பின்னாடி ரொம்ப அரிக்குதா? இதெல்லா கூட காரணமா இருக்கலாம் ஜாக்கிரத!!!

Posted By:
Subscribe to Boldsky

சிலர் எப்போதுமே அவர்களது பின் பாக்கெட்டில் கை வைத்தபடியே நின்றுக் கொண்டிருப்பார். அதை நீங்கள் ஸ்டைல் என்று எண்ணிட வேண்டாம். அது அவருக்கு ஏற்பட்ட விரும்பாத எரிச்சல் மற்றும் அரிப்புகளின் பின் விளைவின் காரணமாக கூட இருக்கலாம். சிலருக்கு வயிற்றில் எரிச்சல் வரும் அதை பழரசம் குடித்து சரி செய்துவிடலாம். சிலருக்கு மனதில் எரிச்சல் வரும் அதை இன்பமான விஷயங்கள் நிகழ்த்தி சரி செய்துக் கொள்ளலாம். ஆனால், பலரினால் மெல்லவும் முடியாது, விழுங்கவும் முடியாது, இதை யாரிடம் சென்று சொல்வது எப்படி தீர்வு கேட்பது என உள்ளேயே புழுங்கிக் கொண்டு இருப்பார்கள். அந்த எரிச்சல் ஏற்பட்ட இடம் அப்படி. பிட்டத்தில் எரிச்சல் மற்றும் அரிப்பு ஏற்படுவதை யாரும் அவ்வளவு பட்டென்று சொல்லிவிட மாட்டார்கள்.

அரிக்கும் உச்சந்தலைக்கு சில பயனுள்ள வீட்டுச் சிகிச்சைகள்!!!

அட! பின்பு என்ன தான் செய்வது, சொரிய சொரிய சுகம் என சொரிந்தாலும், சொரிந்த பிறகு எரிச்சல் தான் அதிகமாகும். பேசும் போது சிரிப்பாக தான் இருக்கும். இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தான் அதன் அரிப்பு புரியும். மிகவும் கொடுமையானது தான் எங்கேயும் சென்று அவ்வளவு சீக்கிரமாக உட்கார்ந்து விடமாட்டார்கள் பிட்டத்தில் அரிப்பு மற்றும் எரிச்சல் உள்ளவர்கள். ஏனெனில், சடாரென்று எழுந்து அரிப்பை சரி செய்ய இயலாதல்லவா. இந்த பிரச்சனை எதன் காரணமாக வருகிறது என்று தெரிந்துக் கொள்ளுங்கள், தொடர்ந்து படியுங்கள்....

சிரங்கு நோயால் அவதிபடுகிறீர்களா? இதை படிங்க!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குத கட்டிகள்

குத கட்டிகள்

பிட்டத்தில் ஏற்படும் கட்டிகளினால் கூட உங்களுக்கு எரிச்சலும், அரிப்பும் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றது.

இரசாயன ஒவ்வாமை

இரசாயன ஒவ்வாமை

நீங்கள் உட்கொள்ளும் உணவு அல்லது ட்ரிங்க்ஸின் இரசாயன கலப்பின் ஒவ்வாமை காரணமாக கூட பிட்டத்தில் அரிப்பு ஏற்படலாம் என கூறப்படுகிறது. ஆனால், இதனால் ஏற்படும் அரிப்பு பிட்டத்தில் மட்டும் தான் ஏற்படும் என கூற முடியாது உடலின் வேறு பாகங்களிலும் கூட அரிப்பு, எரிச்சல் ஏற்படலாம்.

ஈஸ்ட் தொற்று

ஈஸ்ட் தொற்று

பெண்களுக்கு அவர்களது பிறப்புறுப்பில் ஏற்படும் ஈஸ்ட் தொற்றின் காரணமாக கூட பிட்டத்தில் அரிப்பும், எரிச்சலும் ஏற்படலாம் என கூறப்படுகிறது.

சரும கோளாறு

சரும கோளாறு

ஒருவேளை உங்களுக்கு, நீங்கள் உடுத்தும் உடை அல்லது பயன்படுத்தும் படுக்கையின் தரம் போன்றவற்றின் ஒவ்வாமையின் காரணமாக ஏற்படும் சரும கோளாறுகளின் காரணமாக கூட பிட்டத்தில் அரிப்பும், எரிச்சலும் ஏற்படும்.

வறட்சியான சருமம்

வறட்சியான சருமம்

வறட்சியான சருமம் கொண்டவர்களுக்கு கடினமான குளிர் மற்றும் வெயிலின் தாக்கம் ஏற்படும் போது சரும வறட்சி அதிகரிப்பதனால் பிட்டத்தில் அரிப்பும், எரிச்சலும் அதிகரிக்காலாம்.

வியர்வை

வியர்வை

அதிக அலைச்சலின் காரணமாக உடலில் வியர்வை கூடும் போது, அந்தரங்க இடத்தில் வியர்வை தங்கிடும் போது அரிப்பும், எரிச்சலும் பிட்டத்தில் ஏற்படலாம்.

ஃபைபர் உடை

ஃபைபர் உடை

சிலரது சருமத்திற்கு ஃபைபர் உள்ளாடைகள் ஒவ்வாமையை ஏற்படுத்தும். ஏனெனில், ஃபைபர் துணியினால் வியர்வையை உறிஞ்சிக் கொள்ளவும் முடியாது, வியர்வையை வெளியேறவும் விடாது. இதன் காரணமாக பிட்டத்தின் சருமத்தில் எரிச்சல்களும், அரிப்புகளும் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எனவே, முடிந்த வரை ஃபைபர் ஆடைகளை அணிவதை தவிர்த்திடுங்கள்.

சுத்தமாக கழுவ வேண்டும்

சுத்தமாக கழுவ வேண்டும்

அட! கழுவ கூடவா மாட்டார்கள் என எண்ண வேண்டாம். கழிவறை சென்று வரும் போது சரியாக கழுவவில்லை எனில் அதன் காரணமாக பிட்டத்தில் எரிச்சல்கள் ஏற்படுகின்றன.

குளித்த பின்பு நன்கு துடைக்கவும்

குளித்த பின்பு நன்கு துடைக்கவும்

பெரும்பாலானோர் செய்யும் மற்றுமொரு தவறு, குளித்து வந்த பின்பு அவர்களது அந்தரங்க இடங்களில் ஈரம் போகும் வரை துடைக்கமாடார்கள். இதன் காரணமாகவும் பிட்டத்தில் அரிப்பும், எரிச்சலும் ஏற்படும்.

ஒரே இடத்தில் உட்காரிந்திருப்பது

ஒரே இடத்தில் உட்காரிந்திருப்பது

ஒரு சிலர் ஒரே இடத்தில மணிக்கணக்காக அமர்ந்து இருப்பார்கள். இதன் காரணமாக வியர்வை வெளியேறாமல் அல்லது காயாமல் உங்கள் பிட்டத்திலேயே தங்கிட வாய்ப்பிருக்கிறது. இதன் காரணமாகவும் எரிச்சல் ஏற்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Story first published: Thursday, March 12, 2015, 13:11 [IST]
Subscribe Newsletter