இப்படி ஒரு முடிவு வரும்னு தெரிஞ்சிருந்தா? லவ் பண்ணிருக்கவே மாட்டேன் - My Story #067

Posted By:
Subscribe to Boldsky

இந்த உலகத்துலயே அவ தான் அழகுன்னு நான் எப்பவும் நெனச்சதும் இல்ல, அப்படி யார் கிட்டயும் சொன்னதும் இல்ல. ஆனா, என் கண்ணுக்கு அவள தவிர வேற யாரும் அவ்வளோ அழகா தெரிஞ்சதே இல்லை. எனக்கு எழுத பிடிக்கும். அவள எழுதுறதுன்னா ரொம்பவே பிடிக்கும். பாட்டு எழுதணும், மியூசிக் பண்ணனும், ஆல்பம் ரிலீஸ் பண்ணனும்'ங்கிறது என்னோட ஆசை.

அவக்கிட்ட என் லவ்வ நான் சொன்னதே இல்ல. அதுக்கு காரணம், அப்போ நான் பிளஸ் 1 படிச்சுட்டு இருந்தேன், அவ பிளஸ் 2. வாரத்துல மூணு நாள் என் ஸ்கூல்ல லாஸ்ட் ரெண்டு பீரியட் பிராக்டிக்கல். அந்த மூணு நாள நான் மிஸ் பண்ணதே இல்ல. அவளுக்கு 4.15 க்கு ஸ்கூல் முடியும், எனக்கு 4.45க்கு. லாஸ்ட் ஒன் ஹவருக்கு முன்னவே பிராக்டிக்கல் கிளாஸ் முடிச்சு ரிசல்ட் காமிச்சுட்டு, சைக்கிள் எடுத்துட்டு சிட்டா பறந்திருவேன்.

நான் மட்டும் தான் அவள பாத்திருக்கேன். அவளுக்கு நான் வாரம் மூணு நாள் அவள பார்க்க வரேன்னு கூட தெரியாது. என் ஸ்கூல் லைப் முடியிற வரைக்கும் நான் என் லவ்வ சொல்லவே இல்ல. அதுக்கான நேரமும் கிடைக்கல. சரி எப்படியும், அவ நாலு வருஷம் என்ஜினியரிங் படிப்பா, நாம மூணு வருஷம் விஸ்காம் தான படிக்கப் போறோம். கூட்டி, கழிச்சு பார்த்தா கணக்கு சரியா இருக்கும்ன்னு நெனச்சேன்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கணக்கு தப்பா போச்சு...

கணக்கு தப்பா போச்சு...

என் நேரம், அவ என்ஜினியரிங் படிக்காம, ஆர்ட்ஸ் சயின்ஸ் காலேஜ் ஜாயிண்ட் பண்ணிட்டா. அப்பறம் என்ன, அந்த ஒரு வருஷ கேப் கடைசி வரைக்கும் என்னால சரிக்கட்ட முடியல. எனக்கு கிடைச்ச ஒரே வாய்ப்பு, நாங்க படிச்ச ஸ்கூலும் பக்கத்து, பக்கத்துல. நாங்க படிச்ச காலேஜும் பக்கத்து, பக்கத்துல.

ஃபேஸ்புக் ஃபிரண்ட்

ஃபேஸ்புக் ஃபிரண்ட்

பக்கத்து, பக்கத்துல காலேஜ் இருந்தும் நோ யூஸ். அவ எந்த பஸ்ல வரா, போறான்னு தெரியாது. அவ காலேஜ்க்கு போற ஒரு டவுன் பஸ், காலேஜ் பஸ்யும் மிஸ் பண்ணதே இல்ல. கடைசியா ஒரு நாள் அவ காலேஜ் பஸ்ல போறது தெரிஞ்சது. ஃப்ரண்ட்ஸ் மூலமா, அப்படி இப்படின்னு ஃபேஸ்புக் ஐ.டி கரெட்க் பண்ணிட்டேன்.

ஏழுமலையான் புண்ணியத்துல சீனு, கீனு போடாமா, ரெக்வஸ்ட் அக்ஸப்ட் பண்ணிட்டா. பெருசா ஏதும் ஸ்டேட்ஸ் எல்லாம் போடமாட்டா. ஆனா, ஊரு உலகத்துல இருக்கா எல்லா க்ரூப் ஃபார்வேர்ட் மெசேஜும் ஷேர் பண்ணுவா.

அந்த மெசேஜ்!

அந்த மெசேஜ்!

அவளுக்கு மெசேஜ் பண்ண கூட பயம்தான். ஏதோ மார்க்கோட புண்ணியத்துல அவ ஷேர் பண்ற எல்லா போஸ்ட்க்கும் லவ் சிம்பல் போடுற வாய்ப்பு மட்டும் கிடைச்சது. ஒரு நாள், "நான் உங்க அடுத்த பிறவியில என்ன உறவா இருக்கணும்னு ஆசைப்படுறீங்கன்னு" ஒரு ஸ்டேடஸ் ஷேர் பண்ணிருந்தா.

என்ன தோனுச்சுன்னு தெரியல... அவ மெசேஜ் பாக்ஸ்க்கு, மனைவியா வரணும்ன்னு டெக்ஸ்ட் பண்ணேன். மெசேஜ் செண்டான பின்ன தான், ஒரு பயம் தொத்திக்கிச்சு. ஒருவேளை பிளாக் பண்ணிடுவாளோ, திட்டுவாளோ... என்ன பண்ணுவான்னு யோசிச்சுக்கிட்டே இருந்தேன்....

ரிப்ளை!

ரிப்ளை!

ரொம்ப சீக்கிரமா, ஒரு மணிநேரத்துல ரிப்ளை பண்ணிட்டா. ரொம்ப சிம்பிளா "ஏன்'னு?" காரணம் கேட்டா. ஒரு பக்கம் சந்தோஷம். இன்னொரு பக்கம் என்ன சொல்றதுன்னு தயக்கம். ஒருவழியா மூணு வருஷமா வராத தைரியத்த வரவேச்சு... "ஏன்னா, நான் உங்கள காதலிக்கிறேன்'னு" சொன்னேன்.

போச்சு... கண்டிப்பா இந்த தடவ பிளாக் தான்னு நெனச்சேன்... ஆனா, அவ ரிப்ளை ரொம்ப சாதாரண, கொஞ்சம் ஆச்சரியமாவும் இருந்துச்சு. ஏன், எதுக்கு, எப்போ இருந்து, எதனால, என்ன காரணம்... அடுத்தடுத்து கேள்வி கேட்டா. ஒட்டுமொத்த காதல் கதையும், மிட்நைட் 2 மணி வர ஒப்பிச்சேன்.

ஷாக்!

ஷாக்!

ஸ்கூல் படிக்கும் போது நான் மட்டுமில்ல, அவளும் என்ன கவனிச்சிருக்கா. லவ் எல்லாம் இல்ல. நான்... இப்படி ஒரு கேரக்டர் அவ பின்னாடி சுத்திட்டு இருக்கேன்னு அவளுக்கு தெரிஞ்சிருக்கு. ஆல்ரெடி பார்த்த ஆளுன்னு தான் ஃபேஸ்புக்ல ரெக்வஷ்ட் அக்ஸப்ட் பண்ணேன்னு சொன்னா. அப்படியே காத்துல பறக்குற மாதிரி இருந்துச்சு.

லொக்கு, லொக்குன்னு... அண்ணன் இருமுன சத்தம் பலூன்ல ஊசி குத்துனது மாதிரி, அவ மெசேஜ் படிச்சு பறந்துட்டு இருந்த என்ன கீழ விழ வெச்சது. அப்பறம் குட் நைட் சொல்லி சாட் முடுச்சுக்கிட்டோம்.

மறுக்கா, மறுக்கா அதே கேள்வி!

மறுக்கா, மறுக்கா அதே கேள்வி!

எப்படியும் வாரத்துக்கு ஒரு தடவையாவது, நீ ஏன் என்ன லவ் பண்ணனு கேட்பா... இன்று போய் நாளை வா கதை மாதிரி, ஒவ்வொரு தடவ கேட்கும் போதும் அவக்கிட்ட என் காதல் கதைய சொல்லிட்டே இருப்பேன். ஒருவேளை அவ நம்மள லவ் பண்றாளோன்னு ஒரு டவுட்டும் இருந்துச்சு. ஆனா, எப்படி கேட்குறதுன்னு தெரியல.

லவ் ஆர்ட்

லவ் ஆர்ட்

ஒரு நாள் அவ பேரு போட்டு லவ் யூ, லவ் யூ'னு மெசேஜ் ஆர்ட் ஒன்னு டைப் பண்ணிட்டு இருந்தேன். அவளுக்கு அனுப்பலாமா வேண்டாமான்னு யோசிச்சுட்டு இருந்த சமயம்.

என்ன பண்ணிட்டு இருக்கனு, அவளே மெசேஜ் பண்ணா... லவ் ஆர்ட் மெசேஜ் டைப் பண்ணிட்டு இருக்கேன்னு சொன்னேன். பார்த்துட்டு நல்லா இருக்குன்னு சொல்லி ஸ்மைலி சென்ட் பண்ணா.

உன் பேருல கவிதை, பாட்டெல்லாம் எழுதிருக்கேன்னு சொல்லி, அவளுக்கு ஆடியோ ரெக்கார்ட் பண்ணி அனுப்பிச்சேன். லவ் ஸ்மைலி ரிப்ளை. அவளுக்கு அந்த கவிதை பிடிச்சதா, என்ன பிடிச்சதான்னு தெரியல.

போன் கால்!

போன் கால்!

கொஞ்ச நாள்ல, போன் நம்பர் கிடைச்சது, நிறைய சாட்டிங், போன் கால்னு சொல்லாத காதல் செட் ஆயிடுச்சுன்னு ஒரு மூட நம்பிக்கையில அவக்கூட பேசிட்டு இருந்தேன். மிட்நைட்ல அவ வீட்டுக்கு போயி பர்த்டே கிப்ட் எல்லாம் வெச்சுட்டு வந்திருக்கேன்.

என்னோட கிறுக்குத்தனமான கவிதைய படிச்சுட்டு, நான்தான் வெச்சேன்னு பொசுக்குன்னு கண்டுபிடிச்சுட்டா.

எப்படி கல்யாணம்?

எப்படி கல்யாணம்?

ஒருநாள், "நீ எப்படி என்ன கல்யாணம் பண்ணிக்கவன்னு நினைக்கிற? னு ஒரு கேள்வி கேட்டா. நான் ரொம்ப பிரில்லியண்ட்டா பதில் சொல்றத நெனச்சுக்கிட்டு தாலி கட்டி தான்னு சொன்னேன். அப்பறம் தான் தெரிஞ்சது அவ சீரியஸா பேசுறான்னு.

ரொம்ப ஈஸியா என் கனவெல்லம் அச்சீவ் பண்ணிடலாம்ன்னு தான் நான் நெனச்சுட்டு இருந்தேன். ஆனா, என கனவெல்லாம் ரொம்ப பெருசு, அத அச்சீவ் பண்ண ரொம்ப லேட் ஆகும். ஏற்கனவே நான் உன்னவிட ஒரு வயசு பெரியவ, ரொம்ப நாள் என்னால எல்லாம் வெயிட் பண்ண முடியாதுன்னு சொன்னா.

அப்ப லவ் பண்றாளா...

அப்ப லவ் பண்றாளா...

அவ இவ்வளோ யோசிக்கிறது கேட்டு, "அப்போ என்ன லவ் பண்றியா?"ன்னு பேக்கு மாதிரி கேள்வி கேட்டேன். எஸ்.ஜே.சூர்யா மாதிரி இருக்கு, ஆனா இல்லங்கிற மாதிரி ஒரு பதில் சொன்னா.

அதுக்கப்புறம் கொஞ்ச நாள் நல்லா தான் போச்சு. குட் மார்னிங், குட் நைட் சொல்ற மாதிரி தினமும் லவ் யூ மெசேஜ், லவ் கவிதை எல்லாம் அவளுக்கு அனுப்புவேன். அவளும் சில லவ் ஃபார்வேர்ட் மெசேஜ் அனுப்பினா.

"விழி மூடி யோசித்தால்..."

"விழி மூடி யோசித்தால்..." பாட்டு சன் மியூசிக்ல வரும் போதெல்லாம், அவளுக்கு டிவி பார்க்க சொல்லி மெசேஜ் பண்ணுவேன்.

விஸ்காம் தானேன்னு கொஞ்சம் அசால்ட்ட இருந்தனால, எல்லா செமஸ்டர்லயும் ஒன்னுரெண்டு அரியர்ஸ் விழும். அப்படி ஒரு அரியர் எக்ஸாம் எழுதீட்டு வெளியே வந்து மொபைல் எடுத்து பார்த்தப்போ, "வாட்ச் சன் மியூசிக்ன்னு" ஒரு மெசேஜ் பண்ணிருந்தா.

எதுக்குன்னு ரிப்ளை பண்ணேன். "விழி மூடி யோசித்தால்..." பாட்டு ப்ளே ஆச்சு, அதான் மெச்செஜ் பண்ணேன்னு சொன்னா.

சொல்லாமலயே உங்களுக்கு புரிஞ்சிருக்கனும்... அந்த நொடி... என் லைப்ல ரெண்டாவது தடவ காத்துல பறந்துட்டு இருந்தேன். இப்போ லொக்கு, லொக்குன்னு இரும பக்கத்துல யாரும் இல்ல.

தப்பு கணக்கு!

தப்பு கணக்கு!

என்னப்பத்தி அவளுக்கு எல்லாமே தெரியும், என் வயசு, என் கனவு, நான் இப்படி கவிதை, கிவித எழுதிட்டு சுத்திட்டு இருக்குறதுக்கு அவதான் காரணம்னு எல்லாமே. "நீங்களும் முதல்ல இந்த பிராஜக்ட் எனக்கு தான் கிடைக்கும்ன்னு நெனைசீங்கள'ங்கிற..." வி.ஐ.பி படத்துல வர விவேக் காமெடி மாதிரி, இது லவ் தான்னு நெனச்சது என் தப்பு.

ஏன்னா, அவ பிராக்டிகல் மைண்ட். எதுவா இருந்தாலும், ஏன், என்ன, எதுக்குன்னு யோசிச்சு தான் முடிவு பண்ணுவா. அந்த பிராக்டிக்கல் மைண்ட் லவ்ன்னு நெனச்சு கணக்கு போட்டது என் தப்பு தான.

ஜாப்!

ஜாப்!

அவ ஜாப் ஜாயின்ட் பண்ணிட்டா. நான் அப்பவும் காலேஜ்ல படிச்சுட்டு இருந்தேன். போதா குறைக்கு, விஸ்காம் படிச்சா எவ்வளவோ கஷ்டம்னு வெளிய வந்தப்பறம் தான் தெரிஞ்சுது. எல்லா கம்பெனில இருக்க மாதிரி சினிமா, மீடியாவுலயும் நிறைய பாலிட்டிக்ஸ் இருந்துச்சு. சென்னைல நான் ஏறி எறங்காத சினிமா, மீடியா ஆபீஸ் இல்ல. ரெஸ்யூம் எடுத்துட்டு வரத பார்த்தா, நிறைய ஆபீஸ்ல வாசலோட அனுப்பிடுவாங்க.

அவ சொன்னது உண்மை தான். என் கனவு ரொம்ப சின்னது இல்ல. லவ் பண்ண பணம் தேவையில்ல, மனசு மட்டும் இருந்தா போதும். ஆனா, கல்யாணம் பண்ணிட்டு குடும்ப நடத்த..., குறைந்தபட்சம் ஜி.எஸ்.டி கட்டவாவது பணம் வேணும்ல.

பணம் தான் பிராக்டிக்கல்ன்னு யாராச்சும் சொல்லிருந்தா... தெரிஞ்சிருந்தா... நான் லவ் பண்ணிருக்கவே மாட்டனே!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

My Story: Her Practical Mind and My Rockstar Dream Ended our Love!

My Story: Her Practical Mind and My Rockstar Dream Ended our Love!