Latest Updates
-
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க... -
பட்டாணி மசாலா சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, பிரியாணி மாதிரியே இருக்கும் -
சனி பகவான் உதயமாகியிருப்பதால் இன்று முதல் இந்த 5 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் உங்க உடலில் நீரின் அளவு ஆபத்தான கட்டத்திற்கு சென்றுவிட்டதாம் - ஜாக்கிரதை -
கோடை வெயிலில் வீடு அனல் பறக்குதா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும்… குளிர்ச்சியும் அதிர்ஷ்டமும் தேடி வரும்! -
வாஸ்துப்படி மணி பிளாண்ட் வைக்கும் திசை இதுவா? பணவரவு தடையின்றி கொழிக்க இதை உடனே மாற்றுங்க! -
கசப்பில்லாத பொன்னாங்கண்ணி கீரை கூட்டு - 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க.. -
மே மாதத்தில் உருவாகும் கப்பார் யோகத்தால் பெரிய ஆபத்துகளையும், நஷ்டத்தையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் -
வெறும் 5 ரூபாயில் கிடைக்கும் இந்த பொருள் கோடையில் சந்திக்கும் பாதி பிரச்சனையை தடுக்குமாம் - கூறும் டாக்டர்! -
அடிச்சது ஜாக்பாட் - தென்னிந்தியாவின் இந்த மாநிலத்தில் மிகப்பெரிய தங்கச் சுரங்கம் கிடைத்திருக்காம்
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்கள் வயதுக்கு மீறிய ஞானத்தை வரமாக பெற்றவர்களாம்... நீங்க பிறந்த மாதம் என்ன?
வயதுக்கு மீறிய ஞானம் இருப்பது என்பது சில சமயங்களில் வரமாகவும், சில சமயங்களில் சாபமாகவும் இருக்கும். உங்களுடன் பழகும் சிலர் அவர்களின் வயதுக்கு மீறிய புத்திசாலித்தனத்தையும், சிந்தனையையும் கொண்டவர்களாக இருப்பதை நீங்கள் கவனித்துள்ளீர்களா? அதற்கு காரணம் அவர்களின் பிறந்த ராசியாகவோ, நட்சத்திரமாகவோ அல்லது பிறந்த மாதமாகவோ இருக்கலாம்.
ஜோதிடத்தின் படி சில மாதங்களில் பிறந்தவர்கள் "வயதான ஆன்மாக்கள்" என்று அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் ஆழ்ந்த சிந்தனையாளர்கள் மற்றும் கடினமான சூழ்நிலைகளில் கூட புத்திசாலித்தனமான முடிவுகளை எடுப்பவர்களாக இருப்பார்கள். அவர்கள் சிறுவயதிலிருந்தே அவர்களின் வயதுக்கு மீறிய புத்திக்கூர்மையைக் கொண்டிருப்பார்கள். அவர்களின் வயதுடையவர்கள் 30 வயதுக்குரிய ஞானத்துடன் இருந்தால் அவர்கள் 40 வயதுக்குரிய ஞானத்துடன் இருப்பார்கள். இந்த பதிவில் எந்தெந்த மாதத்தில் பிறந்தவர்கள் அவர்களின் வயதை விட அதிபுத்திசாலிகளாக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

ஜனவரி
இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர்கள் ஜனவரி மாதத்தில் பிறந்தவர்கள், அவர்கள் "வயதான ஆன்மாக்கள்" என்று அழைக்கப்படுகிறார்கள், ஏனெனில் வயதுக்கு மீறிய அவர்களின் ஞானம் அவர்களுக்கு இந்த பெயரை பெற்றுத்தருகிறது. ஜனவரி மாதத்தில் பிறந்தவர்கள் இளம் வயதிலேயே முதிர்ச்சியை வெளிப்படுத்துகிறார்கள். மற்ற குழந்தைகள் விளையாட்டில் மும்முரமாக இருக்கும்போது, அவர்கள் தங்கள் எதிர்காலத்தைப் பற்றி திட்டமிட்டு கொண்டு இருப்பார்கள். அவர்கள் மிகவும் எளிமையானவர்கள், தேவையற்ற விஷயங்களில் நேரத்தை வீணாக்க மாட்டார்கள். அவர்களின் ஞானம் அவர்களின் சுயக்கட்டுப்பாட்டிலும், திட்டமிடலிலும் தெளிவாக வெளிப்படும்.
அக்டோபர்
அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்கள் தனித்துவமான மற்றும் மர்மமான புத்திசாலித்தனத்தைக் கொண்டுள்ளனர். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் சக்திவாய்ந்தது, இதனால் அவர்கள் மற்றவர்களின் உணர்வுகளை தெளிவாகப் படிக்கவும், மறைக்கப்பட்ட எண்ணங்களைப் புரிந்துகொள்ளவும் முடியும். அவர்கள் வாசிப்பு மற்றும் அனுபவத்தின் மூலம் வாழ்க்கையை கற்றுக்கொள்கிறார்கள். அவர்களின் புத்திசாலித்தனம் மிகவும் உளவியல்ரீதியாக வேரூன்றியுள்ளது, மற்றவர்களுக்கு செய்வதற்கும், புரிந்து கொள்வதற்கும் மிகவும் கடினமான விஷயம் இவர்களுக்கு மிகவும் எளிதானதாக இருக்கும்.
ஆகஸ்ட்
ஆகஸ்ட் மாதத்தில் பிறந்தவர்கள் அவர்களின் கழுகு பார்வைக்கும், கூர்மையான கவனத்திற்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். அவர்கள் படித்துக் கொண்டிருந்தாலும் சரி சரி, வேலையில் இருந்தாலும் சரி, வேறு எந்த துறையில் இருந்தாலும் சரி, அதில் ஆழ்ந்த சிந்தனையாளர்களாக இருப்பார்கள். மற்றவர்கள் கவனிக்காத விஷயங்களை அவர்கள் கவனிப்பதால், கடினமான விஷயங்களைத் தீர்க்கும் திறன் அவர்களிடம் உள்ளது. அனைத்து விஷயத்தையும் கவனமாகவும், துல்லியமாகவும் செய்யும் விதத்திலும், கற்றுக்கொள்ள வேண்டும் என்ற அவர்களின் தீராத ஆர்வத்திலும் அவர்களின் வயதுக்கு மீறிய ஞானம் வெளிப்படுகிறது.
மார்ச்
மார்ச் மாதத்தில் பிறந்தவர்கள் உலகத்தைப் பற்றிய ஆழமான ஞானம் மற்றும் ஆன்மீக புரிதலைக் கொண்டுள்ளனர். அவர்கள் பெரும்பாலும் "முன்ஜென்ம ஆன்மாக்கள்" என்று அழைக்கப்படுகிறார்கள், ஏனெனில் அவர்களின் பல வருட அறிவு அவர்களின் முந்தைய ஜென்மத்திலிருந்து அவர்களின் ஆன்மாக்களில் நிரம்பியிருப்பது போல அவர்கள் அளவிலா ஞானத்தைக் கொண்டவர்கள்.
அவர்கள் மிகவும் பச்சாதாபம் கொண்டவர்கள், ஒருவரின் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு முன்பே அவர்களால் அதை உணர முடியும். இந்த புரிதல் அவர்களின் புத்திகூர்மையிலிருந்து மட்டும் உருவாகவில்லை, அது அவர்களின் அன்பான இதயத்திலிருந்து வருகிறது. மற்றவர்களால் புரிந்து கொள்ள முடியாத ஞானம் அவர்களுக்கு இளம் வயதிலிருந்தே இருக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
