For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஷாம்புக்கு பதிலா கடலைமாவு தேய்ச்சாலே முடி தாறுமாறா வளருமாம்... இவ்ளோ நாள் தெரியாம போச்சே

எல்லாருக்கும் கடலை மாவு என்றாலே முகம் பளபளக்கும் சருமத்திற்கும் தான் என்று தெரியும். ஆனால் இந்த கடலை மாவை கொண்டு உங்கள் கூந்தலை கூட பொலிவாக்கலாம் என்று உங்களுக்கு தெரியுமா. ஆம். தலைமுடி வளர்ச்சியை தூண

|

எல்லாருக்கும் கடலை மாவு என்றாலே முகம் பளபளக்கும் சருமத்திற்கும் தான் என்று தெரியும். ஆனால் இந்த கடலை மாவை கொண்டு உங்கள் கூந்தலை கூட பொலிவாக்கலாம் என்று உங்களுக்கு தெரியுமா. ஆம். தலைமுடி வளர்ச்சியை தூண்டும்.

beauty

பண்டைய காலத்தில் இருந்து கடலை மாவு அழகு பராமரிப்புக்கு என்றே பயன்பட்டு வருகிறது. இதிலுள்ள போஷாக்குகள் உங்கள் கூந்தலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. வலிமையான மற்றும் அடர்த்தியான பொலிவான கூந்தலை பரிசாக அளிக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பயன்கள்

பயன்கள்

சரும அழகைப் போலவே தலைமுடி பராமரிப்பிலும் கடலைமாவு பல்வேறு வகைகளில் நமக்குப் பயன்படுகிறது. அவை என்னென்னவென்று பார்ப்போம்.

முடி வளர்ச்சி

முடி உதிர்தலை தடுத்தல்

கூந்தலை சுத்தமாக்குதல்

கூந்தல் வறட்சியை போக்குதல்

கூந்தலிலுள்ள சிக்கலை போக்குதல்

இயற்கையான கண்டிஷனர்

பொடுகை தவிர்த்தல்

பொலிவான மற்றும் நீண்ட கூந்தலை அளித்தல்

கூந்தல் நுனிப்பிளவை தடுத்தல்

ஆகிய பிரச்சினைகளுக்கு கடலை மாவு மூலம் உங்களுக்குத் தீர்வு கிடைக்கும்.

கடலை மாவு மற்றும் தயிர் மாஸ்க்

கடலை மாவு மற்றும் தயிர் மாஸ்க்

கடலை மாவு மற்றும் தயிர் சேர்ந்த கலவை கூந்தலை புதுப்பித்து கூந்தல் வளர்ச்சியை தூண்டுகிறது. தயிரில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் நல்ல பாக்டீரியா தலை மற்றும் கூந்தலில் உள்ள அழுக்குகளை போக்கி சுத்தம் செய்கிறது. தலை அரிப்பு போன்றவை இருந்தால் இதனுடன் கொஞ்சம் மஞ்சள் சேர்த்து கொள்ளுங்கள். கடலை மாவு மற்றும் தயிர் மாஸ்க்கை நீங்கள் சாம்பு மற்றும் கண்டிஷனர் மாதிரி கூட பயன்படுத்தி பலன் பெறலாம்.

பயன்படுத்தும் முறை

பயன்படுத்தும் முறை

கொஞ்சம் கடலை மாவு மற்றும் தயிர் சேர்த்து நன்றாக கலக்கவும்

மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்

பேஸ்ட்டை முடியில் அப்ளே செய்து 30 நிமிடங்கள் அப்படியே வைத்து இருக்க வேண்டும்

பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்

கடலை மாவு மற்றும் ஆலிவ் ஆயில் மாஸ்க்

கடலை மாவு மற்றும் ஆலிவ் ஆயில் மாஸ்க்

ஆலிவ் ஆயில் கூந்தலின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனை கடலை மாவுடன் சேர்த்து பயன்படுத்தும் போது கூந்தல் வளர்ச்சி அதிகமாவதோடு வலிமையாகவும் வளர்கிறது.

பயன்படுத்தும் முறை

கடலை மாவு மற்றும் ஆலிவ் ஆயில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்

இப்பொழுது கலவை கூந்தல் மற்றும் தலையின் வேர்ப்பகுதியில் தடவி சில நிமிடங்கள் விட்டு விடவும்

கூந்தல் நன்றாக காய வைத்து பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்

கடலை மாவு மற்றும் பாதாம் பருப்பு ஹேர் மாஸ்க்

கடலை மாவு மற்றும் பாதாம் பருப்பு ஹேர் மாஸ்க்

Image Courtesy

கடலை மாவு மற்றும் பாதாம்பருப்பு சேர்ந்த கலவை உங்களுக்கு கருகருவென அடர்த்தியான கூந்தலை தரும். இது கூந்தலுக்கு அடர்த்தியையும் நிறத்தையும் கொடுக்கிறது. இதனுடன் விட்டமின் ஈ மாத்திரையை கலந்து கொண்டால் கூந்தல் பாதிப்பிலிருந்து தடுக்கலாம்.

பயன்படுத்தும் முறை

கடலை மாவு மற்றும் பாதாம் பொடி சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

அதனுடன் லெமன் ஜூஸ் மற்றும் தேன் சேர்த்து பேஸ்ட்டாக்கி கொள்ளவும்.

இந்த மாஸ்க்கை தலையில் தடவி சில நேரங்கள் விடவும். பிறகு நீரில் கழுவி விடுங்கள்.

இதை வாரத்திற்கு இரண்டு முறை என செய்து வரலாம்.

கடலை மாவு மற்றும் முட்டை மாஸ்க்

கடலை மாவு மற்றும் முட்டை மாஸ்க்

உங்கள் கூந்தல் பொலிவிழந்து வறண்டு போய் காணப்பட்டால் அதற்கு இந்த கடலை மாவு மற்றும் முட்டை மாஸ்க் பயன்படும். இந்த கலவை கூந்தலுக்கு பட்டு போன்ற மென்மையையும், பளபளப்பை யும் தரும். தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் க்ளாஸிக் லுக் கிடைக்கும்.

பயன்படுத்தும் முறை

கடலை மாவு மற்றும் முட்டை சேர்த்து நன்றாக அடித்து கொள்ளுங்கள்.

அதனுடன் கொஞ்சம் லெமன் மற்றும் தேன் கலந்து நன்றாக பேஸ்ட்டாக்கி கொள்ளவும்.

தலையில் தடவி விட்டு சிறிது நேரம் அப்படியே வைத்து இருக்க வேண்டும்.

பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

கடலை மாவு மற்றும் மயோனைஸிஸ் ஹேர் மாஸ்க்

கடலை மாவு மற்றும் மயோனைஸிஸ் ஹேர் மாஸ்க்

மயோனைஸிஸ் மற்றும் கடலை மாவு ஒரு நல்ல காம்பினேஷன் கலவையாகும். இந்த ஹேர் மாஸ்க் கூந்தலுக்கு தேவையான ஈரப்பதத்தை கொடுத்து ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. இந்த ஹேர் மாஸ்க் முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.

பயன்படுத்தும் முறை

கொஞ்சம் கடலை மாவு மற்றும் மயோனைஸிஸ் சேர்த்து கலந்து கொள்ளவும்.

இப்பொழுது இதனுடன் கொஞ்சம் தேன் சேர்த்து கலக்குங்கள்.

முடியில் அப்ளே செய்து விட்டு கொஞ்சம் நேரம் விட்டு விடுங்கள்.

பிறகு சாதாரண தண்ணீரில் கழுவி விடுங்கள்

இந்த கடலை மாவு ஹேர் மாஸ்க் அனைத்தும் உங்கள் கூந்தலை ஆரோக்கியமாக மின்ன வைக்க உதவுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Amazing Besan Hair Masks For Healthy Hair

Besan has too many healthy nutrients in it, which is proved to be beneficial for your hair.
Story first published: Tuesday, July 24, 2018, 12:15 [IST]
Desktop Bottom Promotion