For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அதிக எண்ணெய் பசையுள்ள தலையை எப்படி இயற்கை முறையில் பராமரிப்பது?

பயணத்தின் போது எடுத்து செல்ல வேண்டிய அழகு சாதனப் பொருட்கள் பொருட்கள்

|

எண்ணெய் பசை வழியும் தலையை உடையவர்கள் தினமும் தங்களது முடியைப் பராமரிக்க தலைக்கு குளிக்கின்றனர் . ஆனால் நீங்கள் நீண்ட கூந்தலை உடையவராக இருந்தால் அதிக சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் உங்கள் கூந்தல் பாதிப்படையவும் வாய்ப்புள்ளது. மேலும் இயற்கையாகவே தலையில் சுரக்கும் எண்ணெய் பசையை நீங்கள் நீக்குவதால் முடிகள் பலவீனமாகி உதிரக் கூட வாய்ப்புள்ளது.

எனவே வாரத்திற்கு இரண்டு நாட்கள் மட்டுமே தலைக்கு குளிப்பது நல்லது. எண்ணெய் வடியும் தலையை உடையவர்கள் நிறைய சங்கடங்களை சந்திக்கின்றன. கூந்தல் பார்ப்பதற்கு அழுக்கேறி சுத்தம் இல்லாது போல் காட்சி அளிக்கும்.

தலையில் எண்ணெய் வடிய நிறைய காரணங்கள் இருக்கின்றன. ஆரோக்கியமற்ற உணவு முறை, மன அழுத்தம், கெமிக்கல் பொருட்கள், சில சமயங்களில் தலையில் ஏற்படும் தொற்று போன்றவை காரணங்களாக அமைகின்றன. தலையில் ஏற்படும் தொற்றால் அரிப்பு, எண்ணெய் பசை, பொலிவற்ற கூந்தல் போன்றவை ஏற்படுகிறது.

எண்ணெய் பசை தலையை பராமரிக்க சில இயற்கை வழிகள்

இந்த மாதிரியான பிரச்சினைக்கு நீங்கள் சரும மருத்துவரை நாடுவது நன்மை அளிக்கும். இதற்கு இயற்கையான முறைகள் பலனளிக்காது.

இங்கே சில இயற்கை முறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதை ஷாம்பு மாதிரி உங்கள் எண்ணெய் பசை தலையில் தினசரி பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா தலையில் உள்ள அதிகப்படியான எண்ணெயை உறிஞ்சப் பயன்படுகிறது. இது இயற்கையாகவே ஒரு அல்கலைன் என்பதால் தலை சருமத்தின் pH அளவை சமமாக வைக்க உதவுகிறது. பேக்கிங் சோடாவையும், தண்ணீரையும் பேஸ்ட் மாதிரி கலந்து உங்கள் தலையில் முடியின் வேர்க்கால்களில் மட்டுமே தடவ வேண்டும். முடியில் தடவக் கூடாது.

இந்த முறையால் தலையில் உள்ள எண்ணெய் பசை போவதோடு அதனால் ஏற்படும் துர்நாற்றமும் நீங்கி நன்றாக இருக்கும். பிறகு 15-20 நிமிடங்கள் கழித்து உங்கள் ஷாம்பை கொண்டு அலசி விடுங்கள். இதை வாரத்திற்கு ஒரு முறை என செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.

கற்றாழை ஜெல்

கற்றாழை ஜெல்

கற்றாழை ஜெல் தலையில் உள்ள நச்சுக்களை நீக்குவதோடு போதுமான ஈரப்பதத்தையும் அளிக்கிறது. கற்றாழை ஜெல்லில் உள்ள விட்டமின்கள் தலையில் உண்டாகும் அதிகப்படியான எண்ணெய் சுரப்பை கட்டுப்படுத்துகிறது. இதை உங்கள் கூந்தல் முழுவதும் தடவலாம். இருப்பினும் தலையில் நன்றாக தடவிக் கொள்ளுதல் நல்ல பலனை தரும். 15 நிமிடங்கள் நன்றாக காய விட்டு பிறகு ஷாம்பு கொண்டு அலசிக் கொள்ளுங்கள். பிறகு இந்த ஜெல்லை கண்டிஷனராக கூட பயன்படுத்தி கொள்ளலாம். நல்ல மென்மையான பட்டு போன்ற கூந்தலை பெறலாம்.

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகரும் தலையில் சுரக்கும் அதிகப்படியான எண்ணெயையும் தலையில் pH அளவை சமமாக வைக்கிறது. இதன் மணம் பயன்படுத்துவதற்கு ஒரு மாதிரி உங்களுக்கு சங்கடத்தை தந்தாலும் முடியை அலசிய பிறகு அந்த மணம் போய்விடும். 3 பங்கு தண்ணீருடன் ஒரு பங்கு ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து தலையில் அப்ளை செய்யவும். நன்றாக காய்ந்த உடன் எப்பொழுதும் போல முடியை ஷாம்பு கொண்டு அலசிக் கொள்ளவும். இது உங்கள் தலையில் உள்ள எண்ணெய் பசையை போக்குவதோடு பொடுகுத் தொல்லையையும் அறவே ஒழிக்கிறது.

லெமன் ஜூஸ்

லெமன் ஜூஸ்

லெமன் ஜூஸில் உள்ள சிட்ரிக் அமிலம் நமது தலையின் pH அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. மேலும் தலையில் சுரக்கும் எண்ணெயை கட்டுப்படுத்தவும் செய்கிறது. ஷாம்பு போடுவதற்கு அரை மணி நேரம் முன்னதாக லெமன் ஜூஸை அப்ளை செய்து கொள்ளுங்கள். நீங்கள் ஒவ்வொரு முறை தலைக்குக் குளிக்கும் போதும் இந்த முறையைப் பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

டீ ட்ரீ ஆயில்

டீ ட்ரீ ஆயில்

டீ ட்ரீ ஆயில் எண்ணெய் பசையை போக்குவதோடு ஆன்டி பாக்டீரியல் குணத்தையும் பெற்று இருக்கிறது. எனவே சில துளிகள் டீ ட்ரீ ஆயிலை உங்கள் ஷாம்புவுடன் கலந்து தலையில் தேய்த்து வந்தால் எண்ணெய் பசை நீங்கி முடி அழகு பெறும்.

மேலும் பொடுகு மற்றும் தலையில் ஏற்படும் தொற்று போன்றவற்றையும் சரி செய்கிறது. இதை வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். டீ ட்ரீ ஆயில் வேக மாக பரவக்கூடியது என்பதால் உங்கள் கூந்தலை எளிதாக வறண்டதாக ஆக்கி விடும். எனவே அதிகமாக பயன்படுத்தாதீர்கள்.

க்ரீன் டீ

க்ரீன் டீ

க்ரீன் டீ தலை சருமத்திற்கு போதுமான ஈரப்பதத்தை அளிக்கிறது. தலையில் தீடீரென்று ஏற்படும் கொப்புளங்கள் அல்லது பருக்கள் போன்றவற்றால் கூட அதிகப்படியான எண்ணெய் சுரக்கும். இதுபோன்ற பிரச்சினைகளுக்கு க்ரீன் டீ உதவுகிறது. எண்ணெய் பசையைப் போக்குவதோடு கூந்தலை மென்மையாகப் பொலிவாக வைக்கவும் உதவுகிறது.

தக்காளி

தக்காளி

தக்காளியிலும் சிட்ரிக் அமிலம் அடங்கியுள்ளது. நீங்கள் லெமன் ஜூஸ் பயன்படுத்த விரும்பவில்லை என்றால் தக்காளியை பயன்படுத்திக் கொள்ளலாம். தக்காளிக்கூழை தலையில் தடவி அரை மணிநேரம் அப்படியே வைத்திருந்து பிறகு ஷாம்பு மற்றும் கண்டிஷனர் கொண்டு அலசுங்கள். வாரத்திற்கு மூன்று முறை செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.

வோட்கா

வோட்கா

வோட்கா தலை மற்றும் சருமத்திற்கு சிறந்த டானிக். தலையில் எண்ணெய் சுரக்கக் காரணமான சரும துவாரங்களை மூட உதவுகிறது. ஒரு பங்கு வோட்காவுடன் இரண்டு பங்கு தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும். தலைக்கு சாம்பு போட்டு அலசிய பிறகு இந்த கலவையை தலை மற்றும் கூந்தலில் அப்ளே செய்ய வேண்டும்.

தலையில் உள்ள எண்ணெய் சுரப்பை கட்டுப்படுத்துவதோடு தலையின் pH அளவை சமமாக வைக்கிறது. வோட்கா, குளிர்ந்த தண்ணீர் கலந்தும் கூட வாரத்திற்கு ஒரு முறை தலையை அலசி வரலாம்.

கண்டிப்பாக இந்த இயற்கை முறைகள் உங்கள் எண்ணெய் பசை தலைக்கு பயனுள்ளதாக இருக்கும். ட்ரை பண்ணி பாருங்க.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: hair care
English summary

அதிக எண்ணெய் பசையுள்ள தலையை எப்படி இயற்கை முறையில் பராமரிப்பது?

treating-oily-scalp-with-home-remedies
Desktop Bottom Promotion