Latest Updates
-
கலகத்தை உருவாக்குவதற்காகவே பிறந்த 4 ராசிக்காரங்க இவங்கதான்...ரொம்ப ஆபத்தானவங்க இவங்க...உங்க ராசி இதுல இருக்கா? -
3 கத்திரிக்காய் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு செம சூப்பரா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம்...! -
யமனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையே அடியோடு மாறப்போகுது.. -
முகத்தில் உள்ள ஹோலி நிறங்களை நீக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க... -
Dubai Airport Alert for Indians: Don't Come Unless Flight Confirmed! Amid War Tensions -
1 கப் ரவையும், 1 வாழைப்பழமும் இருந்தா.. இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. 2 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சந்திர-சுக்கிர சேர்க்கையால் உருவாகும் ராஜயோகம்: இந்த 4 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது.. -
ருசியான... பிடிக்கருணை கிழங்கு குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
SBI பேங்க் புது ரூல்ஸ்.. புதிய லிமிட்.. ஏப்ரல் 1 முதல் அமல்.. இனி மாதத்திற்கு அதிகபட்சம் ஆக? | SBI Bank Card Reward Points New Rules April 1
இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. ஒரே மாதத்தில் உடல் எடையில் நல்ல மாற்றத்தை பாப்பீங்க..
Weight Loss Chola Kanji Recipe In Tamil: உடல் எடையைக் குறைக்கும் டயட்டில் இருப்பவர்கள் தினமும் உடற்பயிற்சியை செய்து வருவதோடு, நல்ல ஆரோக்கியமான மற்றும் சத்துக்கள் நிறைந்த உணவுகளை தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும். அப்படி உட்கொண்டால் தான், ஆரோக்கியமான வழியில் உடல் எடையைக் குறைக்கலாம்.
அதுவும் தற்போது எடையைக் குறைக்க டயட்டில் இருக்கும் பலரும் உட்கொள்ளும் ஒரு பொதுவான உணவு தான் ஓட்ஸ். ஏனெனில் ஓட்ஸில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. ஆனால் இந்த ஓட்ஸ் அனைவருக்குமே பிடிக்கும் என்று கூற முடியாது. ஆனால் அதற்கு இணையான தமிழ்நாட்டு உணவுகள் உள்ளன. அது தான் சிறுதானியங்கள்.

இந்த சிறுதானியங்களில் ஒன்று தான் சோளம். இந்த சோளத்தைக் கொண்டு கஞ்சி தயாரித்து குடித்து வந்தால், உடல் எடை வேகமாக குறைவதோடு, உடல் ஆரோக்கியமும் மேம்படும். அதுவும் சோள கஞ்சியை ஒருவர் 2 கப் வரை குடிக்கலாம். இதனால் கலோரிகள் அதிகரிக்காது மற்றும் உடல் எடையும் வேகமாக குறையும்.
உங்களுக்கு சோள கஞ்சியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சோள கஞ்சி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சோள மாவு - 1 கப்
* தண்ணீர் - தேவையான அளவு
* தயிர் - 1 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* சீரகம் - 1 டீஸ்பூன்
* இஞ்சி - 4 சிறிய துண்டு
* பச்சை மிளகாய் - 1
* கொத்தமல்லி - சிறிது
* புதினா - சிறிது
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் 2-3 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து,
நீரை சூடேற்ற வேண்டும்.
* நீர் சூடாவதற்குள், ஒரு பாத்திரத்தில் 1 கப் சோள மாவை எடுத்து,
அதில் கொஞ்சம் கொஞ்சமாக நீரை ஊற்றி, கட்டிகளின்றி தோசை மாவு
பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
* அடுப்பில் உள்ள நீர் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் கரைத்து
வைத்துள்ள சோள மாவை ஊற்றி கை விடாமல் தொடர்ந்து, 5-8 நிமிடம் நன்கு
கிளறி விட்டு, வேக வைக்க வேண்டும்.
* மாவின் நிறம் மாறி, மாவு நன்கு வெந்தது போன்று தெரிந்தால், அதை
இறக்கி நன்கு குளிர வைக்க வேண்டும்.
* அதன் பின் ஒரு கிண்ணத்தில் தயிரை எடுத்து, அதில் கஞ்சிக்கு தேவையான
அளவு உப்பு சேர்த்து, நன்கு தயிரை அடித்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு இடி உரலில் சீரகம், இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி,
புதினாவை சேர்த்து நன்கு இடிக்க வேண்டும்.
* மாவு நன்கு குளிர்ந்த பின், அதில் தயிரை ஊற்றி, அத்துடன் இடித்து
வைத்துள்ளதையும் சேர்க்க வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து, நன்கு
கலந்தால், சுவையான சோள கஞ்சி தயார்.



Click it and Unblock the Notifications











