Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
பாபா வாங்காவின் ஆபத்தான கணிப்பு அமெரிக்காவின் விபரீத முடிவால் நிஜமாகப்போகிறதாம்... எந்த கணிப்பு தெரியுமா?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒவ்வொரு நாளும் உலக நாடுகளை அதிர்ச்சியூட்டும் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதில் சமீபத்திய அறிவிப்பாக வெளிவந்துள்ளது ஏலியன்கள் பற்றிய அறிவுப்பு. டிரம்ப், UFO மற்றும் UAP அரசாங்க ஆவணங்களை வெளியிட உத்தரவிட்டதை அடுத்து, பாபா வாங்காவின் ஏலியன் பற்றிய அதிர்ச்சியூட்டும் கணிப்புகள் ஆன்லைனில் விவாதத்தைத் தூண்டியுள்ளன.
பாபா வாங்காவின் நிஜமாகிய பல கணிப்புகளில் ஏலியன்கள் பற்றிய கணிப்பும் இணைந்து விடுமோ என்ற உலக மக்கள் அஞ்சுகின்றனர். பாபா வாங்காவை பின்பற்றுபவர்கள் இந்த கணிப்பும் நிறைவேறும் என்று கூறுகிறார்கள். பாபா வாங்காவின் கணிப்பிற்கும், டொனால்ட் டிரம்ப்-ன் அறிவிப்புக்கும் உள்ள தொடர்பு என்னவென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பாபா வாங்கா யார்?
பாபா வாங்கா பல்கேரியாவில் பிறந்து வளர்ந்தார். 12 வயதில், ஒரு விபத்தின் விளைவாக தனது பார்வையை இழந்தார். பார்வை இழந்த பிறகு, அவர் எதிர்காலத்தைக் கணிக்கும் திறனை பெற்றதாக நம்பப்பட்டது, சோவியத் யூனியனின் வீழ்ச்சி மற்றும் அமெரிக்காவில் 9/11 தாக்குதல்கள் போன்ற உலகில் பல குறிப்பிடத்தக்க நிகழ்வுகளை அவர் முன்கூட்டியே கணிக்க முடிந்தது. 1996 ஆம் ஆண்டு தனது 86 வயதில் இயற்கையான காரணங்களால் இறந்தார்.
பாபா வாங்கா பால்கனின் நோஸ்ட்ராடாமஸ் என்றும் அழைக்கப்பட்டார். உலகம் முழுவதும் பலர் அவரது கணிப்புகளை நம்புகிறார்கள். பூமியுடனான முதல் வேற்றுகிரகவாசி தொடர்பு நவம்பர் 2026 இல் நடக்கும் என்று அவரின் ஒரு தீர்க்கதரிசனம் கூறியதாக அவரின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். ஒரு ஸ்பேஸ் ஷிப் பூமிக்கு வந்து வேற்றுகிரகவாசிகள் இருப்பதற்கான உறுதியான ஆதாரங்களை வழங்கும் என்று அவர் கணித்துள்ளதாக் கூறுகிறார்கள், ஆனால் அவர்களின் வருகையின் நோக்கம் என்னவாக இருக்கும் என்பதை அவர் குறிப்பிடவில்லை.
டொனால்ட் டிரம்ப்-ன் ஏலியன்கள் பற்றிய உண்மைகளை வெளிப்படுத்துமா?
2026 ஆம் ஆண்டு செயற்கை நுண்ணறிவு(AI) நமது அன்றாட வாழ்வில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தும் மற்றும் மனித அறிவை மிஞ்சி செயல்படத் தொடங்கும் என்று பாபா வாங்கா கூறியுள்ளதாக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. கடந்த சில ஆண்டுகளாக AI இன் விரைவான வளர்ச்சி குறித்து நடத்தப்பட்டு வரும் மாநாடுகள், சமூகத்தில் AI இன் தாக்கம் மற்றும் AI உடன் தொடர்புடைய பாதுகாப்பு மற்றும் நெறிமுறைகள் தொடர்பான தொடர்ச்சியான கவலைகள் பாபா வாங்காவின் கணிப்புகளுடன் ஒத்துப்போகிறது.
ஏலியன்கள் பற்றிய அமெரிக்காவின் நிலைப்பாடு
பல ஆண்டுகளாக, அமெரிக்க அரசாங்கமும், பென்டகன் அதிகாரிகளும் வேற்று கிரகவாசிகள் அல்லது UFO-க்கள் இருப்பதற்கான உறுதியான ஆதாரங்கள் இல்லை என்று பகிரங்கமாகக் கூறி வருகின்றனர்; இருப்பினும், முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா பிப்ரவரி 14 அன்று ஒரு நேர்காணலில் வேற்றுகிரகவாசிகள் இருப்பதாகக் கூறிய பிறகு. ஒபாமாவின் இந்த பேட்டியை ஒபாமா 'ரகசியத் தகவல்களை' வெளிப்படுத்தியதாகக் கூறி டிரம்ப் விமர்சித்தார்.
UFO கோப்புகளை வெளியிடுவது தொடர்பாக டிரம்ப் என்ன உத்தரவிட்டுள்ளார்?
இந்த நேர்காணலுக்குப் பிறகு, 'வேற்றுகிரகவாசிகள், அடையாளம் காணப்படாத வான்வழி நிகழ்வுகள் மற்றும் அடையாளம் காணப்படாத பறக்கும் பொருள்கள் தொடர்பான ஆவணங்களை வெளியிடுமாறு டிரம்ப் பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத்துக்கும் பென்டகனுக்கும் உத்தரவிட்டார்.
மற்ற உலக உயிரினங்களைப் பற்றி அரசாங்கம் அறிந்தவை குறித்து கருத்துகளை டிரம்ப் விரைவில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்துவார் என்றும் தெரிவிக்கப்படுகிறது. Truth Social-ல் ஒரு பதிவில், டிரம்ப், "காட்டப்பட்ட மிகுந்த ஆர்வத்தின் அடிப்படையில், வேற்றுகிரகவாசிகள் மற்றும் அடையாளம் காணப்படாத வான்வழி நிகழ்வுகள் (UAP) மற்றும் அடையாளம் காணப்படாத பறக்கும் பொருள்கள் (UFOs) மற்றும் இந்த மிகவும் சிக்கலான, ஆனால் மிகவும் சுவாரஸ்யமான மற்றும் முக்கியமான விஷயங்களுடன் தொடர்புடைய அனைத்து பிற தகவல்களையும் அடையாளம் கண்டு வெளியிடும் செயல்முறையைத் தொடங்குமாறு போர் செயலாளர் மற்றும் பிற தொடர்புடைய துறைகள் மற்றும் நிறுவனங்களுக்கு நான் அறிவுறுத்துவேன். கடவுள் அமெரிக்காவை ஆசீர்வதிப்பாராக!" என்று எழுதியுள்ளார்.
டொனால்ட் டிரம்ப்-ன் இந்த உத்தரவு ஏலியன்கள் பற்றி மறைக்கப்பட்ட உண்மைகள் உலகிற்கு தெரிய வரலாம். இதன் மூலம் ஏலியன்கள் பூமியுடன் தொடர்பு கொள்ள வாய்ப்பும் உள்ளது. ஒருவேளை இது நடந்தால் பாபா வாங்காவின் கணிப்பு நிஜமாக அதிக வாய்ப்புள்ளது.



Click it and Unblock the Notifications
