Latest Updates
-
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்!
மசாலா லெமன் சாதம் ரெசிபி... அடுத்த முறை இந்த மாதிரி லெமன் சாதம் செய்யுங்க... எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க!
Masala Lemon Rice Recipe in Tamil: பெரும்பாலான பெற்றோர்கள் குழந்தைகளுக்கு கொடுத்துவிடும் பிரதான மதிய உணவாக இருப்பது லெமன் சாதம்தான். இதற்கு காரணம் அதன் சுவையும், அது செய்வதில் உள்ள எளிமையும்தான். ஆனால் ஒரே லெமன் சாதத்தை எத்தனை நாட்கள்தான் குழந்தைகளுக்கு கொடுத்து விடுவது. பெரியவர்களை விட குழந்தைகள் உணவு விஷயத்தில் விரைவில் சலிப்படைந்து விடுவார்கள்.
எனவே அதனுடன் வேறுசில பொருட்களை சேர்த்து மசாலா லெமன் சாதமாக செய்து கொடுங்கள். இந்த மசாலா லெமன் சாதத்தில் பூண்டு, இஞ்சி, சீரகம் போன்றவை சேர்த்து செய்யப்படுவதால் அதன் சுவை மிகவும் வித்தியாசமானதாகவும், தனித்துவமானதாகவும் இருக்கும். இந்த ஸ்டைலில் லெமன் சாதம் செய்து கொடுத்தால் பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு மசாலா எலுமிச்சை சாதத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மசாலா எலுமிச்சை சதா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 1 கப் உதிரியான சாதம்
மசாலா விழுது அரைக்க:
- கால் கப் புதிய தேங்காய்
- 1 டீஸ்பூன் சீரகம்
- 3 பச்சை மிளகாய்
- 2 டேபிள்ஸ்பூன் கொத்தமல்லி இலை
- அரை இன்ச் இஞ்சி
- 4 பூண்டு பல்
1 சிட்டிகை மஞ்சள் தூள்
தாளிக்க:
- 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
- ½ டீஸ்பூன் கடுகு
- 1 கொத்து கறிவேப்பிலை தளிர்
- 2 வர மிளகாய்
- 2 டேபிள் ஸ்பூன் நிலக்கடலை
- ½ டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு
- ½ டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு
சத்தம் கிளற:
- 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு
- 2 ஸ்பூன்நறுக்கிய கொத்தமல்லி
- தேவையான அளவு உப்பு
செய்முறை:
- 1 கப் அரிசியைக் கழுவி 10-15 நிமிடங்கள் ஊற வைக்கவும். உங்களுக்கு பிடித்த அரிசியைப் பயன்படுத்தவும்
- ஒரு குக்கரில் அரிசிக்கு தேவையான தண்ணீர், 1 டீஸ்பூன் எண்ணெய் மற்றும் 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து அரிசியை வேக வைத்து, விசில் அடங்கியதும் தனியாக வைக்கவும்.
- ஒரு மிக்ஸி ஜாரில் அரை கப் துருவிய தேங்காய், 1 டீஸ்பூன் சீரகம், இஞ்சி, 3 நடுத்தர அளவிலான பூண்டு பல், 2 தேக்கரண்டி கொத்தமல்லி இலைகள், ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் 2-3 பச்சை மிளகாய் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பான விழுதாக அரைக்கவும்.
- ஒரு கடாயில் 2 ஸ்பூன் எண்ணெயை ஊற்றி சூடாக்கி, கடுகு சேர்த்து, தாளிக்கவும், கடுகு வெடித்ததும் கறிவேப்பிலை, வர மிளகாய், நிலக்கடலை, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு சேர்த்து நிறம் மாறத் தொடங்கும் வரை வதக்கவும்.
- பின்னர் அரைத்த மசாலா விழுதைச் சேர்த்து, மிதமான தீயில், எண்ணெய் பிரியத் தொடங்கும் வரை நன்கு வதக்கவும்.
- பின்னர் அடுப்பை அணைத்து, ½ தேக்கரண்டி எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
- சாதம் கிளற சமைத்த சாதத்தில், ½ ஸ்பூன் உப்பு, ½ ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் கொத்தமல்லி இலைகளைச் சேர்த்து நன்றாக கிளறினால் சுவையான மசாலா எலுமிச்சை சாதம் ரெடி.



Click it and Unblock the Notifications