பொலிவான சருமம் வேண்டுமா? காய்கறிகளை வெச்சு ஃபேஸ் பேக் போடுங்க...

Posted By:
Subscribe to Boldsky

நிறைய பெண்கள் தங்கள் முகங்களை அழகாக வைத்துக் கொள்ள பல ஃபேஸ் பேக்குகளை வீட்டிலேயே செய்வார்கள். அவ்வாறு அவர்கள் செய்யும் ஃபேஸ் பேக்குகளுக்கு பொதுவாக பயன்படுத்துவது பழங்களைத் தான். ஏனெனில் அனைவருமே பழங்களை வைத்து போடும் ஃபேஸ் பேக்குகளை மட்டும் தான் கேள்விப்பட்டிருப்போம். அதனால் தான் அந்த பழங்களையே வைத்து பல வகைகளில் ஃபேஸ் பேக்குகளை ட்ரை செய்கிறோம். ஆனால் அத்தகைய பழங்களில் மட்டும் சத்துக்கள் இல்லை, சமைக்கப் பயன்படுத்தும் காய்கறிகளிலும் சருமத்திற்கு தேவையான சத்துக்கள் நிறைந்துள்ளன.

எனவே முகத்தை பொலிவாக்க காய்கறிகளும் சிறந்தது என்பதைத் தெரிந்து கொண்டு, இனிமேல் காய்கறிகளாலும் ஃபேஸ் பேக்குகளை போடுங்கள். இப்போது எந்த காய்கறிகளை வைத்து, எப்படி ஃபேஸ் பேக்குகளைச் செய்து போடுவது என்பதைப் பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கேரட் ஃபேஸ் பேக்

கேரட் ஃபேஸ் பேக்

நிலத்திற்கு அடியில் வளரக்கூடிய காய்கறியான கேரட்டில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. இதனை வைத்து சென்சிட்டிவ் சருமத்திற்கு ஃபேஸ் பேக் போட்டால், மிகவும் சிறந்ததாக இருக்கும். மேலும் இந்த ஃபேஸ் பேக் முகப்பரு, வெள்ளைப்புள்ளிகள், பழுப்பு நிற சருமம் போன்றவற்றை போக்கிவிடும். அதற்கு கேரட்டை அரைத்து சாறு எடுத்துக் கொண்டு, அதில் சிறிது எலுமிச்சை சாறு, தேன் மற்றும் பால் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி, 2 நிமிடம் மசாஜ் செய்து, 15 நிமிடம் ஊற வைத்து, பின்னர் குளிர்ந்த நீரில் கழுவினால், சருமம் நன்கு பொலிவோடு இருக்கும்.

தக்காளி ஃபேஸ் பேக்

தக்காளி ஃபேஸ் பேக்

தக்காளியை அரைத்து அதில் சிறிது எலுமிச்சை சாறு, 1/2 டீஸ்பூன் மூல்தானி மெட்டி மற்றும் சந்தனப் பவுடர் சேர்த்து நன்கு கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி, நன்கு காய வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் சருமம் நன்கு அழகாக புத்துணர்ச்சியோடு காணப்படும்.

உருளைக்கிழங்கு ஃபேஸ் பேக்

உருளைக்கிழங்கு ஃபேஸ் பேக்

வறட்சியான சருமம் உள்ளவர்கள், உருளைக்கிழங்கு ஃபேஸ் பேக் போடலாம். இதனால் சருமத்தில் ஈரப்பசை ஏற்பட்டு, வறட்சியால் ஏற்படும் அரிப்புகளைத் தடுக்கும். அதற்கு உருளைக்கிழங்கை அரைத்து, முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து பின் ஊற வைத்து கழுவ வேண்டும். இல்லையெனில் அரைத்து உருளைக்கிழங்குடன், தயிரை சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி, 10 நிமிடம் ஊற வைத்து, பின்னர் பாலில் கழுவி, இறுதியில் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

அவோகேடோ ஃபேஸ் பேக்

அவோகேடோ ஃபேஸ் பேக்

இந்த காய்கறியை வைத்து ஃபேஸ் பேக் போட்டால், சருமத்தில் ஈரப்பசை அதிகரித்து, வறட்சியை தடுக்கும். அதிலும் குளிர் அல்லது பனிக்காலத்தில் இந்த ஃபேஸ் பேக் போட்டால், சருமத்திற்கு எந்த ஒரு க்ரீமையும் தடவ வேண்டிய அவசியம் இருக்காது. இதற்கு அவோகேடோவின் சிறு துண்டுகளை அரைத்து, அத்துடன் சிறிது ஆரஞ்சு பழத் தோலின் பவுடர், 1 டீஸ்பூன் தயிர் மற்றும் முட்டையின் வெள்ளைக் கரு சேர்த்து நன்கு பேஸ்ட் போல் கலந்து கொள்ள வேண்டும். பிறகு அந்த கலவையை முகம் மற்றும் கழுத்தில் தடவி, 5-10 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

வெங்காய ஃபேஸ் பேக்

வெங்காய ஃபேஸ் பேக்

அனைவரையும் அழ வைக்கும் வெங்காயத்தில் நிறைய சருமத்திற்கான நன்மைகள் அடங்கியுள்ளன. மேலும் இந்த காயை வைத்து ஃபேஸ் பேக் போட்டால், சருமம் நன்கு பொலிவோடு, பருக்கள் இல்லாதவாறு செய்யும். மேலும் இந்த வெங்காயத்தில் வைட்டமின் ஏ, சி மற்றும் ஈ சத்துக்கள் உள்ளன. இந்த வைட்டமின்கள் சருமத்தை சூரியக்கதிரிடமிருந்து பாதுகாக்கிறது. எனவே இந்த ஃபேஸ் பேக் செய்வதற்கு, ஒரு பௌலில் 1/2 டீஸ்பூன் கடலை மாவு, சந்தன பவுடர், தயிர், எலுமிச்சை சாறு மற்றும் வெங்காய பேஸ்ட் சேர்த்து கலந்து, சிறிது பால் ஊற்றி, பேஸ்ட் போல் செய்து கொள்ள வேண்டும். பின்பு, அதனை முகத்திற்கு தடவி, 10 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால, சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமம் பொலிவோடு காணப்படும்.

வேறு எந்த காய்கறிகளை வைத்து ஃபேஸ் பேக் போடலாம் என்று தெரிந்தால், எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Homemade Face Packs With Vegetables | பொலிவான சருமம் வேண்டுமா? காய்கறிகளை வெச்சு ஃபேஸ் பேக் போடுங்க...

Homemade face packs are commonly prepared by many women. getting a face pack made with vegetables is a strange beauty regime. Want to try some homemade face packs made with vegetables? Check out..
Story first published: Thursday, December 20, 2012, 11:53 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter