இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. கெட்ட கொழுப்பு கரைந்து உடல் எடை மடமடன்னு குறையும்..

Posted By:

Weight Loss Poongar Rice Kanji Recipe In Tamil: நீங்கள் உடல் எடையைக் குறைப்பதற்கு டயட்டில் இருக்கிறீர்களா? உங்கள் டயட்டில் எப்போதும் சுவையில்லாத உணவுகள் தான் இருக்குமா? அப்படியானால் உங்களின் டயட்டில் நல்ல சுவையான கஞ்சி ரெசிபிக்களை சேர்த்துக் கொள்ளுங்கள். அதுவும் எடை குறைப்பிற்கு உதவும் பல்வேறு அரிசி வகைகளைக் கொண்டு கஞ்சி தயாரித்து, தினமும் காலையில் 1 கப் குடித்து வந்தால், எடை வேகமாக குறையும்.

அதில் ஒன்று தான் பூங்கார் அரிசி கஞ்சி. இந்த அரிசியில் உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களை கரைக்கும் திறன் உள்ளது. மேலும் இது சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றதும் கூட. இந்த பூங்கார் அரிசியைக் கொண்டு தயாரிக்கப்படும் கஞ்சியை பெரியவர்கள் மட்டுமின்றி, குழந்தைகளும் சாப்பிடலாம்.

Weight Loss Kanji How To Make a Poongar Rice Kanji

உங்களுக்கு பூங்கார் அரிசி கஞ்சியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பூங்கார் அரிசி கஞ்சி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* பூங்கார் சிவப்பு அரிசி - 1/4 கப்
* தண்ணீர் - 3 கப்
* இஞ்சி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 4 பல் (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* கேர்ட் - 1 (பொடியாக நறுக்கியது)
* முட்டைக்கோஸ் - சிறிது (பொடியாக நறுக்கியது)
* பீன்ஸ் - 5 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் பூங்கார் அரிசியை நீரில் நன்கு 2 முறை கழுவி, பின் அதில் நீரை ஊற்றி, 8 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* 8 மணிநேரம் கழித்து மிக்சர் ஜாரில் ஊற வைத்த பூம்பார் அரிசியை சேர்த்து, கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 கப் நீரை ஊற்றி, அத்துடன் அரைத்து வைத்துள்ள பூங்கார் அரிசியை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாயை சேர்க்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய கேரட், முட்டைக்கோஸ், பீன்ஸ் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* அடுத்து அதில் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கலந்து, 10 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* 10 நிமிடம் நன்கு கஞ்சி கொதித்து அரிசி வெந்ததும், கொத்தமல்லியைத் தூவி கலந்தால், சுவையான பூங்கார் அரிசி கஞ்சி தயார்.

[ of 5 - Users]
Story first published: Thursday, October 30, 2025, 6:30 [IST]
Desktop Bottom Promotion