For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எல்லாரும் அனுபவிக்க நினைச்சாங்க, அவன் மட்டும் தான் புரிஞ்சிக்கிட்டான் - My Story #102

எல்லாரும் அனுபவிக்க நினைச்சாங்க, அவன் மட்டும் தான் புரிஞ்சிக்கிட்டான் - My Story #102

|

நீங்க ஒரு பொண்ண பார்த்து... அல்ட்ரா மாடர்ன்னு போல இவன்னு நெனச்சீங்கன்னா... ஹ்ம்ம்... நான் பார்க்க அப்படி தான் இருப்பேன். இப்போ எனக்கு 24 வயசாச்சு. ஒரு நல்ல ஐடி கம்பெனியில நல்ல வேலையில இருக்கேன். எனக்கு ரைட்டுன்னு பட்ட வாழ்க்க தப்புன்னு அவன் சொல்ற வரைக்கும் என தெரியல.

எங்க வீட்டுல மொத்தம் நாலு பேரு. நான், அக்கா, தங்கச்சி, அப்பா. தங்கச்சி பிறந்த நாலு வருஷத்துல அம்மா இறந்துட்டாங்க. அப்பாவுக்கு பிஸ்னஸ் தான் எல்லாமே. அம்மா இறந்ததுல இருந்து எங்க மூணு பேர் மேலயும் அதிகமா அக்கறை எடுத்துக்கிட்டாரு.

அம்மா இல்லாத குறை இருக்கக் கூடாதுன்னு கேட்கிறது எல்லாம் வங்கி தருவாரு. அதனால, எது தப்பு, எது ரைட்டுன்னு எனக்கு தெரியாது. எனக்கும், தங்கச்சிக்கும் அக்கா தான் அம்மா மாதிரி. உடல் ரீதியான மாற்றங்கள்ள இருந்து, மன ரீதியான மாற்றங்கள்ன்னு எல்லாத்துலையும் எங்கள Safe Guard பண்ணது என் அக்கா தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெளியூர்!

வெளியூர்!

இப்படி அம்மாவா இருந்த அக்கா, காலேஜ் படிச்சு முடிச்சு வெளியூர்க்கு வேலைக்கு போயிட்டா. அதுக்கு அப்பறம் என்ன கட்டுப்படுத்தவோ, நல்லது, கெட்டது சொல்லவோ யாரும் இல்ல. மாசம் ஒருமுறை தான் வருவா. அப்போ நான் சமத்து புள்ளையாட்டம் இருந்துப்பேன். இப்படி போயிட்டு இருந்த வாழ்க்கையில அந்த முதல் காதல் வந்துச்சு. ரொம்ப சீக்கிரமாவே.

15 வயசு!

15 வயசு!

அப்போ எனக்கு 15 வயசு. 11 படிச்சுட்டு இருந்தேன். என் ஸ்கூல் ரோடு முனையில தான் அவன் வர்க்ஷாப் வெச்சிருந்தான். ஒவ்வொரு முறை அதைத்தாண்டி போகும்போதெல்லாம் பார்த்துட்டே இருப்பான். சில சமயம் நானும் என் தங்கச்சியும் ஆட்டோக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கும் போது ஸ்டைலா பைக் ஓட்டிட்டு எங்கள கிராஸ் பண்ணிட்டு போவான்.

அழுக்கு பையன்!

அழுக்கு பையன்!

அவன் ரொம்ப ஹேண்ட்சம் எல்லாம் இல்ல. அழுக்கு பேன்ட்-ஷர்ட் போட்டுட்டு எப்பவும் சுத்துவான். ஆனா அவன் ஸ்டைலே பைக் ஓட்டுறது தான். அதுதான் அவன் மேல ஒரு ஈரப்ப ஏற்படுத்துச்சு. சொல்ல போனா காதல் படம் மாதிரியான லவ் தான். ரொம்ப நல்லவன் அவன். கொஞ்ச நாள் இப்படியே போச்சு. பின்ன, எனக்கு ஸ்பெஷல் கிளாஸ் இருக்குன்னு சொல்லி ஆட்டோல போகாம சைக்கிள்ல போக ஆரம்பிச்சேன். அவன் கூட டைம் ஸ்பென்ட் பண்ண அப்பதான் நேரம் கிடைச்சது.

பைக் ரைடு!

பைக் ரைடு!

சனிக்கிழமையானா ஸ்பெஷல் கிளாஸ்ன்னு சொல்லிட்டு அவன் கூட பைக் ரைடு போவேன். பாதி நாள் பைக் ரைடுலையே போகும். அது ஒரு புது விதமான ஃபீலிங். என்ன பயமுறுத்த வேண்டும்னே வீலிங் பண்ணுவன். அத நான் என் ஃபிரெண்ட்ஸ்கிட்ட ரொம்ப பெருமையா சொல்லுவேன். அவங்களுக்கு இதெல்லாம் புதுசா இருந்துச்சு. ரொம்ப ஆச்சரியமா கேட்பாங்க.

காலேஜ்!

காலேஜ்!

அந்த ரெண்டு வருஷம் நாங்க போன பைக் ரைடு போலவே ரொம்ப ஸ்பீடா போச்சு. பின்ன காலேஜ்! என் லைப் மாடர்னா மாறினது இங்க தான். என்ன எல்லாரும் பார்க்கணும்னு ஒரு எண்ணம் வந்ததும் அங்க தான். எனக்கு நிறையா ஃபிரெண்ட்ஸ் அமைஞ்சதும் காலேஜ்ல தான். இதெல்லாம் என் லவ்வருக்கு பிடிக்கல. இதுனால அப்பப்போ எங்களுக்குள்ள சண்டை வரும். ஆனா ரெண்டு நாளுக்கு மேல நாங்க சண்டை போட்டது இல்ல. இல்லனாலும், அவன் என் காலேஜ் முன்னாடி வந்திருவான்.

ஃபேஷன்!

ஃபேஷன்!

என் கிளாஸ்ல ஒரு பொண்ணு இருந்தா. அவ ரொம்ப நார்மலா தான் டிரெஸ் பண்ணுவா. ஆனா, எல்லாருக்கும் அவள பிடிச்சிருந்தது. ஏன்னா, அவ அவ்வளோ அழகு. அதனால, எல்லாரும் என்னையும் பார்க்கணும்னு ஃபேஷன்ற பேருல நிறையா பண்ணியிருக்கேன். அப்போ பசங்க என்ன பார்த்தாலும், அவங்க என் மேல வெச்சிருந்த பார்வை என்னன்னு எனக்கு அப்போ புரியல.

தகுதி?

தகுதி?

இதெல்லாம் வேண்டாம்னு அடிக்கடி என் லவ்வர் சண்டை போடுவான். உனக்கென்ன ஃபேஷன் தெரியும்னு சண்டை போடுவோம். அதுவரைக்கும் அவன் மெக்கானிக்ங்கிற விஷயம் எனக்கு பெரிசாப்படல. இந்த சண்டையும். காலேஜ் லாஸ்ட் இயர்ல நான் பிளேஸ் ஆன கம்பெனியும், எனக்கு கிடைச்ச ஆபரும்... அவனோட தகுதிய எண்ணிப்பார்க்க வெச்சது.

சண்டை!

சண்டை!

சின்ன, சின்ன விஷயத்துக்கு எல்லாம் சண்டைப் போட்டேன். என்னோட ஒரு குறிக்கோள், அவனைவிட்டு வெளிய வரணும். ஒருக்கட்டத்துல என்னையும், என் சண்டையையும் தாங்கிக்க முடியாம அவன் என்னைவிட்டு போயிட்டான். அப்போ நான் நிம்மதின்னு நெனச்சது எவ்வளோ பெரிய தப்புன்னு பின்னாடி தான் புரிஞ்சுக்கிட்டேன்.

அப்பா உடல்நிலை!

அப்பா உடல்நிலை!

எனக்கு பெங்களூர் வேலை. அக்காவுக்கு ஐதராபாத். ரெண்டு பேர் வெளியூர்ல இருந்தோம். தங்கச்சி ஸ்கூல்ல ஃபைனல் இயர். இதுக்கு நடுவுல அப்பாவுக்கு உடம்பு சரியில்ல. அக்கா தன்னோட வேலைய விட்டுட்டு அப்பாவ பார்த்துக்க ஊருக்கு வந்துட்டா. அப்போ அக்காவுக்கு கல்யாண பேச்சும் போய்ட்டு இருந்ததது.

தீண்டல்...

தீண்டல்...

புது ஊர், புது வேலை, புது வாழ்க்கைன்னு நான் என்ஜாய் பண்ணிட்டு இருந்தேன்.

நான் ஃபேஷனா இருக்கேன், எல்லார் கிட்டயும் சிரிச்சு, சிரிச்சு பேசுறேன்னு என்கிட்டே ஃபிரண்ட்ஸ்ங்கிற பேருல சிலர் ரொம்ப நெருக்கம் காண்பிக்க ஆரம்பிச்சாங்க. அவங்க பழக்கம் தப்பா இருந்துச்சு. சோசியலிசம்ன்னு சொல்லிட்டு தோள்மேல கைப்போட்டு, கட்டிப்பிடிக்கிறது போட்டோ எடுக்கிறதுன்னு பழகுனாங்க. இதெல்லாம் சாதாரணம்ன்னு நெனச்சேன். ஆனா, அவங்க என்கிட்டே எதிர்பார்த்தது வேற. மொத்தமா அவங்ககிட்ட இருந்து ஒதுங்கிட்டேன். இதெல்லாம் நான் வேலைக்கு ஜாயின் பண்ண ரெண்டே வருஷத்துல நடந்துச்சு.

புரிதல்!

புரிதல்!

22 வயசு! எல்லாத்தையும் நாம ரைட்டுன்னு நெனைக்க முடியாது. ஒரே விஷயத்து மேல ஒவ்வொருத்தரோட பார்வை வேற மாதிரி இருக்கும்னு அப்போ தான் நெனச்சேன். ஒரு நாள் ஆபீஸ்ல என் ஃபிரெண்ட் ஒருத்திய மீட் பண்ண அவளோட கேபினுக்கு போனேன். அவ மீட்டிங்க்ல இருந்தாள். அவ வர வரைக்கும் அவ கேபின்லையே உட்கார்ந்துட்டு இருந்தேன்.

ஃபேஸ்புக் மெசேஜ்

ஃபேஸ்புக் மெசேஜ்

அவ டெஸ்க்டாப்ல ஃபேஸ்புக்ல இருந்து மெசேஜ் வந்துட்டே இருந்துச்சு. எங்க காமன் ஃபிரெண்ட் ஒருத்திதான் மெசேஜ் பண்ணிட்டு இருந்தா. அதனால, சரி ரிப்ளை பண்ணலாம்ன்னு போனப்ப தான் எனக்கான முதல் அதிர்ச்சு காத்திருந்தது. அவ மெசஜ் பண்ணது என்ன பத்தி. அவங்க ரெண்டு பேருமே என்னபத்தி நிறையா அசிங்கமா பேசிருக்காங்கன்னு மொத்த சாட்டும் படிச்சு தெரிஞ்சுக்கிட்டேன்.

பிஹேவியர்!

பிஹேவியர்!

என் ஃபிரெண்ட்ஸ் ரெண்டு பேரே என்னப்பத்தி தப்பா பேசினது என்னால தாங்கிக்க முடியல.

நான் ரெண்டு மூணு மாசத்துக்கு ஒருமுறை தான் ஊருக்கு போயிட்டு இருந்தேன். இந்த சம்பவம் என் மனச ரொம்ப பாதிச்சதால, ஒரு வாரம் லீவ் போட்டுட்டு ஊருக்கு போயிட்டேன்.

அங்க என்னோட ஸ்கூல், காலேஜ் ஃபிரெண்ட்ஸ்ல சில பேருக்கிட்ட இந்த இன்சிடன்ட் பத்தி சொல்லி ஃபீல் பண்ணேன். அப்போ தான் என் காலேஜ் ஃபிரெண்ட் ஒருத்தி... காலேஜ்லயும் பலபேர் என்ன இப்படி தான் நெனச்சுக்கிட்டு இருந்தாங்கன்னு தெரிஞ்சுது.

அழுகை!

அழுகை!

ஒருபக்கம் அழுகையா வந்துச்சு.. இன்னொரு பக்கம் கோபமா வந்துச்சு. நானும் என் லவ்வரும் பலமுறை பைக் ரைடு போயிருக்கோம், வெளிய போயிருக்கோம். அவன் எனக்கிட்ட ஒருமுறை கூட தப்பா நடந்துக்கிட்டதே இல்ல. ஆனா, இவங்க என்னோட டிரேசிங் சென்ஸ், மேக்கப் மட்டுமே வெச்சு நான் மோசமானவன்னு ஊர் முழுக்க பேசிக்கிட்டு இருக்காங்க.

மீண்டும் அவன்!

மீண்டும் அவன்!

யார்கிட்ட போயி இதெல்லாம் சொல்றதுன்னு தெரியல. ஒரு வாரம் முழுக்க ஓருல தனியாவே இருந்தேன். லாஸ்ட் தே திரும்ப வேலையில ஜாயின் பண்ண டிரெஸ் எல்லாம் பேக் பண்ணிட்டு இருந்தப்ப ஃபேஸ்புக்ல ஒரு நோட்டிபிகேஷன். என் லவ்வர் எனக்கு ஃபிரெண்ட்ஷிப் ரெக்வஸ்ட் சென்ட் பண்ணிருந்தான். எந்த பிகுவும் இல்லாம, அக்சப்ட் பண்ணேன்.

மொபைல் நம்பர் சென்ட் பண்ணேன். ஆனா, அவன் நம்பர் சென்ட் பண்ணல. சரி, அவனுக்கும் பிடிக்கலன்னு நெனச்சேன். பத்து நிமிஷம் கழிச்சு அவனோட அதே பழைய நம்பர்ல இருந்த கால் வந்துச்சு. அவன் குரல கேட்டதும் எனக்கு அழுகை தான் வந்துச்சு. நான் அவன ஒரு மெக்கானிக்ன்னு நெனச்சேன். அழகு தான் முக்கியம்னு நெனச்சேன். ஆனா, அவன்... நான் கண்டிப்பா ஒருநாள் அவன புரிஞ்சுட்டு திரும்ப வருவேன்னு காத்துட்டு இருந்திருக்கான்.

நிரந்தரம்!

நிரந்தரம்!

என்னோட ஃபர்ஸ்ட் லவ், கடைசி லவ் எல்லாமே அவன் தான். இப்போ எனக்கு 24 வயசு. அவனுக்கு 28. அக்காவுக்கு மாப்பிள்ளை பார்த்தாச்சு, இன்னும் ஆறு மாசத்துல கல்யாணம். அவளோட கல்யாணம் முடிஞ்ச பின்ன தான் எங்க லவ் பத்தி வீட்டுல சொல்லணும்..

வாழ்க்கையில அழகு, அதிகாரம், செல்வாக்கு எதுவுமே நிரந்தரம் இல்ல. காதல்... உண்மையான காதல்... அது மட்டும் தான் நிரந்தரம். எத மிஸ் பண்ணாலும் திரும்ப வாங்கிறலாம். ஆனா, உண்மையான காதல் திரும்ப கிடைக்கிறது கஷ்டம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

My Story: First and Last Love of My Life!

My Story: First and Last Love of My Life!
Desktop Bottom Promotion