For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  70 வயதில் பேராசிரியருடன் என்.டி.ஆர்க்கு மலர்ந்த காதல் - பிளாஷ்பேக்!

  By Staff
  |

  நமக்கு இங்கே எம்.ஜி.ஆர் என்றால், தெலுங்கில் அவர்களுக்கு என்.டி.ஆர். சினிமாவிலும் சரி, அரசியலிலும் சரி இருவரும் அவரவர் மொழிகளில் சமப்பங்கு ஆளுமை செலுத்தியவர்கள்.

  என்டிஆரின் இயற்பெயர் நந்தமுரி தாரக ராமா ராவ். இவர் மனதேசம் என்ற படத்தில் 1949ம் ஆண்டு நடிகராக அறிமுகம் ஆனார். ஆரம்பத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழி படங்களிலும் நடித்து வந்தவர். பிறகு முழுக்க, முழுக்க தெலுங்கில் முழு கவனம் செலுத்தி ஆதிக்கம் நிறைந்த, மக்கள் செல்வாக்கு பெற்ற நடிகராக வளர்ந்தார்.

  தமிழில் இவர் நடித்த மாயா பஜார், லவகுசா, கர்ணன் (கண்ணன் வேடத்தில் நடித்திருப்பார்), பணம் படுத்தும் பாடு மற்றும் பாதாள பைரவி போன்ற படங்கள் மிகவும் பிரபலமானவை ஆகும்.

  என்டிஆர் திரைக்கு வரும் முன்னரே 1942ம் ஆண்டு திருமணம் செய்திருந்தவர். இவரது முதல் மனைவி பெயர் பசவ தாரகம் ஆகும். என்டிஆரின் முதல் மனைவி 1985ம் ஆண்டு புற்றுநோய் காரணத்தால் மரணம் அடைந்தார். இவரது மரணத்திற்கு பிறகு பசவதாரகம் இந்தோ-அமெரிக்கா புற்றுநோய் மருத்துவமனையை ஐதராபாத்தில் 1986ல் திறந்தார் என்டிஆர்.

  மனைவியின் பிரிவிற்கு பிறகு, பசவ தாரகம் மூலம் தனக்கு பிறந்த 11 மகன், மகள்கள் மற்றும் முப்பதுக்கும் மேற்ப்பட்ட பேரக்குழந்தைகளுடன் என்டிஆர் வாழ்ந்து வந்தார்.

  யாருமே எதிர்பாராத தருணத்தில்... என்டிஆர் வாழ்வில் ஒரு கட்டத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டது...

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  முதல் சந்திப்பு...

  முதல் சந்திப்பு...

  லக்ஷ்மி சிவபார்வதி, இவர் ஒரு கல்லூரி பேராசிரியர் மற்றும் எழுத்தாளர். சிறு வயது முதலே என்டிஆரின் கோடான கோடி ரசிகர்களில் சிவபார்வதியும் ஒருவர். அவரது அழகு, நடிப்பின் மீது தீராத காதல் கொண்டிருந்தவர்.

  இவர்கள் இருவரும் ஒரு கல்லூரி விழாவில் தான் முதன் முதலாக சந்தித்துக் கொண்டனர். ஒருமுறை என்டிஆரை சந்தித்து அவரது வாழ்க்கை வரலாற்றை இரு பாகங்களாக எழுத விரும்புவதாகவும். அது சார்ந்த தகவல்களுக்காக அவரை சந்திக்க அனுமதி வேண்டும் என்றும் கேட்டார் சிவபார்வதி.

  அரசியல் வாழ்க்கை!

  அரசியல் வாழ்க்கை!

  இந்திரா காந்தி மறைவிற்கு பிறகு ராஜீவ் காந்தி பாராளுமன்ற தேர்தலை சந்தித்து பெரும்பான்மையான முறையில் வெற்றிப் பெற்றார். ஆனால், அந்த சமயத்தில் (அன்றைய) ஆந்திராவில் மட்டும் என்டிஆரின் தெலுங்கு தேசம் கட்சி ஒட்டுமொத்த 42 தொகுதிகளில் 30 இடங்களை வென்று சாதித்தது.

  இதனால் மக்கள் மத்தியில் தனக்கு இருக்கும் செல்வாக்கை உணர்ந்து. 1985ம் வருடம் சட்டசபை தேர்தலை முன்கூட்டியே ஏற்படுத்தி பெரும்பான்மையில் வெற்றிக் கண்டார் என்டிஆர். ஆனால், அதற்கு அடுத்த தேர்தலில் அவர் பெரும் தோல்வி அடைந்தார்.

  திருப்பம்...

  திருப்பம்...

  மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் இருந்த போதுதான். என்டிஆர் மற்றும் சிவபார்வதி மத்தியில் தொடர்பு இருப்பதாக கிசுகிசுக்கள் வர துவங்கின. ஆரம்பத்தில் இதற்கு இருவரும் மறுப்பு தெரிவித்தாலும். என்டிஆரின் கடைசி படத்திற்கு முந்தைய படமான மேஜர் சந்திரகாந்த் படத்தின் வெற்றி நூறாவது நாள் வெற்றிவிழாவின் போது மேடையில் என்டிஆர் தான் சிவபார்வதியை மறுமணம் செய்துக் கொள்ள போவதாக பகிரங்கமாக அறிவித்தார். இது தெலுங்கு தேசம் கட்சியினர் மற்றும் என்டிஆரின் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை அளித்தது.

  முடிவு!

  முடிவு!

  இரண்டு முறை முதல்வராக இருந்தவர், 70 வயது சூப்பர்ஸ்டார் நடிகர் இந்த வயதில் இரண்டாவது திருமணம் செய்துக் கொள்வதை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

  என்டிஆரின் குடும்பத்தார், கட்சியினை சேர்ந்த மூத்த நிர்வாகிகள் முதல் கடைக்கோடி தொண்டன் வரை பெரும்பாலானோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், சிவபார்வதியை திருமணம் செய்துக் கொள்வதில் தீர்க்கமாக இருந்தார் என்டிஆர்.

  திருமணம்!

  திருமணம்!

  11-9-1993 அன்று சிவபார்வதியை இரண்டாவதாக திருமணம் செய்துக் கொண்டார் என்டிஆர். தான் மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் மறுமணம் செய்துக் கொள்ள வேண்டும் என ஜோதிடர்கள் கூறியதால் தான் என்டிஆர் மறுமணம் செய்துக் கொண்டார் என்றும் சில வதந்திகள் கிளம்பின.

  ஆனால், 70வது வயதில் பிள்ளை வரம் வேண்டி என்டிஆர் வேண்டினார் என்று வந்த தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

  வெற்றி!

  வெற்றி!

  ஜோதிடர்கள் கூறியதன் படி பெரும் பரபரப்பை, சர்ச்சையை ஏற்படுத்திய பிறகும் கூட தெலுங்கு தேசம் கட்சியானது 1994ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வெற்றிப்பெற்று ஆட்சியைப் பிடித்தது. மூன்றாவது முறையாக என்டிஆர் முதலமைச்சர் பதவி ஏற்றார்.

  ஆனால், அப்போது லக்ஷ்மி சிவபார்வதியின் ஆதிக்கம் கட்சிக்குள் தலைத்தூக்க ஆரம்பித்ததால், இன்றைய ஆந்திர முதல்வரும் தெலுங்கு தேச கட்சி தலைவரும், என்டிஆரின் மருமகனும் ஆன சந்திரபாபு நாயிடு மற்றும் சிலர் கட்சியில் பிளவு ஏற்படுத்தி இரண்டாக பிரித்தனர்.

  ராஜினாமா!

  ராஜினாமா!

  1995ம் ஆண்டு என்டிஆர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். சட்டசபையில் வாக்கெடுப்பு நடத்தி சந்திரபாபு நாயிடு முதல்வராக தேர்வானார்.

  1996ம் ஆண்டு ஜனவரி மாதம் 18ம் நாள் என்டிஆர் மரணம் அடைந்தார். என்டிஆரின் மரணத்திற்கு பிறகு தெலுங்கு தேசம் கட்சியை தன்வசப்படுத்திக் கொள்ள முயற்சித்தார். ஆனால் சந்திரபாபு நாயிடு கட்சியை ஒன்றாக்கி அதன் தலைவராக உருவானார்.

  சர்ச்சை இயக்குனர்!

  சர்ச்சை இயக்குனர்!

  சென்ற வருடம் இந்தியாவின் சர்ச்சை இயக்குனரான ராம் கோபால் வர்மா. என்டிஆர் - லக்ஷ்மி சிவபார்வதி இருவரின் காதலை திரைப்படமாக எடுக்கவிருப்பதாக அறிவிப்பு வெளியிட்டார்.

  அப்போது சிவபார்வதி இதுகுறித்து தன்னிடம் யாரும் பேசவில்லை. என்டிஆரின் வாழ்க்கை வரலாறு படமாகும் பட்சத்தில் அதில் உண்மை தகவல்கள் வெளிவர வேண்டும். அவரை முதுகில் குத்தியவர்களின் உண்மை முகத்தை கிழித்தெறிய வேண்டும் என்று ஆவேசமாக பேசினார்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Flashback: A Love That Blossomed on 70 Years Old NT Rama Rao with Laxmi Parvathi!

  Flashback: A Love That Blossomed on 70 Years Old NT Rama Rao with Laxmi Parvathi, Who Written His 2 Volumes of Biography.
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more