Latest Updates
-
1 கப் கோதுமை ரவா இருந்தா இந்த மாதிரி அடை செஞ்சு பாருங்க... சூப்பரான காலை உணவா இருக்கும்... ட்ரை பண்ணுங்க...! -
இந்தியாவின் முதல் பெண்களுக்கான பள்ளி எப்போது திறக்கப்பட்டது? எந்த ஊரில் திறக்கப்பட்டது தெரியுமா? -
உருளைக்கிழங்கை ஒருதடவை இந்த மாதிரி கொங்குநாடு ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க...டக்கரான சைடிஷா இருக்கும்...! -
அமெரிக்க-ஈரான் போரால் துபாயில் சரசரவென குறையும் தங்கம் விலை...இந்தியாவிலும் தங்கம் விலை குறையுமா? உண்மை என்ன? -
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன? -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்...! -
சனிப்பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கணுமாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
சுரைக்காயை இந்த மாதிரி பச்சடி செஞ்சு பாருங்க... இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்குமே டக்கரான சைடிஷா இருக்கும்... -
'நிறங்களின் ராஜா' என்று அழைக்கப்படும் நிறம் எது தெரியுமா? உங்களுக்கு இந்த கலர் பிடிக்குமானு சொல்லுங்க...!
எடை இழப்புக்கு உதவும் சோள கிச்சடி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க..
Weight Loss Cholam Kichadi Recipe In Tamil: நீங்கள் எடையைக் குறைக்கும் டயட்டில் உள்ளீர்களா? டயட்டில் இருந்தால், சிறுதானியங்களை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது. இதன் மூலம், உடல் எடையை வேகமாக குறைக்கலாம்.
அதுவும் சிறு தானியங்களை வெறும் கஞ்சியாக மட்டும் செய்து உட்கொள்ளாமல், அத்துடன் காய்கறிகளை சேர்த்து கிச்சடியாக சமைத்து உட்கொண்டால், எடை இழப்புக்கும் உதவும், ருசியாகவும் இருக்கும். அதுவும் சோளம் கொண்டு கிச்சடி செய்யும் போது, சுவை இன்னும் பிரமாதமாக இருக்கும். முக்கியமாக இந்த கிச்சடியை காலை உணவாக மட்டுமின்றி, மதிய வேளையிலும் சாப்பிடலாம்.

உங்களுக்கு எடை இழப்புக்கு உதவும் சோள கிச்சடியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சோள கிச்சடி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சோளம் - 100 கிராம்
* நெய் - 1 ஸ்பூன்
* சோம்பு - 1 சிட்டிகை
* பட்டை - 1
* கிராம்பு - 1
* பிரியாணி இலை - 1
* கறிவேப்பிலை - 1 கொத்து
* இஞ்சி - 1/4 இன்ச் (துருவியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பீன்ஸ் - 5 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* கேரட் - 1 (துருவியது)
* பச்சை மிளகாய் - 2 (விதைகளை நீக்கியது)
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* பாசிப்பருப்பு - 25 கிராம்
* தண்ணீர் - 4 கப்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* எலுமிச்சை சாறு - 1/4 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் சோளத்தை நீரில் 2 முறை கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, கழுவிய சோளத்தை சேர்த்து,
நீர் வற்றும் வரை வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு
கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு பாசிப்பருப்பை நீரில் 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும்,
சோம்பு, பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, கறிவேப்பிலை, துருவிய இஞ்சியை
சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கி,
பின்பு பொடியாக நறுக்கயி பீன்ஸை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி
நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் துருவிய கேரட், விதைகளை நீக்கிய பச்சை மிளகாயை
சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் பொடித்த சோளத்தை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்னர் அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து, அத்துடன் ஊற
வைத்த பாசிப்பருப்பை கழுவி சேர்த்து நன்கு 3-4 நிமிடம் வதக்க
வேண்டும்.
* பின்பு அதில் 4 கப் நீரை ஊற்றி, மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு
மற்றும் கொத்தமல்லியை சேர்த்து கிளறி, குக்கரை மூடி, மிதமான தீயில் 2
விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து கிளறினால், சுவையான சோள கிச்சடி
தயார்.



Click it and Unblock the Notifications











