For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  பி.எச்.டி படிச்சிருந்தாலும், கல்யாணமாயிட்டா, கூட படுக்க மட்டும் தான் பொண்டாட்டி...- My Story #162

  By Staff
  |

  கல்யாணம் செய்துக் கொள்ள வேண்டும் என்பது எனது நீண்டநாள் ஆசையாக இருந்தது.

  கல்லூரி முடிக்கும் போது என் வயது 21. படித்து முடித்த சில மாதங்களிலேயே என்னுடன் படித்த தோழிகள் பலருக்கும் கல்யாணமாக துவங்கியது. ஆகயால், எனக்கும் அவர்களை போல வாழ வேண்டும் என்ற ஆசை இருந்தது. நான் விரும்பும், கணவர், எங்கள் குழந்தை... என் குடும்பம் என ஒரு வாழ்க்கையை பற்றி நான் பெரும் கனவு கொண்டிருந்தேன்.

  ஆனால், என் அப்பா, அம்மாவை பொறுத்தவரை நான் ஒரு சிறு குழந்தை. எனக்கு இன்னும் திருமணம் செய்துக் கொள்ளும் அளவிற்கு பக்குவம் இல்லை என்று கூறினார்கள். ஆகையால் என ஆசைக் கனவுகள் கொஞ்ச காலம் தள்ளிப்போனது.

  நான் தொடர்ந்து சுதந்திரமாக இருந்தேன். மேற்படிப்புகள் தொடர்ந்து படித்து வந்தேன். அதே வேளையில் காதல் திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசையும் எனக்கு இருந்தது. ஆனால், எனது துரதிர்ஷ்டமோ என்னவோ, எனக்கு காதலே வரவில்லை... நான் விரும்பியது போல ஆண்மகன் என் கண்ணில் சிக்கவும் இல்லை.

  காதல் என்பது தானாக ஏற்பட வேண்டும் என்பதே எனது ஆசையாக இருந்ததால். அதை வலுக்கட்டாயமாக்க விரும்பவில்லை.

  இப்படியாக நிம்மதியாக சென்றுக் கொண்டிருந்த எனது வாழ்வில் ஓர் திடீர் திருப்பம் ஏற்பட்டது.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  25 வயதில்...

  25 வயதில்...

  அப்போது நான் எனது மேற்படிப்பை படித்துக் கொண்டிருந்தேன். திடீரென ஒரு நாள் அப்பா என்னிடம், உனக்கு வரன் பார்க்கிறோம். நீ திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்றார்.

  ஆனால், அந்த சமயத்தில் நான் சிங்கிள் வுமனாக எனது சுதந்திரத்தை அனுபவித்துக் கொண்டிருந்தேன். என் பெற்றோர் கூறியதைக் கொண்டு கொஞ்ச காலம் நான் தள்ளி வைத்திருந்த திருமணம் எனும் ஆசை கனவு. என்னைவிட்டு வெகுதூரம் தள்ளி சென்றிருந்த காதல் அதுவென கூறலாம்.

  நானாக விருப்பப்பட்ட போது வேண்டாம் என்ற எனது பெற்றோர்... நான் வேண்டாம் எனும் போது இதுதான் சரியான வயது என என்னை ஒப்புக்கொள்ள வைத்தனர்.

  நல்ல வரன்!

  நல்ல வரன்!

  என் பெற்றோர் என் முன் எப்போதுமே தவறான தேர்வை வைத்ததே இல்லை. படிப்பில் இருந்து, உடுத்தும் உடை, வாழும் வாழ்க்கை என திருமணம் வரை எனக்கான சரியான தேர்வையே அவர்கள் முன் வைத்தனர்.

  என் கணவரும் அப்படி தான். அவர் ஒன்றும் மோசமானவர் எல்லாம் இல்லை. இங்கே பிரச்சனை என்னவெனில், இன்றும் என் இந்திய சமூகத்தில் திருமணம் ஆகிவிட்டது எனில் மருமகள் வீட்டு வேலைக்காரியாக மாறிவிட வேண்டும் என்ற நிர்பந்தம் தான்.

  தேவதை!

  தேவதை!

  எங்கள் வீட்டில் இரு குழந்தைகள். என் அண்ணன் மற்றும் நான். என் அம்மா எங்களை வளர்த்த போது எந்த வேறுபாடும் காண்பித்து இல்லை. என் அண்ணனுக்கு கிடைக்கும் அனைத்து சலுகைகளும் எனக்கும் கிடைத்தன. சொல்லப் போனால் எங்கள் வீட்டில் அண்ணனை விட நானே செல்லமாக வளர்ந்தேன். கேட்டதை எல்லாம் செய்துக் கொடுத்தும் அம்மா, விருப்பத்தை நிறைவேற்றும் அப்பா என ஒரு தேவதையாகவே வளர்ந்து வந்தேன் நான்.

  வேலைக்காரி!

  வேலைக்காரி!

  ஆனால், திருமணமாகி சென்ற புகுந்த வீட்டில் நான் ஒரு வேலைக்காரி. கணவனுக்கு பசிக்கும் போது சுடசுட ஒருமுறை, மாமனாருக்கு பசிக்கும் பொது சுடசுட ஒருமுறை... மாமியார் மற்றும் எனக்கு பசிக்கும் போதென காலை உணவு தோசையாக இருந்தால்... ஒரு வேலையை நான்கு வேலையாக செய்ய வேண்டியது இந்திய வீடுகளில் மட்டுமே காண முடியும்.

  கடமை!?

  கடமை!?

  இதை ஒரு கடமையாக நான் செய்ய தயார் தான். ஆனால், நான் மட்டுமே செய்ய வேண்டும் என்ற நிர்பந்தம் என்ன. நானோ, மாமியாரோ இல்லை எனில், எனது மாமனார் அல்லது கணவர் சேர்ந்து ஒன்றாக சமைப்பார்கள். நன்றாகவே சமைத்து உண்பார்கள். அதை ஏன் நாங்கள் இருக்கும் ஓரிரு நாட்கள் செய்யக் கூடாது?

  அம்மா!

  அம்மா!

  ஒருவேளை எனது அம்மா எனக்கு ஓவர் செல்லம் கொடுத்துவிட்டாரோ என்ற கேள்வி என்னுள் எழும். ஆனால், அதில் தவறில்லை. நான் வெறுமென வீட்டில் அமர்ந்திருக்கும் ஜடம் என்றால் பரவாயில்லை.

  நான் படித்துக் கொண்டிருக்கிறேன்., எனக்கான கனவுகள், வேலை என பலவன இருக்கின்றன. இத்தனையையும் வைத்துக் கொண்டு.. வீட்டில் யார் உதவியும் இன்றி நானே அனைத்து வேலைகளும் செய்து முடிக்க வேண்டும். மீத நேரத்தில் படிக்க வேண்டும் என்பது சாத்தியமற்றது.

  நான் படிக்கிறேன் என்ற ஒரே காரணத்திற்க்காக பணிப்பெண் இருந்தாலும், எனக்கான உணவை அம்மாவே சமைத்து தருவார்.

  மாமியார்!

  மாமியார்!

  திருமணமான பின் ஒரு நாள், என் மாமியாரிடம், வார இறுதியில் நான் கூடுதலாக ஓரிரு மணிநேரம் தூங்குவேன் என்று சிரித்துக் கொண்டே கூறிவிட்டேன். உடனே அவருக்கு எங்கிருந்து வந்தது அவ்வளவு கோபம் என்று இன்றுவரையும் நான் வியந்துக் கொண்டிருக்கிறேன். அரைமணிநேரம் எனக்கு வாய் கிழிய அட்வைஸ் செய்தார்.

  ஆனால், அதே வார இறுதியில் சூரியன் உச்சியை கடக்கும் வரை அவரது மகன் குப்புறப்படுத்து உறங்கி கொண்டிருக்கிறாரே? அதை ஏன் அவர் கேள்விக் கேட்கவில்லை.

  பெண்கள் தூங்கினால் தான் லட்சுமி வரமாட்டாளா? ஆண்கள் தூங்கினால் லட்சுமி அட்ஜஸ்ட் செய்துக் கொள்வாளா?

  ஒருமுறை...

  ஒருமுறை...

  ஒருமுறை என்னை காண எனது அம்மா வந்திருந்தார். அந்த நாள் மட்டும் சமையல் அறைக்கு எனக்கு விடுப்பு. சோபாவில் அமர்ந்து எனது அம்மாவுடன் நிம்மதியாக பேச அனுமதித்தார் எனது மாமியார். என் அம்மா மாலை வீட்டில் இருந்து நகர்ந்தவுடன்... அதை செய், இதை செய்... பாத்திரங்களை உடனே கழுவி வை என அதிகாரம் செய்ய துவங்கிவிட்டார்...

  இதெல்லாம் என்ன மாதிரியான டிசைன். இதற்கு ஏன் திருமணம் செய்துக் கொள்ள வேண்டு. இதற்கு பதிலாக நான்கு வீட்டுக்கு பத்து பாத்திரம் தேய்க்க போய்வரலாம்.

  என் கணவர்...

  என் கணவர்...

  அனைத்தும் மேல் என் கணவர். மிகவும் அன்பானவர். அம்மாவுக்கு கொஞ்சம் கூடுதலாக. இதை தவறு என கூறவில்லை. அதற்காக என்னை வீட்டு வேலை செய்துக் கொண்டே இருக்க சொல்வது எல்லாம் சரியா? நீங்களும் வேலைக்கு போகிறீர்கள். வேலை மட்டுமின்றி நான் படித்துக் கொண்டும் இருக்கிறேன்.

  திருமணம் ஆனாலும் ஆண்கள் அப்படியே இருக்கலாம். பெண்கள் மட்டும் கூடுதல் கடமை எடுத்துக் கொல்லம் வேண்டும் என்பது சமநிலைக்கு எதிரானது இல்லையா?

  பெண் குழந்தை வேண்டாம்...

  பெண் குழந்தை வேண்டாம்...

  திருமணம் ஆனபிறகும், என் கணவர் பசி என்றால் சமைத்துக் கொடுக்க ஆள் இருக்கிறது. ஆனால், எனக்கு?

  இதுவும் ஒரு வகையில் மனிதத்தன்மையற்ற செயல் தான். நிச்சயம் எனக்கு பெண் குழந்தை வேண்டாம் என்றே நான் கடவுளிடம் வேண்டுகிறேன்.

  பாலூட்டி, தாலாட்டி, சீராட்டி தேவதை போல வளர்த்து அவளை, 25 ஆண்டுகளுக்கு பிறகு வேறொரு வீட்டுக்கு வேலைக்காரியாக அனுப்ப எனக்கு விருப்பம் இல்லை. அதே சமயத்தில் எனக்கு வரும் மருமகளையும் நான் இப்படி ட்ரீட் செய்ய மாட்டேன். இதில் மட்டும் நான் உறுதியாக இருக்கிறேன்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Why Still Our Indian Families Are Not Treating Boy and Girl Equally? - My Story!

  Why Still Our Indian Families Are Not Treating Boy and Girl Equally? - My Story!
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more