For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உறவுகளில் நம்பிக்கை மலர 6 வழிகள்!!!

By SATEESH KUMAR S
|

சக மனிதர்களிடம் நம்பிக்கை கொள்வது என்பது ஒரே இரவில் ஏற்பட்டு விஷயம் அன்று. ஒருவரிடம் நம்பிக்கை உருவாக காலம் ஆகும். ஒரு முறை நம்பிக்கை என்பது உருவாகிவிட்டால் அதனை மதிப்பதென்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். அவ்வாறு இல்லாவிட்டால், நம்பிக்கை என்பது உருவாக மட்டுமே அதிக காலம் எடுத்து கொள்ளும். ஆனால் நொறுங்குவதற்கு சில நொடிகளே ஆகும்.

பெரும்பாலும், நீங்களும், அந்த நபரும் விரும்பினீர்கள் என்றால் சிதைந்து போன அந்த நம்பிக்கைக்கு மறுவடிவம் கொடுக்க இயலும். ஆனால் உங்கள் மனதில் எப்போதும் சந்தேகம் என்பது இருக்கும். சில நேரங்களில் ஒருவர் மீது நம்பிக்கையை நீங்கள் இழந்த பின்னர், அது மறுவடிவம் கொடுக்கும் அளவிற்கு மதிப்பு இல்லாத ஒன்று என்ற முடிவிற்கு நீங்கள் வரலாம். மேலும் நீங்கள் நம்பிக்கை சார்ந்த உங்கள் விஷயங்களை பிற நபர்களுடன் தொடர தொடங்கலாம்.

சில நேரங்களில் தான் மீண்டும் நம்பிக்கைக்குரியவராக விளங்குவேன் என்று கூறும் நபரின் வார்த்தையை ஏற்று கொள்வது என்பது சரியான தீர்வாகாது. நம்பிக்கைக்கு மறுபடி உருவாக்கவோ அல்லது உங்கள் வாழ்வில் புதியதாக நம்பிக்கையை உருவாக்கவோ பல வழிகள் உள்ளன. நினைவில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் யாதெனில் அது உருவாக கணிசமான அளவு கால அவகாசம் எடுக்கும் என்பதே!

உறவுகளான குடும்பம், நண்பர்கள், சக ஊழியர்கள், திருமணம் அல்லது பெற்றோர் மற்றும் குழந்தை இவை எதுவுமே ஒரு தலை பட்சமான நம்பிக்கையை உணரக்கூடாது. இல்லாவிடில் இந்த நிலையில் உள்ள உறவுகள் சிறப்பானதாக இருக்க முடியாது. எனவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உத்திகளை உங்கள் வாழ்விலும் பயன்படுத்தி நம்பிக்கையை உருவாக்க முயலுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கண்களினால் தொடர்பு

கண்களினால் தொடர்பு

நீங்கள் கூச்ச சுபாவம் கொண்டவர் எனில் கண்களின் மூலம் தொடர்பு கொள்ள முடியாமல் இருப்பது இயல்பே!. கூச்ச சுபாவம் கொண்டவராக இருப்பது ஒன்றும் பெரிய விஷயமல்ல. பொதுவாக மனிதர்கள் நேரடி கண் தொடர்பை தவிர்த்து தங்கள் பார்வையை விலக்கி கொள்கின்றனர் எனில், அவர்கள் அந்த நபருடைய நோக்கங்கள் குறித்து உறுதியற்ற நிலையில் உள்ளனர் அல்லது எதையோ மறைக்க முற்படுகின்றனர் என்றே அர்த்தம். எனவே உங்கள் வாழ்வில் யாருடனாவது உங்கள் நம்பிக்கையை உருவாக்கி கொள்ளவோ அல்லது ஏற்கனவே இழந்துவிட்ட நம்பிக்கைக்கு இரண்டாவது வாய்ப்பு வழங்க எண்ணினீர்கள் எனில், அந்த நபருடன் நேரடி விழி தொடர்பை எதிர்கொள்ள முயற்சி செய்யுங்கள். அந்த நபரும் கண் தொடர்பின் மூலம் அமைதியான அணுகுமுறையில் பதிலளிக்கிறார் என்றால் நம்பகமான உறவுமுறைக்கு சாத்தியம் உள்ளது என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளுங்கள்

ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளுங்கள்

பெரும்பாலான நேரங்களில் இளம் வயதினர், தங்கள் பெற்றோர் தங்களை புரிந்து கொள்வதில்லை என்றும் தங்களின் சில உணர்வுகள் குறித்து அவர்களை நம்ப முடியாது என்றும் எண்ணுகின்றனர். ஒருவருக்கொருவர் தொடர்புகளை குறைத்து கொள்ளவோ அல்லது நிறுத்தவோ செய்வதை விட குடும்ப நாள் என்று ஒன்றை திட்டமிடுங்கள். அந்த நேரத்தில் குறிப்பிட்ட விஷயங்களின் மீதான அனைவரது விருப்பு வெறுப்புகள் மற்றும் கருத்துக்கள் எண்ணங்கள் ஆகியவற்றை கேட்டு அறிந்து கொள்ளலாம். இவ்வாறு ஒருவருக்கொருவர் மனம் திறந்து பேசுவதன் மூலம் பெற்றோரும் குழந்தைகளும் தங்கள் எண்ணங்களை எவ்வாறு வெளிக்கொணர்வது என்று கற்று கொள்கின்றனர். உறவுகளின் மதிப்பை புரிந்து கொள்கின்றனர். ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை கொள்வதின் உறுதி நிலையை உணர தொடங்குகின்றனர்.

நடந்த நிகழ்வை விவரியுங்கள்

நடந்த நிகழ்வை விவரியுங்கள்

எந்த ஒரு நபரும் உள்நோக்கத்துடன் ஒருவருக்கு நம்பிக்கை துரோகம் இழைப்பதில்லை. பெரும்பாலான நேரங்களில் மக்கள் தாங்கள் செய்வது என்னவென்று அறியாமலேயே தவறுகள் செய்கின்றனர். உடனடியாக அந்த உறவை விட்டு விலகி விடாமல், அந்த சம்பவத்தின் வீரியம் குறைய நேரம் கொடுத்து பிறகு செய்ய வேண்டியது குறித்து பேசலாம். அதிலும் கலந்துரையாடும் போது அந்த நபர் எவ்வாறு நடந்து கொள்கிறார் என்பதை பொறுத்து அவர் உண்மையாக தான் உள்ளாரா இல்லையா என்று நீங்கள் உணர்ந்து கொள்ளலாம். ஒருவேளை அவரது குரல் ஆர்வமற்று மன்னிப்பு கேட்கும் தொனியில் பொய் தெரிந்தால், அவர் தனது செய்கைக்காக வருத்தம் கொள்ளாமல் இருக்க வாய்ப்புகள் அதிகம்.

உங்கள் வார்த்தையை காப்பாற்றுங்கள்

உங்கள் வார்த்தையை காப்பாற்றுங்கள்

நாம் நம்முடனான உறவுகளில் வாக்குறுதிகள் வழங்கி விட்டு, அதனை காப்பாற்ற முடியாத மக்களை காண்கின்றோம். நாம் இதனை ஒரு விவகாரமாக்கி அவர்களை அணுகினோம் எனில், அவர்கள் ஒவ்வொரு முறையும் மன்னிப்பு மட்டுமே கேட்பர். ஆனால் உங்களிடம் நேர்மையான முறையில் ஆர்வம் கொண்ட ஒருவர் நிச்சயம் தனது வாக்குறுதியை நிறைவேற்றுவார்.

மனதிலிருந்து பேசுங்கள்

மனதிலிருந்து பேசுங்கள்

கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் வெளிப்படும் போது, உங்கள் குடும்பமோ அல்லது நண்பர்களோ அது சிறந்த இடத்திலிருந்து வெளிப்பட வேண்டும். இவ்வாறு இருக்கும் போது அவர்கள் அக்கறையுடனும் மென்மையாகவும் சிறந்த தீர்வுகளையே தருவர். மேலும் அவர்கள் உங்கள் உணர்வுகள் குறித்து கவனமாகவும் செயல்படுவர்.

முன்னேற்றத்திற்கான அறிகுறிகள்

முன்னேற்றத்திற்கான அறிகுறிகள்

மனிதர்கள் முறையாக தங்கள் வழிகளை மாற்றி கொண்டு உங்கள் நம்பிக்கையை பெற விரும்பும் போது முன்னேற்றத்திற்கான அறிகுறிகளை காட்ட தொடங்குவர். வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும். உங்களுக்கு அவர்களின் அருகாமை தேவைப்படும் போது அருகிலேயே இருப்பர். நேர்மையாக இருக்க தொடங்குவர். அவர்களின் தவறுகளை மீண்டும் தொடர மாட்டார்கள்.

நீங்கள் ஒருவரின் நம்பிக்கையை சிதைத்து விட்டீர்கள் எனில் அது மீண்டும் உருவாக அதிக காலம் எடுக்கும் அல்லது சில நேரங்களில் மீண்டும் உருவாகாமலேயே போகலாம். எந்த ஒரு உறவிலும் நம்பிக்கை முக்கியமான ஒன்றாக அங்கம். அதை எப்போதும் விட்டு கொடுத்து விடக்கூடாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

6 Ways To Build Trust In Your Relationships

Relationships — family, friends, co-workers, marriage or parent and child — should never experience a one-sided trust. Relationships of that degree do not function. Therefore, following these techniques can help build trust in your relationships:
 
Desktop Bottom Promotion