Latest Updates
-
சனி பகவான் உதயமாகியிருப்பதால் இன்று முதல் இந்த 5 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் உங்க உடலில் நீரின் அளவு ஆபத்தான கட்டத்திற்கு சென்றுவிட்டதாம் - ஜாக்கிரதை -
கோடை வெயிலில் வீடு அனல் பறக்குதா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும்… குளிர்ச்சியும் அதிர்ஷ்டமும் தேடி வரும்! -
வாஸ்துப்படி மணி பிளாண்ட் வைக்கும் திசை இதுவா? பணவரவு தடையின்றி கொழிக்க இதை உடனே மாற்றுங்க! -
கசப்பில்லாத பொன்னாங்கண்ணி கீரை கூட்டு - 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க.. -
மே மாதத்தில் உருவாகும் கப்பார் யோகத்தால் பெரிய ஆபத்துகளையும், நஷ்டத்தையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் -
வெறும் 5 ரூபாயில் கிடைக்கும் இந்த பொருள் கோடையில் சந்திக்கும் பாதி பிரச்சனையை தடுக்குமாம் - கூறும் டாக்டர்! -
அடிச்சது ஜாக்பாட் - தென்னிந்தியாவின் இந்த மாநிலத்தில் மிகப்பெரிய தங்கச் சுரங்கம் கிடைத்திருக்காம் -
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சியால் ஏப்ரல் 27 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் லாபமும், வெற்றியும் குவியப்போகுது.. -
உடல் சூட்டைக் குறைக்கும் வெந்தய களி - இப்படி பாரம்பரிய முறைப்படி செஞ்சு சாப்பிடுங்க.. ருசி அள்ளும்..
தேவதை போல அழகான பெண் மனைவியாக கிடைக்கும் அதிர்ஷ்டமுள்ள 4 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா?
திருமணம்தான் அனைவரின் வாழ்க்கையிலும் மிகவும் முக்கியமான உறவாக இருக்கிறது. ஒருவரின் வாழ்க்கை பிற்காலத்தில் எப்படி இருக்கப்போகிறது என்பதை நிர்ணயிக்கபோவது அவர்களுக்கு அமையப்போகும் வாழ்க்கைத்துணைதான் என்பது மறுக்க முடியாத உண்மை. அனைத்து ஆண்களும் வெளிப்படையாக ஒப்புக்கொள்ளா விட்டாலும் அனைவருக்குமே அழகான பெண் மனைவியாக கிடைக்க வேண்டுமென்ற ஆசை நிச்சயம் இருக்கும்.
திருமண வாழ்க்கை அழகின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுவதில்லை என்றாலும் அதற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் அதிகமிருப்பதை மறுக்க முடியாது. ஜோதிட சாஸ்திரத்தின் படி சில ராசிகளில் பிறந்த ஆண்களுக்கு அவர்கள் விரும்பியபடி அழகான மனைவி கிடைக்கும் அதிர்ஷ்டம் உள்ளது. அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ரிஷபம்
இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர்கள் அழகின் கிரகமான சுக்கிரனால் ஆளப்படும் ரிஷப ராசி ஆண்கள்தான். அவர்கள் விசுவாசம் மற்றும் நேர்மைக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். அவர்களின் சிறப்பு குணங்களே இந்த இரண்டும்தான். அவர்கள் வாழ்க்கையில் எப்போதும் அழகான விஷயங்கள் மீது தீராத காதல் கொண்டவர்கள். அவர்களின் அசைக்க முடியாத விசுவாசம் மற்றும் வசீகரத்தால், ரிஷப ராசி ஆண்கள் பெரும்பாலும் தேவதை போல அழகைக் கொண்ட மனைவியை ஈர்க்கும் அதிர்ஷ்டத்தைப் பெறுகிறார்கள். இதனால் அவர்களின் திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சிகரமானதாக இருக்கும்.
மிதுனம்
கிரகங்களின் இளவரசரான புதனால் ஆளப்படும் மிதுன ராசி ஆண்கள் அவர்களின் புத்திக்கூர்மைக்கும், அறிவுசார் திறனுக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். அவர்கள் காதல் திருமணம் மீது தீராத ஆர்வம் கொண்டுள்ளனர். அவர்களின் அறிவாற்றல் அவர்களுக்கு அவர்கள் விரும்பும் அழகிய வாழ்க்கைத்துணை கிடைப்பதற்கான அதிர்ஷ்டத்தை பிரகாசிக்க செய்கிறது. புதனால் ஆளப்படும் மிதுன ராசிக்காரர்கள், விதிவிலக்கான நகைச்சுவை உணர்வு கொண்டவர்கள், இதனால் அவர்கள் எப்போதும் சுவாரஸ்யமான உரையாடலை உருவாக்குகிறார்கள். அவர்களின் வாழ்க்கைத்துணை பெரும்பாலும் உடல்ரீதியாக அழகாக மட்டுமல்லாமல், ஒரு சுவாரஸ்யமான மற்றும் துடிப்பான ஆளுமையையும் கொண்டவர்களாக இருப்பார்கள்.
சிம்மம்
கிரகங்களின் ராஜாவான சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசிக்காரர்கள் நிகரில்லாத தைரியமும், தன்னம்பிக்கையும் கொண்டவர்கள். அவர்களை சுற்றியுள்ள அனைவரையும் வசீகரிக்கும் ஒரு இயற்கையான ஒளி அவர்களிடம் இயற்கையாகவே உள்ளது. அவர்களின் காந்தம் போன்ற ஆளுமை மற்றும் இயற்கையான தலைமைத்துவ குணங்களால், சிம்ம ராசி ஆண்கள் பெரும்பாலும் அழகான மற்றும் கவர்ச்சிகரமான வாழ்க்கைத்துணையை எளிதில் ஈர்க்கிறார்கள். அவர்களின் அரச கம்பீரம் மற்றும் ஆடம்பரத்தின் மீதான நாட்டம் ஆகியவை அழகான துணையாக மட்டுமல்லாமல் ஆடம்பர வாழ்க்கையை அளிக்கக்கூடிய செல்வாக்குமிக்க துணையையும் ஈர்க்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களும் ரிஷப ராசி போலவே சுக்கிரனால் ஆளப்படுபவர்கள். அவர்கள் வாழ்க்கையின் அனைத்து விஷயங்களிலும் சமநிலையையும், நல்லிணக்கத்தையும் விரும்புபவர்கள். காதல் மற்றும் அழகின் கிரகமான சுக்கிரனால் ஆளப்படுவதால் அழகின் மீது இயற்கையான ஈர்ப்பைக் கொண்டுள்ளனர். காதல் மற்றும் அனைத்து உறவுகளில் அவர்களின் நேர்த்தியான ரசனை மற்றும் அழகியலைப் பாராட்டும் திறன், அவர்களை அழகு மற்றும் நேர்த்தியுடன் கூடிய பெண்களை அவர்களை நோக்கி எளிதில் ஈர்க்கிறது. எனவே, அவர்களுக்கு அழகான மனைவி கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். அவர்களின் நல்லிணக்க உணர்வால் அவர்களின் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும், அமைதியும் நிறைந்திருக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
