உறவினில் இன்பம் குறைவதற்கான காரணங்களும், செயல்பாடுகளும் - தம்பதிகளுக்கானது!!!

Posted By: John
Subscribe to Boldsky

எப்போது தம்பதி இருவரின் வாழ்க்கைக்கு மத்தியில் மூன்றாவதாய் ஓர் இடையூறு அல்லது தலையீடு உள்நுழைகிறதோ, அப்போது தான் அவர்கள் இருவருக்குள் இருக்கும் இல்வாழ்க்கை இன்பமும், நெருக்கமும், பந்தமும், பாசமும் குறைய ஆரம்பிக்கிறது.

கணவனாக இருந்தாலும் கூட, பெண்கள் ஆண்களிடம் மறைக்கும் அந்தரங்க விஷயங்கள்!!!

அந்த இடையூறு அல்லது தலையீடு ஓர் நபராக இருக்கலாம் அல்லது ஓர் பொருளாக இருக்கலாம். சிலர், அவர்களது நண்பர்கள் அல்லது உடன் பணிபுரிவோரின் பேச்சைக் கேட்டு தங்களது குணாதிசயங்களை மாற்றிக்கொள்வர், அது இல்வாழ்க்கையை பாதிக்கும்.

ஆண்களிடம் பெண்கள் விரும்பும் தோரணைகள்!!

சில சமயங்களில் நாம் புதியதாய் வாங்கிய பொருள்களின் மீது காட்டும் அதீத பிரியம் அல்லது அக்கறை கூட ஓர் வகையில் உங்கள் இல்வாழக்கையை பாதிக்கலாம். அந்நியன் போல, இதுவெல்லாமா ஓர் உறவின் இன்பத்தை பாதிக்கும் என சில காரணங்களும்,செயல்பாடுகளும் இருக்கின்றன.....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வேலை பளு

வேலை பளு

நவநாகரீக வாழ்க்கை என்ற வார்த்தையில் நாம் நவத்தையும் இழந்துவிட்டோம், நாகரீகத்தையும் இழந்துவிட்டோம். வேலை, வேலை என்று வேலையை கட்டியே அழும் சிலரின் செயல்பாடுகள் இல்வாழ்க்கையை வலுவாக பாதிக்கிறது.

ஞாயிறுகளில் மட்டும் கணவன் மனைவி

ஞாயிறுகளில் மட்டும் கணவன் மனைவி

இன்றைய வாழ்க்கை சூழலில் கணவன், மனைவி இருவரும் தங்களது வாழ்க்கையை ஞாயிறுகளில் மட்டுமே வாழ்கின்றனர் அதுவும் விடுமுறை என்பதால். பணம் என்பதன் தலையீடு வாரத்தின் ஐந்து நாட்களை கரைத்துவிடுகிறது, ஓர் நாள் ஓய்வு போக, மீதமுள்ள ஞாயிறு மட்டுமே கணவன் மனைவிக்கு என்று மிஞ்சுகிறது. இதைத் தாண்டி, தினமும் நேரம் ஒதுக்கி வாழ்பவர்களின் வாழ்க்கை தான் இன்பம் குறையாது இருக்கிறது.

 வேண்டும் என்ற போது மட்டும் உருகுதல்

வேண்டும் என்ற போது மட்டும் உருகுதல்

சில ஆண்கள், தங்களுக்கு உடலுறவு வேண்டும் என்னும் போது மட்டுமே தங்களுது மனைவிகளிடம் உருகி, உருகி பேசுவார்கள், மற்ற நேரங்களில் நாய்களை விட மிக மோசமாக வார்த்தைகளால் கடித்துக்கொள்வர். இது மிகவும் மோசமான அணுகுமுறை. ஓர் கட்டத்தில் முற்றிலுமாக உறவினுள் இருக்கும் இன்பத்தை சீரழித்துவிடும்.

நம்பிக்கையற்ற வாழ்க்கை முறை

நம்பிக்கையற்ற வாழ்க்கை முறை

சிலரது வீட்டில் சீரியல் சத்தமும், புலம்பும் சத்தமும் மட்டுமே ஒலிக்கும். இவ்வாறான வீடுகளில் இல்வாழ்க்கை இன்பமென்பது கானல் நீராகத்தான் இருக்கும். ஓர் உறவுக்கு நம்பிக்கை என்பது மிகவும் முக்கியம். நம்பிக்கையற்ற உணர்வு, உறவைக் கொல்லும் கருவி ஆகும்.

காதலை இழிந்து பேசும் நண்பர்கள்

காதலை இழிந்து பேசும் நண்பர்கள்

உங்களை சுற்றியிருக்கும் நண்பர்கள், உடன் பணிபுரிவோர் என சிலர் காதலை பற்றி எப்போதும் இழிவாகவே பேசுவார்கள். அவர்களுக்கு ஏனோ அதிலோர் அற்ப சுகம். இந்த சூழலிலேயே இருக்கும் போது, உங்கள் மனமும் அதை மெல்ல, மெல்ல நம்ப தொடங்கும். இது, உங்கள் இல்வாழ்க்கையை பாதிக்கும். சில சமயங்களில் இது சந்தேக குணத்தையும் அதிகரிக்கும்.

உணவு மீது அதிக அக்கறை

உணவு மீது அதிக அக்கறை

இதுதான் அந்நியன் ஸ்டைல் பிரச்சனை. "அட, சாப்பிடறது எல்லாம் ஒரு குத்தமா?" சாப்பிடுவது குற்றமல்ல. சாப்பாட்டின் மீது மட்டுமே குறியாய் இருப்பது தான் குற்றம். ஒரு நாள் சுவை குறைவாக சமைத்தால் கூட பொறுத்துக் கொள்ள முடியாமல் கடுப்பாகும் ஆண்கள் பலர் இருக்கின்றனர். இது, உங்கள் துணையை சங்கடம் அடைய செய்வது மட்டுமின்றி. உங்கள் மீது இருக்கும் அன்பையும் குறைக்கும்படி செய்துவிடும்.

எதிர்மறை எண்ணங்கள்

எதிர்மறை எண்ணங்கள்

ஓர் உறவின் இன்பத்தை சீர்குலைக்கும் பாதக கருவி எது என்றால்? அது, எதிர்மறை எண்ணங்கள் என்பது சந்தேகம் அற்ற உண்மை. இது உங்கள் வீடு மட்டுமின்றி அலுவலகம், வெளியிடங்கள் என அனைத்து இடங்களிலும் உங்கள் பெயரை பாதிக்கும் வகையிலாக மாறிவிடும். எனவே, எதிர்மறை எண்ணங்களை கைவிட்டு, நல்லதையே நினைப்பது உங்கள் வாழ்க்கையில் இன்பம் பொங்கிட உதவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Ways you might be damaging your love life

Sometimes we ourself becoming the reason for damaging our own love life in some ways. and we have discussed about that.