற்றிக் கொள்வதோடு, ஒமேகா-3 ஃபேடி ஆசிட் நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ள பரிந்துரைக்கின்றனர். ஏனெனில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் உடலின் உட்பகுதியில் இருந்து சருமத்திற்கு பாதுகாப்பு அளிக்கிறதாம்.

தண்ணீரைக் குடியுங்கள்

தண்ணீரைக் குடியுங்கள்

எப்படி ஒரு இயந்திரம் சீராக செயல்பட எண்ணெய் அவசியமோ, அதேப் போல் உடலுறுப்புக்கள் சீராக செயல்பட தண்ணீர் அவசியம். அதேப்போல் சருமத்தின் வழியே அழுக்குகளை வெளியேற்றவும், பருக்கள் வராமல் தடுக்கவும் தண்ணீர் மிகவும் இன்றியமையாதது.

சுருக்கங்களை தள்ளிப் போடுங்கள்

சுருக்கங்களை தள்ளிப் போடுங்கள்

அதிக அளவில் சூரியக்கதிர்கள் சருமத்தில் பட்டால், சருமத்தின் நெகிழ்வுத்தன்மை குறைந்து, சரும சுருக்கங்கள் ஏற்படும். எனவே இவற்றைத் தடுக்க, சன் ஸ்க்ரீனை தினமும் தவறாமல் தடவ வேண்டும்.

கிளின்சர்கள்

கிளின்சர்கள்

சோப்புக்களை அளவுக்கு அதிகமாக சருமத்திற்கு பயன்படுத்தினால், சருமத்தில் உள்ள இயற்கை எண்ணெய்கள் வெளியேறி, சருமம் அதிக அளவில் வறட்சியடையும். இதனைத் தவிர்க்க வேண்டுமானால், மைல்டு கிளின்சர்கள் அல்லது ஃபேஸ் வாஷ்ஷைப் பயன்படுத்தி, முகத்தைக் கழுவுங்கள்.

இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும்

இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும்

உடற்பயிற்சியின் மூலம் மட்டுமே உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க முடியும். எனவே அன்றாடம் உடற்பயிற்சியில் ஈடுபடுவதைத் தவிர்க்காதீர்கள்.

டோனர் பயன்படுத்தவும்

டோனர் பயன்படுத்தவும்

சருமத் துளைகளில் தங்கியுள்ள அழுக்குகளை நீக்குவதற்கு இயற்கை டோனர்களான ரோஸ் வாட்டர், பால் ஆகியவற்றைக் கொண்டு, தினமும் 2-3 முறை முகத்தை துடைத்து எடுக்க வேண்டும். இதனால் அழுக்குகள் முழுமையாக வெளியேறி, சருமம் பளிச்சென்று மின்னும்.

வைட்டமின்களை எடுத்துக் கொள்ளுங்கள்

வைட்டமின்களை எடுத்துக் கொள்ளுங்கள்

சருமத்தின் ஆரோக்கியம் வெறும் பராமரிப்பில் மட்டுமின்றி, உண்ணும் உணவிலும் உள்ளது. எனவே வைட்டமின்கள் அதிகம் நிறைந்த எலுமிச்சை, பாதாம், ஆப்பிள், பெர்ரிப் பழங்கள் ஆகியவற்றை அடிக்கடி அதிகம் சாப்பிடுங்கள். இதனால் சரும செல்கள் புத்துணர்ச்சியுடனும், ஆரோக்கியத்துடனும் இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Daily Tips For Healthy Skin

Healthy glowing skin is not a free gift for most of us as we have to constantly put in some efforts in the process of keeping it healthy.
Desktop Bottom Promotion