ஆண்கள் எந்த விஷயத்தில் எல்லாம் 'பக்காவா' இருந்தா பெண்களுக்கு பிடிக்கும்னு தெரியுமா...?

Posted By:
Subscribe to Boldsky

ஓர் காலத்தில் ஆண்களை எதிர்த்து மூச்சு கூட விட முடியாத சூழலில் தான் பெண்கள் சமையலறைகளில் பூட்டி வைக்கப் பட்டிருந்தனர். ஐ.டி. என்ற மாய மந்திர சொல் தான் அவர்களை வெளியுலகிற்கு கொண்டு வந்தது என்று சொல்வது மிகையாகாது. இன்று ஆண்களுக்கு நிகராய் மட்டுமல்ல மெட்ரோபாலிட்டன் நகரங்களில் அவர்களையும் மிஞ்சி நிற்கின்றனர் பெண்கள்.

இன்றைய தம்பதியர்கள் தங்கள் துணையிடம் மறைக்கும் அதிர்ச்சிகரமான விஷயங்கள்!!!

அறுசுவையிலும், சுத்தபத்ததிலும் பக்காவாக இருகின்றனரோ இல்லையோ, இந்த காலத்து பெண்கள் அறிவியலிலும் செக்ஸிலும் மிக பக்காவாக இருக்கின்றனர். ஆண்களே கொஞ்சம் ஓரங்கட்டி நிற்க வேண்டும் பெண்களின் இந்த அறிவு கூர்மைக்கு முன். முன்பெல்லாம் ஆண்கள் தான் பெண்களிடம் பாட தெரியுமா, ஆட தெரியுமா, சமைக்க தெரியுமா என கேள்வி கேட்டுக் கொண்டிருந்தனர்.

பொண்ணுங்க கிட்ட பசங்க எதிர்ப்பாக்குற அழகு என்னன்னு தெரியுமா...!

இப்போது, காலம் மாறி போச்சு சாமி!! ஆண்கள் இந்த விஷயத்தில் எல்லாம் பக்காவாக இருக்க வேண்டும் என பெண்கள் எதிர்பார்கின்றனர். இந்த எதிர்பார்ப்பு பட்டியல் கொஞ்சம் அப்படி, இப்படி இருந்தாலும் சுவாரஸ்யமாக தான் இருக்கிறது...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காலை பொழுதில் கொஞ்சும் பேச்சு

காலை பொழுதில் கொஞ்சும் பேச்சு

காலை எழுந்ததும் ஜிம்மிற்கு செல்லும் ஆண்களை விட, ஜிம்மி, பொம்மி என கொஞ்சும் ஆண்களை தான் பெண்கள் எதிர்பார்கின்றனர். ஆண்கள் எப்போதும் அவர்களை குழந்தையை போல கொஞ்ச வேண்டுமாம்!!!

கட்டிப்பிடி வைத்தியம்

கட்டிப்பிடி வைத்தியம்

தொட்டும் தொடாமல், பட்டும் படாமல், தாமரை இலை நீரை போல ஒட்டியப்படிக் கட்டிப்பிடிக்க தெரிய வேண்டும் என ஆண்களிடம் பெண்கள் எதிர்பார்க்கின்றனர்.

50/50

50/50

கோபமேக் கூடாது என்றெல்லாம் பெண்கள் எதிர்பார்க்கவில்லை, அந்த கோபத்திற்கு பின் அரவணைக்க தெரிந்த அன்பும் இருக்க வேண்டும் என்று தான் எதிர்பார்க்கின்றனர்.

தெளிவு

தெளிவு

இது கொஞ்சம் அறிவு சார்ந்தது, ஆண்கள் அவர்கள் எடுக்கும் முடிவில் குழப்பம் இல்லாமல் தெளிவாகவும், தீர்க்கமாகவும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்கின்றனர்.

நன்றாக சாப்பிட வேண்டும்

நன்றாக சாப்பிட வேண்டும்

நன்றாக சாப்பிடும் ஆண்களை விரும்புவதாக பெண்கள் கூறுகின்றனர். அதுவும் அவர்கள் சமைத்துப் போடும் உணவுகளை ஒரு கை பார்க்க வேண்டுமாம். (சாப்பிடுற மாதிரி இருந்தா நாங்க சாப்பிட மாட்டோம்'னா சொன்னோம்!!!)

தீர்வு காணும் திறன்

தீர்வு காணும் திறன்

வாழ்வியல் பிரச்சனைகள் மட்டுமின்றி, பல்பு ஃப்யூஸ் போனால், ஃபேன் நன்கு சுற்றாவிட்டால், எலெக்ட்ரிக் வேலை என அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணும் திறன் இருக்க வேண்டுமாம்!! (என்னமா நீங்க இப்படி எல்லாம் எதிர்பாக்கிறீங்க!!!)

விளையாட்டு பிள்ளை

விளையாட்டு பிள்ளை

ஆண்கள் விளையாட்டு பிள்ளையாக இருக்க வேண்டும் பெண்கள் எதிர்பார்கின்றனர். கண்டிப்பாக புட் பால், கிரிக்கெட் எல்லாம் இல்லை, நீங்க எதிர்பார்த்த அதே விளையாட்டு தான். (இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா!!!)

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Women Expecting Seven Things In Men Should Be So Perfect

There are some things that women expecting that men should do perfectly.
Story first published: Friday, April 3, 2015, 16:33 [IST]
Subscribe Newsletter