உடலுறவு விஷயத்தில் ஆண்களுக்கு ஏற்படும் பயங்கள்!!!

By: Ashok CR
Subscribe to Boldsky

படுக்கையறை பயங்கள் என்பது பெண்களுக்கு மட்டும் தான் என நினைத்தீர்களா? ஆண்கள் அதற்கு விதிவிலக்கல்ல! படுக்கையறையில் ஆண்களுக்கு ஏற்படும் பொதுவான சில பயங்களைப் பற்றிப் பார்க்கலாமா?

படுக்கையறை விஷயத்தில் பெண்களை விட ஆண்களே முனைப்புடன் விளங்குவார்கள் என்று பொதுவாக நம்பப்படுகிறது. ஆனால் படுக்கையறை விஷயத்தைப் பற்றி பெரும்பாலும் அவர்களுக்கும் கூட பயங்கள் ஏற்படும். இந்த பயத்தினால் அவர்களின் படுக்கையறை உறவு கூட பாதிக்கப்படலாம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!

படுக்கையில் தங்களின் செயலாற்றுகை, உடலுறவின் போது தோரணை, விந்துதள்ளல் காலம், திருப்திகரமான புணர்ச்சி பரவச நிலை மற்றும் படுக்கையில் காம களியாட்டம் ஆடுவதை பற்றியெல்லாம் பயங்கள் ஏற்படும். இந்த பயங்கள் எல்லாம் மனதில் ஓடிக்கொண்டிருக்கும் போது தங்களின் துணையை திருப்திப்படுத்த தவறுவதோடு, அவர்களாலும் அவைகளை முழுமையாக அனுபவிக்க முடிவதில்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 இதைப் பற்றி சண்டிகரை சேர்ந்த பாலியல் மருத்துவர் தீபக் அரோரா கூறுகையில்,

இதைப் பற்றி சண்டிகரை சேர்ந்த பாலியல் மருத்துவர் தீபக் அரோரா கூறுகையில்,

"பொதுவாக செக்ஸ் மற்றும் பாலுணர்வை ஆண்கள் தங்களின் ஈகோவுடன் சம்பந்தப்படுத்திக் கொள்வார்கள். அதனால் அவர்களுக்கு இந்த விஷயத்தில் தோற்பது பிடிக்காது. இதுவே அவர்களுக்கு மிகப்பெரிய பயத்தை உருவாக்கிவிடும். அதனால் படுக்கையில் அவர்களின் செயலாற்றுகை பதற்றத்தில் போய் முடியும். இந்த பதற்றத்தால் அவர்களால் படுக்கையில் சரியாக செயலாற்ற முடியாது. அவர்களின் துணைக்கு இதனை ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு பொறுமையோ, சகிப்புத் தன்மையோ இல்லாமல் போகையில், அந்த உறவில் விரிசல் உண்டாகிவிடும்".

உறவை பற்றிய அறிவுரையாளர் டாக்டர். கீதாஞ்சலி ஷர்மா கூறுகையில்,

உறவை பற்றிய அறிவுரையாளர் டாக்டர். கீதாஞ்சலி ஷர்மா கூறுகையில்,

"படுக்கையறை செயலாற்றுகை என வரும் போது, சிறப்பாக செயலாற்ற வேண்டுமானால், ஆண்களால் அதனை தனியாக செய்து விட முடியாது என்பதை முதலில் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு முறை உடலுறவில் ஈடுபடும் போதும், அடுத்த முறை இதை விட சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் நம் ஆழ்மனதில் இருந்து அதிகரித்துக் கொண்டே இருக்க வேண்டும். அதேப்போல் அவர்களுக்கு சுய திருப்தி ஏற்பட்டு விட்டால், சரியாக செயலாற்றவில்லை என்ற பேச்சுக்கே இடமில்லை. உடலுறவு என்பது சந்தோஷத்திற்காக தானே தவிர செயலாற்றுவதற்கோ, சிறப்பாக செயலாற்றுவதற்கோ அல்லது மோசமாக செயலாற்றுவதற்கோ இல்லை. அது வெறுமனே கொண்டாடுவதற்காகவே! அதனால் தேவையில்லாத விஷயத்தில் கவனத்தை சிதறவிடாமல் காரியத்தில் கண்ணாக இருக்க வேண்டும்".

டாக்டர். கீதாஞ்சலி ஷர்மாவின் பரிந்துரை...

டாக்டர். கீதாஞ்சலி ஷர்மாவின் பரிந்துரை...

ஆண்களின் பெரும்பாலான பயங்கள் தங்களின் துணையை திருப்திப்படுத்துவதை சுற்றியே இருப்பதால், கீதாஞ்சலி இப்படி பரிந்துரைக்கிறார், "உங்கள் துணை உணர்வுபூர்வமாக திருப்தி அடையும் வரை, அவர்களின் பாலியல் தேவைகளில் அவர்களை திருப்திப்படுத்துவது சுலபமாகும். அவர்களுடன் உணர்வுப்பூர்வமாக எந்தளவிற்கு இணைந்திருக்கிறீர்களோ, அந்தளவிற்கு உங்கள் இருவருக்கும் இடையேயான உடல் ரீதியான நெருக்கமும் சந்தோஷத்தை அளிக்கும். உங்கள் துணை தயாராக இருக்கும் போதே அவர்களுடன் உடல் ரீதியான நெருக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அதற்கு காரணம், அவரும் அதற்கு தயாராக இருந்தால் தான் அவர் பக்கம் முழு ஒத்துழைப்பு கிடைக்கும். அதே போல் உடலுறவில் ஈடுபடும் போதும் அமைதியாக, பொறுமையாக, பாலுணர்வூட்டல் நடவடிக்கைகளில் ஈடுபடுங்கள். எல்லாம் நீங்கள் நினைத்தை போல் நன்றாக நடந்தேறும்."

பயம் #1: அவளை திருப்திபடுத்த முடியாமல் போவது

பயம் #1: அவளை திருப்திபடுத்த முடியாமல் போவது

உங்கள் துணையை திருப்திப்படுத்த முடியாமல் போகுமோ என்ற மிக முக்கிய பயத்துடன் ஆணின் உறுப்பு அளவு நேரடியாக தொடர்பை கொண்டுள்ளது. பெரிதாக இருந்தால் தான் சிறப்பாக செயல்படமுடியும் என பெண் நினைக்கையில், அவள் எதிர்ப்பார்க்கும் சுகத்தை அளிக்க முடியுமா என ஆண்கள் வருந்திக் கொண்டிருப்பார்கள். நம்மால் சிறப்பாக செயலாற்ற முடியுமா என்ற பயம் ஏற்படும் போது, உடலுறவுக்கு தான் லாயக்கில்லை என்ற உணர்வும் வந்து சேரும். இது அனைத்து ஆணின் ஈகோவை நேரடியாக தொடும்.

இதில் இருந்து மீண்டு வர...

இதில் இருந்து மீண்டு வர...

டாக்டர். கீதாஞ்சலி ஷர்மா கூறுகையில், "ஒரு பெண்ணை திருப்திப்படுத்த முடியாமல் போகுமோ என்ற பயம் ஏற்படும் போது ஒரு ஆணின் மனதில் பல கேள்விகள் எழும். உடல்ரீதியான சுகத்தை பெற அவள் வேறு யாரையும் நாடி விடுவாளோ என்ற பயம் ஏற்படும். தன் இயலாமையினால் அவள் வேறு யாருடனாவது உடலுறவில் ஈடுபட்டு விடுவாளோ என்ற எண்ணம், நிலைமையை இன்னும் மோசமடையச் செய்யும். இது ஒரு தீய சுழற்சியாகும். இதை பற்றி எந்தளவிற்கு அவன் அதிகமாக சிந்திக்கிறானோ, அந்தளவிற்கு அவனுக்கு அந்த விஷயத்தில் பதற்றமும் அதிகரிக்கும். இதன் விளைவு, அவளை அவனால் திருப்திப்படுத்தவே முடியாமல் போகும். பொதுவாக படுக்கையறை செயலாற்றுகை அந்த பெண்ணின் மனநிலையை பொறுத்தே அமையும். திடமான இணைப்பு ஏற்பட வேண்டுமானால் உங்கள் துணையான அந்த பெண்ணின் உடலில் முதலில் நீங்கள் திருப்தி அடைய வேண்டும். உங்கள் அளவை நினைத்து வருந்துவதை விட, மெதுவாக செயல்பட்டு, அந்த பெண்ணின் உணர்ச்சி ரீதியான பாகங்களை விழிப்படைய செய்து உங்கள் துணையை புரிந்து கொள்ளுங்கள்."

பயம் #2: விரைவில் விந்துதள்ளல்

பயம் #2: விரைவில் விந்துதள்ளல்

மன நிறைவு தருகிற உடலுறவு என்றால் சுகத்தை அளிப்பதும், பெறுவதும் தான். தங்கள் பெண் துணைக்கு சுகத்தை அளிக்க தங்களாலான அனைத்து முயற்சிகளையும் ஆண்கள் எடுக்கையில், பல வேளைகளில், தங்களின் முடிவை நினைத்தே பதற்றம் ஏற்பட்டு விடும். இந்த பயம் ஏற்படுவதே விந்துதள்ளல் காலத்தினால் தான். விரைவில் விந்துதள்ளல் பிரச்சனை இருக்கும் போது இது பொதுவாக ஏற்படும் பயம் தான். இதனால் பாதிக்கப்பட போவது உங்கள் உடலுறவு அனுபவம் தான்.

 இதில் இருந்து மீண்டு வர...

இதில் இருந்து மீண்டு வர...

டாக்டர். அரோரா இதை பற்றி தெளிவுப்படுத்துகையில், "மருத்துவ ரீதியாக பார்க்கையில், ஒரு ஆணால் குறைந்தது ஒரு நிமிடத்திற்கு விந்துதள்ளலை கட்டுப்படுத்த முடிந்தால், அவர் விரைவு விந்துதள்ளல் நோயாளி அல்ல. ஆனால் துரதிஷ்டவாமாக இந்த விஷயம் வெகு சிலருக்கே தெரியும். பொய்யான சில விளம்பரங்களாலும், ஆபாச படங்கள் பார்ப்பதாலும் பலர் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள். இதன் காரணமாக அவர்களால் நீண்ட நேரம் உடலுறவில் ஈடுபட முடிவதில்லை என தவறாக அவர்கள் நினைத்துக் கொள்கிறார்கள். இதனால் தங்களின் துணையின் மீது பாதுகாப்பின்மை உணர்வு ஏற்படுகிறது. கூடவே பாலியல் ரீதியான மன அழுத்தமும் ஏற்படுகிறது. இதுவே செயலாற்றுவதில் பதற்றத்தையும் ஏற்படுத்துகிறது. பல நேரங்களில் பிரச்சனையே இருப்பதில்லை. அவர்களின் பயமே பிரச்சனைகளை உருவாக்கிவிடுகிறது."

 பயம் #3: கர்ப்பமாக்க முடியாமல் போவது

பயம் #3: கர்ப்பமாக்க முடியாமல் போவது

ஒவ்வொரு முறை உடலுறவில் ஈடுபடும் போது உங்கள் துணையை கர்ப்பமாக்குவதற்கு தான் என்றில்லை. ஆனாலும் கூட தங்களின் ஆண்மையின் மீது சந்தேகம் ஏற்பட்டு அதனால் அந்த பயம் அவர்களின் மனதில் வேரூன்றும். தன் மனைவியை கர்ப்பமாக்க முடியவில்லை என தொடர்ச்சியாக கவலைப்படும் போது இந்த பிரச்சனை விஸ்வரூபமெடுக்கும். இதனால் அவர்களின் படுக்கையறை செயலாற்றுகை நாளுக்கு நாள் மோசமைந்து கொண்டே போகும்.

இதில் இருந்து மீண்டு வர...

இதில் இருந்து மீண்டு வர...

டாக்டர் அரோரா கூறுகையில், "ஒரு குழந்தை பெற்றுக் கொள்வது என்பது ஆண், பெண் என இருவரின் ஆரோக்கியத்தை பொறுத்தே அமைகிறது. இதையெல்லாம் மீறி தலைவிதி என்றும் உள்ளது. மருத்துவ ரீதியாக எல்லாம் சரியாக இருந்தும் பெண்ணால் கருத்தரிக்க முடியாமல் போகும் உதாரணங்கள் பல உள்ளது. ஆரோக்கியமான வாழ்வு முறை, சரியான உணவு பழக்கம், உங்களை பற்றி நேர்மறை மனப்பாங்கு போன்றவற்றை நீங்கள் பின்பற்ற வேண்டும். உங்கள் விந்துவில் பிரச்சனை ஏதேனும் இருந்தால், அதனை குணப்படுத்தி விடலாம். அதனால் அதை பற்றி கவலை கொள்ள தேவையில்லை. உங்களின் முதல் தேவை நல்ல செக்ஸ் வாழ்க்கையே தவிர குழந்தை அல்ல."

பயம் #4: ஆபாச செயல்களில் பிடிப்பு இல்லாதது

பயம் #4: ஆபாச செயல்களில் பிடிப்பு இல்லாதது

பொதுவாகவே சில பாலியல் நடவடிக்கைகளை கற்றுக் கொள்ள ஆபாச படங்கள் பார்த்து, அதனை தன் துணையிடம் செய்து பார்ப்பது ஆண்களின் இயல்பே. அப்படிப்பட்ட முயற்சியில் புதிதாக சிலவற்றை முயற்சி செய்வதும் சில காம களியாட்டங்களில் ஈடுபடுவதும் ஆண்களின் வாடிக்கையாகும். இதனால் ஆபாச படங்களில் பார்க்கும் விஷயங்களை தங்கள் வாழ்க்கையில் அவர்கள் புகுத்த முற்படுவார்கள். பல நேரங்களில் இதற்கு அவர்களின் பெண் துணை நேர்மறையாக ஒத்துழைக்க மாட்டார். உடனே தாங்கள் தான் எங்கேயோ குறையுடன் செயல்படுகிறோம் என்ற எண்ணம் ஆண்களுக்கு தோன்ற ஆரம்பித்து விடும்.

இதில் இருந்து மீண்டு வர...

இதில் இருந்து மீண்டு வர...

டாக்டர் கீதாஞ்சலி கூறுகையில், "பொதுவாகவே தங்களின் படுக்கையறை செயலாற்றுகையை ஆபாச படங்களுடன் ஒப்பிட்டு பார்ப்பது ஆண்களின் சுபாவமாகும். அப்படி செய்யும் போது தங்களுக்கு அந்தளவிற்கு நேர்த்தியும் அனுபவமும் இல்லாமல் போய் விடுமோ என்ற பயம் ஆண்களிடம் எழும். படுக்கையில் செயலாற்றுவதற்கும் அனுபவத்திற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்பதை முதலில் ஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டும். உங்கள் துணையுடன் மன ரீதியாக ஏற்பட வேண்டிய இணைப்பே முக்கியம். இதற்கு ஆபாச படங்களில் வருவதை போல் செயல்பட வேண்டும் என்றெல்லாம் இல்லை."

பயம் #5: முன்னாட்களில் சுய இன்பத்தில் ஈடுபட்டதன் விளைவு

பயம் #5: முன்னாட்களில் சுய இன்பத்தில் ஈடுபட்டதன் விளைவு

தங்களின் விடலை அல்லது வாலிப பருவத்தில், ஆண்கள் ஈடுபட்ட வந்த சுய இன்பத்தால் பின்னாட்களில் அவர்களின் செக்ஸ் வாழ்க்கை எந்த விதத்திலும் பாதிக்காது என பல ஆய்வுகள் கூறியுள்ளது. இருப்பினும் இது தொடர்பாக எண்ணிலடங்கா பயம் இருந்து கொண்டே தான் உள்ளது. படுக்கையில் தாங்கள் மோசமாக செயலாற்றுவதற்கு, பொதுவாக ஆண்கள் தாங்கள் சுயஇன்பத்தில் ஈடுபட்டதை தான் காரணமாக கூறுவார்கள். ஆனால் முரண்பாடான இந்த பயத்தால் தங்களின் படுக்கையறை காரியத்தில் அவர்கள் கோட்டை விட்டு விடுகிறார்கள்.

இதில் இருந்து மீண்டு வர

இதில் இருந்து மீண்டு வர

டாக்டர் அரோரா அறிவுத்துகையில், "சுய இன்பம் காணுதல் பெரிதாக பாதிக்காது. ஆனால் சுய இன்பம் காணும் குற்ற உணர்வு மிகவும் ஆபத்தானது. போதிய பாலியல் கல்வி இல்லாததே இதற்கு காரணமாகும். ஆரோக்கியமான ஒவ்வொரு ஆணும் தன் வாழ்வில், பல வயதுகளில், பல கட்டங்களில் பல முறை சுய இன்பம் காண்பான். அதை பற்றி கவலைப்பட ஒன்றும் இல்லை."

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Things Men Absolutely Dread About Lovemaking

It's not only women who deal with bedroom fears. Men too are victims. Here are some common fears that make men nervous in bed.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter