பிடித்தவனுடன் உறங்கியது விபச்சாரமா? - My Story #072

Posted By:
Subscribe to Boldsky

அனைவருக்கும் வணக்கம்! இன்று உங்களுடன் நான் எனது வலிமிகுந்த கதையை பகிர்ந்துக் கொள்ளவிருக்கிறேன்.

ஜானு! அப்படி தான் அவர் என்னை அழைப்பார். எனது பதின் வயது காலம் அது. அப்போது நான் மும்பையில் வசித்து வந்தேன். எல்லா பதின்வயது இளைஞர்களை போலவே எனக்கும் அந்த ஈர்ப்பு, கவர்ச்சி இருந்தது. என்னைவிட மிகவும் வயது மூத்த ஆண் மீது நான் காதல் கொண்டேன். ஆம்! காதல் தான் கொண்டேன், வேறு ஏதும் இல்லை.

அவர் என்னை புரிந்துக் கொண்டார். அவர் காரணமாக என் வாழ்வில் மகிழ்ச்சி பூத்தது, நான் யாரிடம், எப்படி பழக வேண்டும் என்பதை கற்றேன்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பி.சி.ஓ (PCO)

பி.சி.ஓ (PCO)

ஒரு நாள் என்னிடம், "நான் உன்னை விரும்புகிறேன்.." என கூறினார். எனக்கு இன்ப அதிர்ச்சியாக இந்தது என்ன கூறுவது, எப்படி ரியாக்ட் ஆவது என தெரியவில்லை. கொஞ்ச நேரம் எடுத்துக் கொண்டேன். ஓரிரு நாட்கள் கழித்து, பி.சி.ஓ (PCO) சென்றேன். (அப்போது எங்களிடம் செல் போன் இல்லை.)

அவருக்கு கால் செய்து, நான் உங்களை மிகவும் விரும்புகிறேன் என கூறினேன். அப்போது எனக்கு வாழ்க்கையை பற்றி எதுவும் பெரிதாக தெரியாது. பிறகு தினமும் அவருடன் பி.சி.ஓ-வில் இருந்து பேச ஆரம்பித்தேன். அப்போது எனக்கு 15 வயது தான் இருக்கும். இது எனது படிப்பை கொஞ்சம் பாதித்தது.

ஒரு நாள்...

ஒரு நாள்...

அவரும் நானும் ஒரே அடுக்குமாடி குடியிருப்பில் தான் வசித்து வந்தோம். ஒரு நாள் நான் எனது வீட்டின் ஹாலில் அமர்ந்திருந்தேன். அவர் படியேறி மேல வருவதை உணர்ந்தேன். அவர் என்னிடம் ஏதோ சொல்ல முற்பட்டார். ஆனால், சரியான வார்த்தைகள் அவரது வாயில் இருந்து வரவில்லை. அவரது கைகளை பேன்ட் பாக்கெட்டுக்குள் வைத்துக் கொண்டு என்னை பார்த்தவாறு நின்றுக் கொண்டிருந்தார்.

ஈரமான கண்கள்...

ஈரமான கண்கள்...

அவர் என்னிடம் எதை எதிர்பார்த்து வந்தார் என்பதை நான் புரிந்துக் கொண்டேன். உண்மையில் நான் சிலை போல உறைந்து போனேன். என் இதயம் நொறுங்கியது, கண்ணாடி போல உடைந்தது. அதுவரை காதல் கனவுகள் மட்டுமே கண்களில் கொண்டிருந்த என் கண்களில், அன்று அழுகை மட்டுமே நிறைந்திருந்தது. எங்கள் உறவுக்கு அதுவே முற்றுப்புள்ளியானது.

பிரிந்தோம்!

பிரிந்தோம்!

சில காரணங்களால், நாங்கள் இருவருமே அந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து வேறு இடத்திற்கு மாறினோம். அதை தான் நானும் விரும்பினேன். அப்போது தான் எனக்கென தனி செல்போனும், புதிய நண்பர்களும் உருவாகினார்கள். வாழ்க்கை பற்றிய எனது சிந்தனைகளும் முதிர்ச்சி பெற்றிருந்தன.

Image Credit:subhashsharma

சுதந்திரம்!

சுதந்திரம்!

எனது இலட்சியம் என்ன என்பதை நான் தெளிவாக அறிந்திருந்தேன். எனக்கு ஒரு வேலை வேண்டும். நான் யாரை சார்ந்தும் இருக்க விரும்பவில்லை. நான் சுதந்திரமாக வாழ வேண்டும் என கருதினேன்.

நான் ஒரு கோச்சிங் கிளாஸ் சென்றுக் கொண்டிருந்தேன். அங்கே அருகில் ஒரு கடையில் வேலை செய்துக் கொண்டிருந்த ஆண் என்னை தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருந்தான். அந்த தொடர் பார்வை ஒரு நாளில் காதலாக மாறியது.

காதல் பறவைகளாக...

காதல் பறவைகளாக...

அவன் எனக்கு கால் செய்து என்னிடம் அவனது காதலை தெரிவித்து அழைப்பை துண்டித்துவிட்டான். நான் மீண்டும் அவனுக்கு அழைக்க பல முறை முயற்சித்தும் அழைப்பு கனக்ட் ஆகவில்லை. ஒருவேளை கடவுள் என்னை இதிலிருந்து காக்க தான் இப்படி செய்கிறாரோ என்ற எண்ணம் எழுந்தது.

ஆனால், பிறகு அவனுக்கு மெசேஜ் அனுப்பினேன். அவன், மீண்டும் அழைத்தான். நாங்கள் காதல் பறவைகளாணோம். சில மாதங்கள் இப்படியாக ஓடியது. ஒரு நாள் கடைக்கு வந்து, அவனை காணும்படி கூறினான். நானும் அவனது அழைப்பை ஏற்று சென்றேன்.

மீண்டும் கண்கள் ஈரமானது...

மீண்டும் கண்கள் ஈரமானது...

நான் அங்கே சென்றேன், மீண்டும் அழைத்து கடையின் அருகே இருக்கும் படிக்கட்டிடம் காத்திருக்க கூறினான். அங்கே அதன் முன் யாரையும் கண்டதில்லை. அங்கே யாரும் போகவும் மாட்டார்கள். ஏதோ தவறாக இருக்கிறது என நான் மீண்டும் வீடு திரும்பினேன். மீண்டும் என் கண்களில் கண்ணீர் தேம்பிய நாள் அது.

மீண்டும் மறுநாள் அதே இடத்திற்கு அழைத்தான். அங்கே அவன் இருந்தான். என்னுடன் தனியாக பேச வேண்டும் என்று அழைத்ததாக கூறினான். நாங்கள் தனிமையில் பேசிக் கொண்டிருந்தோம். திடீரென முத்தமிட்டான். ஏதோ, புது உணர்வாக இருந்தது. ஆனால், அதற்கும் மேலாக என்னுள் அச்சம் அதிகரிக்க துவங்கியது.

நான் செய்த பெரிய தவறு...

நான் செய்த பெரிய தவறு...

மெசேஜ், கால் என்று சென்றுக் கொண்டிருந்த எங்கள் காதலில், ஒரு நாள் அவன் தனது அறைக்கு வருமாறு அழைத்தான். நான் முடியாது என எத்தனையோ முறை கூறியும். வற்புறுத்தி அழைத்தான் . நான் உன்னை மனைவியாக தான் காண்கிறேன். ஏன் அச்சம் கொள்கிறாய் என ஆசை வார்த்தை பேசி அழைத்தான். என் வாழ்வில் முக்கிய பங்கு கொண்டுள்ளவன் தானே என நம்பி சென்றேன். என்ன நடக்கும் என பயந்தேனோ, அது நடந்தது.

அவன் என் மீது அதன் பிறகும் அளவு கடந்த காதல் கொண்டிருந்தான்.

சண்டை!

சண்டை!

ஓர் நாள் எனது போனுக்கு ஒரு நம்பரில் இருந்து ஹாய் என மெசேஜ் வந்தது. அது யார், எவர் என அறிந்துக் கொள்ள ஆர்வம் காட்டினான். யாரேனும் நபராக இருக்கும் என கருதினேன். அந்த நபருக்கு கால் செய்த போது ஒரு ஆண் எடுத்து பேசினார்.

அந்த நபரின் விலாசம் கண்டறிந்து வீட்டுக்கே சென்று மிரட்டிவிட்டு வந்தான். ரவுடி மாதிரி ஏன் நடந்துக் கொள்கிறாய் என கேட்டேன். மிக சிறிய பிரச்சனை பூதாகரமாக வெடித்தது.

என்னை மிகவும் கேவலமாக திட்ட ஆரம்பித்தான். நீ நம்பர் தராம எப்படி ஒருத்தன் உனக்கு மெசேஜ் பண்ணுவான். என நான் அதுவரை கேட்டிடாத அளவிற்கு மிக கேவலமான வார்த்தைகள் பயன்படுத்தி திட்ட ஆரம்பித்தான். முடிவு, எங்கள் இருவருக்குள் பிரிவு ஏற்பட்டது.

பிளார் மெயில்!

பிளார் மெயில்!

நீ என்னைவிட்டு பிரிந்தால் நமது உறவை பற்றியும், நமக்குள் நடந்தது பற்றியும் அனைவரிடமும் கூறிவிடுவேன் என மிரட்டினான்.

ஒரு நாள் எப்போதும் போல கோச்சிங் கிளாஸ் சென்று 6.30 மணியளவில் மாலை வீடு திரும்பினேன். அப்பா ஒரு பிஸ்னஸ்மேன் என்பதால் அவர் வீடு திரும்ப எப்போதுமே நள்ளிரவு ஆகும்.

அவர் அவ்வளவு சீக்கிரம் வர என்ன காரணம் என யோசித்துக் கொண்டிருந்த போது தான், வீடே அமைதியாக இருப்பதை கவனித்தேன்.

வீட்டில் தெரிந்தது!

வீட்டில் தெரிந்தது!

என் அப்பா தான் எனது அரசன். நான் அம்மாவிற்கு மிகவும் செல்லம். என் பெற்றோர் எனது சிறந்த நண்பர்கள் என கூறும் அளவிற்கு சிறந்தவர்கள்.

ஆனால், எனது காதலன் மூலமாகவே அவர் அனைத்தும் தெரியவந்து தான் அன்று மாலை சீக்கிரம் வீடு திரும்பினார் என்பதை பிறகு தான் அறிந்தேன்.

வீட்டில் அனைவரும் என் காதலன் திட்டியது போலவே கேவலமான வார்த்தைகள் பயன்படுத்தி திட்டினர். ஏற்றுக் கொள்ள தான் வேண்டும், தவறு என்னுடையது. நான் அன்று அவன் அறைக்கு சென்றிருக்க கூடாது.

ஆனால், அந்த வார்த்தைகள் என்னை மிகவும் கூனிக்குறுக வைத்தன.

ரெட் லைட் ஏரியாவுக்கு போ...

ரெட் லைட் ஏரியாவுக்கு போ...

என் வீட்டாரே இதுக்கு நீ ரெட் லைட் ஏரியாவுக்கு போயிருக்க வேண்டியது தானே என்று கேட்ட வார்த்தைகள் என்னை அவமானத்தின் உச்சிக்கே கூட்டி சென்றது.

அந்த வார்த்தைகளை என்னால் ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை. நான் செய்தது தவறு தான். காதலன் என்றதாலும், அவன் என்னை மனைவியாக கருதுவதாக கூறியதாலும் தான் அன்று அங்கே சென்றேன்.

சில வருடங்கள் கடந்தோடின ஆயினும் என் காதலனும், பெற்றோரும், சகோதரனும் என்னை திட்டிய அந்த வார்த்தைகள் மட்டும் என் காதில் ஒலித்துக் கொண்டே இருந்ததன.

திருமணம்!

திருமணம்!

எனக்கு திருமணமாகி இப்போது குழந்தை இருக்கிறது. நான் இன்றும் என் குடும்பம், அப்பா, அம்மா, சகோதரன், கணவர் மற்றும் எனது இன்றிய வாழ்வின் ஆதாரமான என் குழந்தை என அனைவரையும் விரும்புகிறேன். ஆனால், அந்த வார்த்தைகள் என்னை இன்றும் நிம்மதியாக உறங்கவிடுவதில்லை.

அவ்வப்போது என் வாழ்வில் என்னால் மறக்க முடியாத அந்த நாள் கனவில் வந்து தொல்லை செய்துக் கொண்டே தான் இருக்கிறது.

ஆண் என்பதால் என்னுடன் உறவுக் கொண்டது அவனுக்கு கௌரவமாககும், பெண் என்பதால் எனக்கு அது மிக பெரிய அசிங்கமாகவும் மாறிப் போனது.

நான் செய்ததை நான் நியாயப்படுத்த முயற்சிக்கவில்லை. ஆனால், அதை மறந்து, கடந்து வர முடியவில்லை என்பது தான் என் வாழ்வின் பெரிய வலியாக நீடித்திருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

My Story: They Told me to Go and Sit in the Red Light Area!

My Story: They Told me to Go and Sit in the Red Light Area!