For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நிச்சயதார்த்தம் முடிந்தாலும், திருமணத்திற்கு முன் அது வேண்டாம் - My Story #037

நிச்சயதார்த்தம் முடிந்தாலும், திருமணத்திற்கு முன் அது வேண்டாம் - My Story #037

|

"நீ நல்ல பாடுற...." இதுதான் அவன் என்னிடம் பேசிய முதல் வார்த்தை. அது தான் எங்கள் முதல் சந்திப்பு. என் லைவ் கான்சர்ட்டிற்கு அவன் வந்திருந்தான். நான் பாடி முடித்த பிறகு இதை என்னிடம் அவன் கூறினான். எனது வெற்றிக்கு வாழ்த்து கூறினான் சிரித்தான்.

அந்த சிரிப்பில் ஒரு மந்திரம் இருந்தது. அவனது சிரிப்பு யாராக இருந்தாலும், அவர்களது பிரச்சனை எவ்வளவு பெரிதாக இருந்தாலும், அதை தீர்க்கும்., மறக்கடிக்கும் மருந்து போல இருந்தது. அன்று எனது பாட்டில் அனைவரும் மயங்கினார்கள். அவனது சிரிப்பில் நான் மயங்கினேன்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஏக்கத்துடன் கண்கள்...

ஏக்கத்துடன் கண்கள்...

அவனது கண்களில் ஒரு விதமான ஏக்கம் தென்பட்டது. அதற்குள் ஏதோ இரகசியங்கள் புதைந்திருப்பதை நான் உணர்ந்தேன். மீண்டும் சிரித்தான் நன்றி கூறினான். மதன் கார்க்கியின் "சிரிப்பால் எனை நீ சிதைத்தாய் போதும்..." என்ற வரிகளின் உணர்வு என்னுள்.

"பிறகு, நீ மும்பையில் வசிக்கிறாயா... " என்று வினாவினான்...

"ஆம்..., நீ" என்றேன்...

தலையை ஆட்டினான்... நேரம் தாமதம் ஆனது போல, கிளம்பிவிட்டான்.

முதல் பார்வையில்...

முதல் பார்வையில்...

இதை தான் முதல் பார்வையில் காதல் என்கிறார்களா என்ற சந்தேகம் மனதிற்குள். அவனை பற்றி எண்ணாமல் அந்த இரவை என்னால் கழிக்க முடியாவில்லை. அவன் பெயர் என்னவென்று தெரியாத போதிலும், அவனை சமூக ஊடகங்களில் தேட துவங்கினேன்.

நாட்கள் கழிந்தன ஆனால், அவனது சிரிப்பும், அந்த முகமும் என்னை விட்டு ஒரு அங்குலம் கூட நகரவில்லை.

ஒரு வாரம்..

ஒரு வாரம்..

ஒரு வாரம் கழிந்தது... நான் மற்றுமொரு கான்சர்ட்டில் பாட சென்றிருந்தேன். ரொமாண்டிக் பாடல்களை ஏனோ தானோ என பாடிக் கொண்டிருந்தேன். என் எண்ணம் எல்லாம் அவன் இந்த காசர்ட்டிற்கு வந்திருப்பானா என்பதிலேயே அலைபாய்ந்து கொண்டிருந்தது. அந்த கான்சர்ட் முழுவதும் அவனை தேடிக் கொண்டே இருந்தேன்.

கான்சர்ட் முற்றிலும் முடிந்தது....

ஒரு குரல்...

ஒரு குரல்...

கான்சர்ட் முடிந்து எல்லாரும் கிளம்பிக் கொண்டிருந்த நேரம்.

"நிஜமாவே நீ ரொம்ப நல்லா பாடுன..."

ஆம்! அது அவனுடைய குரல் தான். ஆனந்தத்துடன் திரும்பி பார்த்தேன். அவனை கண்டத்தில் எனக்கு ஒரு வியப்பு, ஆச்சரியம், மகிழ்ச்சி. அந்த நொடியில் நான் கொண்ட ஆனந்தத்திற்கு எல்லையே இல்லை என கூறலாம்.

"நான் இங்க பாடுறேன்னு உனக்கு எப்படி தெரியும்?"

"அத எல்லாம் கேட்காத, மறந்திடு..." என நெளிந்தவாரு மெல்லிய குரலில் கூறினான். "சரி, டின்னர் சாப்பிட போலாமா.." என அவன் கேட்டது கேள்வி. பிறகு நடந்தது எல்லாம் சுகமான நினைவுகள்.

டின்னர்!

டின்னர்!

யார் என்று தெரியாத ஒரு நபருடன். இரண்டு முறை சந்தித்த எனக்கு பிடித்தவனுடன் டின்னர் சென்றேன். அவனது பெயர் கூட தெரியாது. அந்த டின்னருக்கு பிறகு நிறைய காபிகள், பல மணிநேரம் தொடர்ந்த போன் கால்கள் என என் காலம் பொன்னான நாட்களாக கழிந்தன. சில சமயம் நாங்கள் பார்த்துக் கொண்டதே இல்லை. ஆனால், அளவில்லாமல் பேசிக் கொள்வோம்.

அவன் ஒரு ஜென்டில்மேன், அழகானவன். சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், நான் விரும்பும் அனைத்து குணங்களும் கொண்டவன். எங்கள் உறவு மூன்று மாதங்கள் கடந்திருந்தது. பெற்றோரிடம் கூறிவிடலாம் என முடிவு செய்தோம். எங்கள் பெற்றோருக்கும் எங்களை பிடித்திருந்தது. மிக விரைவாக எங்கள் நிச்சயதார்த்த நாள் முடிவு செய்யப்பட்டது.

கனவு போல....

கனவு போல....

எனக்கு பிடித்த ஆண், மிக குறுகிய காலத்தில் நட்பு, காதல் என மலர்ந்து.. இப்போது திருமணத்தில் இணைய போகிறோம். இந்த மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொள்ள வார்த்தைகளோ இல்லை. அனைத்தும் கச்சிதமாக சென்று கொண்டிருந்தது.

என்னை மிகவும் சந்தோஷமாக பார்த்துக் கொண்டான். எனது தவறுகளை திருத்துவான், அதை பெரிது படுத்தமாட்டான். என்னில் இருக்கும் நல்லதை மட்டுமே கண்டு காதலித்தான்.

எனது நண்பர்கள் அவனை உடல் எடை அதிகமாக இருப்பதாகவும், வயதானது போல இருப்பதாகவும் கூறுவார்கள். ஆனால், அதை நான் பொருட்படுத்தியதே இல்லை.

நிச்சயம்!

நிச்சயம்!

எங்கள் நிச்சய நாள் நெருங்கியது. உடைகள் வாங்க சென்றேன். எங்கள் இருவருக்குமான உடைகளை நானே தேர்வு செய்தேன். எங்கள் நிச்சயத்திற்கு மிக நெருங்கிய குறைவான நபர்களை மட்டுமே அழைத்திருந்தோம். நிச்சயம் மிக நல்லப்படியாக நடந்தது.

எனக்கு பிடித்தமான விதத்தில் நிச்சய மோதிரம் அணிவித்தான். என்னை ஆச்சரியப்படுத்த அவன் என்றுமே தவறியதில்லை. என்னை ஒரு இளவரசி போல உணர வைத்தான். நான் கொடுத்து வைத்தவள் என உணர்ந்தேன்.

டேட்டிங்!

டேட்டிங்!

எங்கள் பெற்றோர் அனுமதியுடன் நிச்சயம் ஆன நாள் இரவு வெளியே டேட்டிங் சென்றோம். ஒரூ யாச் ஏற்பாடு செய்திருந்தான். எங்கள் நிச்சயதார்த்தத்தை அங்கே கொண்டாடினோம். அந்த இரவு மிக அழகாக கழிந்தது.

என்னை அவன் முத்தமிட்டான். அது தான் முதல் முறை. அன்று நாங்கள் இருவரும் ஒன்றாக உறங்கினோம். பிறகு, நாங்கள் இருவரும் அவரவர் வீடுகளுக்கு சென்றோம். அந்த இரவிற்கு பிறகு எதுவும் பெரிதாக மாறவில்லை. அதன் பிறகு நாங்கள் சந்திக்கும் போதெல்லாம், அவன் எப்போதும் போலவே என்னை கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டிருப்பான்.

ஷாப்பிங்!

ஷாப்பிங்!

ஒருநாள் எப்போதும் போல சாதரணமாக ஷாப்பிங் சென்றோம். திடீரென...

"இதெல்லாம் நடக்காமல் இருந்திருந்தால்... எப்படி இருக்கும்.." என அதிர்ச்சியளிக்கும் படி கேட்டான்.

"எனக்கு புரியல..."

"இந்த கல்யாணம் நாடகாம இருந்தான்னு சொன்னேன்.."

(எனக்கு தலை சுற்ற ஆரம்பித்தது...) என்ன சொல்வது என தெரியவில்லை. கண்ணீர் நிரம்பியது...

"ஹே! நா சும்மா சொன்னேன்.... ஃப்ரியா விடு.." என்றான்.

என்னால் அதை சும்மா என எடுத்துக் கொள்ள முடியவில்லை. அவன் கூறியதை மறக்கவும் முடியவில்லை. அதன் பிறகு அவன் கால் செய்வான். ஆனால், அதிகம் பேச மாட்டான்.

மாற்றம்!

மாற்றம்!

மிக விரைவில் கிடைத்த கனவுகள், நிறைவேறும் தருவாயில் தகர்ந்து போவது போல உணர துவங்கினேன்.

மீண்டும் ஒரு முறை கால் செய்தான். அவன் கூறிய பதில் என்னை முழுவதுமாக உடைந்து போக செய்தது.

"சாரி, நாம ஒண்ணா இருக்க முடியாது. இத உன்கிட்ட எப்போவோ சொல்லலாம்னு இருந்தேன். ஆனா முடியல. உனக்கு மேட்ச்சான பர்சன் நானான்னு எனக்கு தெரியல. உனக்கு நிச்சயம் ஒரு நல்ல பையன் கிடைப்பான். ப்ளீஸ் உன்னால முடிஞ்சா என்ன மன்னிச்சிடு..."

(அழைப்பு துண்டித்தது..., உறவும்)

மன்னிப்பதா, மறப்பதா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Real Story: In a Celebration Mood, We Slept Together After Our Engagement!

Real Story: In a Celebration Mood, We Slept Together After Our Engagement!
Desktop Bottom Promotion