For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முடி உதிர்வை தடுத்து, நரை முடி பிரச்சினைக்கு தீர்வு கட்டும் காய்கறிகள் இவைதான்..!

திலும் முடி கொட்டும் பிரச்சினை பெரும்பாலான மக்களுக்கு இருக்கிற ஒன்றாக கருதப்படுகிறது. இதனை சரி செய்யும் காய்கறிகளை பற்றித்தான் இந்த பதிவில் அறிந்து கொள்ள போகிறோம்.

By Haripriya
|

பலருக்கு இப்போதெல்லாம் தங்களை கவனித்து கொள்வதற்கான நேரமே இல்லை என்றே சொல்லலாம். நாம் யாருக்காக உழைக்கின்றோம் என்பதையே மறந்து பலர் இங்கு வாழ்க்கை பயணத்தில் பயணம் செய்து கொண்டிருக்கின்றோம். நமது உடல் ஆரோக்கியம்தான் எல்லாவற்றை காட்டிலும் மிக அவசியமானது. இதனை உணர்ந்தாலே பலவித பிரச்சினைக்கும் தீர்வு கிடைத்து விடும். அந்த வகையில் உடல் ஆரோக்கியத்தோடு சேர்ந்ததுதான் உள்ளத்தின் ஆரோக்கியமும்.

Vital Vegetables For Hair Growth

ஆனால், இது பலருக்கும் பெரிய பிரச்சினையாக இருகின்றது. அதிலும் முடி கொட்டும் பிரச்சினை பெரும்பாலான மக்களுக்கு இருக்கிற ஒன்றாக கருதப்படுகிறது. இதனை சரி செய்யும் காய்கறிகளை பற்றித்தான் இந்த பதிவில் அறிந்து கொள்ள போகிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெங்காயம்

வெங்காயம்

முடியின் வளர்ச்சிக்கு உதவும் காய்கறிகளில் வெங்காயம் முக்கிய பங்கு வகிக்கிறது. இவற்றில் உள்ள ஜின்க், இரும்புசத்து மற்றும் பயோட்டின் முடியின் வளர்ச்சியை மேம்படுத்துகிறது. மேலும் இளநரையை தடுக்கும் ஆற்றல் இந்த வெங்காயத்திற்கு உள்ளதாம்.

சர்க்கரை வள்ளிக்கிழங்கு

சர்க்கரை வள்ளிக்கிழங்கு

இதில் எண்ணற்ற ஊட்டசத்துக்கள் உள்ளன. குறிப்பாக இவற்றில் உள்ள beta-carotene முடிக்கு உதவுமாம். அதாவது இவற்றை வைட்டமின் எ-வாக நம் உடல் மாற்றி கொள்ளுமாம். இந்த வைட்டமின் எ முடியின் வளர்ச்சிக்கு உதவி, முடி கொட்டும் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி தரும்.

கேரட்

கேரட்

கேரட்டின் ஊட்டசத்துக்கள் நம் எல்லோரும் அறிந்த ஒன்றே. இவை கண்ணுக்கு எவ்வளவு நல்லதோ அதே அளவிற்கு தலை முடிக்கும் நல்லது. இதில் வைட்டமின் பி7 அதிகம் உள்ளதால் தலையில் சீரான ரத்த ஓட்டத்தை ஏற்படுத்தி மென்மையாக மாற்றும். மேலும், முடி உதிர்ந்த இடத்தில் மீண்டும் முடி வளர செய்யும்.

பீட்ரூட்

பீட்ரூட்

ரத்தத்தை சுத்தப்படுத்தி உடலின் செயல்பாட்டை செம்மைப்படுத்தும் ஆற்றல் கொண்டவை இந்த பீட்ரூட். இதில் உள்ள lycopene என்ற மூல பொருள் முடியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. அத்துடன் சிவப்பாக இருக்க கூடிய பொருட்கள் என்றாலே அவை முடிக்கு நன்மையே அதிகம் ஏற்படுத்துமாம்.

தக்காளி

தக்காளி

முகத்தையும் உடலையும் நலம் பெற செய்யும் இந்த தக்காளி தலை முடியையும் ஆரோக்கியமாக வைக்குமாம். ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் அதிகம் கொண்ட இவை, செல்களை சீர்செய்து முடியை மறு உற்பத்தி செய்யுமாம். எனவே உங்கள் உணவில் தக்காளியை ஒதுக்காமல் சேர்த்து கொள்ளுங்கள்.

கருவேப்பிலை

கருவேப்பிலை

கருவேப்பிலை முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும் என்பது நமக்கு நன்கு தெரிந்த ஒன்று தான். அத்துடன் முடி சார்ந்த கோளாறுகளை குணப்படுத்தவும் செய்யும். keratin என்ற மூல பொருள் இருப்பதால் இவை பெரிதும் முடிக்கு உதவுகிறது. அத்துடன் உடைந்த முடியையும் சரி செய்ய பயன்படுகிறதாம்.

பீன்ஸ்

பீன்ஸ்

வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் எ அதிகம் கொண்ட இந்த பீன்ஸ்கள் பல நன்மைகளை தர வல்லது. இவை முடியின் ஆரோக்கியத்தை அதிகரித்து வலுவான முடியை பெற செய்கிறது. மேலும் நரைகள் ஏற்படாமல் காக்கும்.

பூண்டு

பூண்டு

ஜீரண சக்தியை எவ்வாறு இது அதிகரிக்கிறதோ அதே போன்று முடியின் நலனையும் பாதுகாக்கிறது. உணவில் அதிகமாக பூண்டை சேர்த்து கொண்டால் பல நன்மைகளை இது ஏற்படுத்தும். மேலும் இதில் அதிகம் சல்பர் இருப்பதால் முடி உதிர்ந்த இடத்தில் முடியை மீண்டும் வளர செய்யும்.

இது போன்ற பயனுள்ள புதிய குறிப்புகளை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். அத்துடன் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் முடி ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Vital Vegetables For Hair Growth

Vegetables are highly beneficial for your health. And for hair too, because ther are rich in essential vitamins and minerals.
Desktop Bottom Promotion