Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
இந்த 4 ராசிக்காரங்களுக்கு காதல் சீக்கிரம் போரடிச்சிருமாம்...டக்குனு ஆள மாத்திருவாங்க...உங்க ராசி இதுல இருக்கா?
காதல் உறவு அனைவரின் வாழ்க்கையிலும் மிகவும் முக்கியமானதாகும். புதிய காதலில் நுழையும் போது கிடைக்கும் த்ரில் மற்றும் மகிழ்ச்சி என்பது மிகவும் அலாதியானது. அதனால்தான் பெரும்பாலானவர்கள் காதலில் நுழைந்தவுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். காலப்போக்கில் இந்த த்ரில் குறைந்து அவர்கள் வாழ்க்கை நார்மலாகிவிடும். சில இதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து காதலிப்பார்கள், ஆனால் சிலர் விரைவில் சலிப்படைந்து விடுவார்கள்.
காதலில் த்ரில் குறையும் போது அவர்கள் அந்த உறவை விட்டு முடிந்தளவு அந்த உறவிலிருந்து வெளியேறிவிடுவார்கள். இப்படி காதலிலிருந்து உடனடியாக வெளியேறுவதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் அவர்களின் பிறந்த ராசி ஒரு முக்கியமான காரணமாக இருக்கலாம் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ஜோதிடத்தின் படி சில ராசிகளில் பிறந்தவர்கள் காதல் உறவுகளிலிருந்து விரைவில் வெளியேறி விடுவார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் வாழ்க்கையில் வெற்றிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அவர்கள் ஒருவரை விரும்பினால், அவர்கள் தங்கள் முழு இதயத்தையும், அனைத்து முயற்சிகளையும் அவர்களை காதலிப்பதில் ஈடுபடுத்துகிறார்கள். ஆனால் உறவு நிலையானதாகி எல்லாம் சீரானவுடன், அந்த உறவில் அவர்களின் ஆர்வம் குறைகிறது. அவர்கள் தொடர்ந்து உற்சாகத்தையும் புதுமையையும் விரும்புகிறார்கள். அவர்களின் காதல் உறவில் உள்ள சிலிர்ப்பு குறைந்துவிட்டால், அவர்கள் விரைவில் அடுத்த சிலிர்ப்பைத் தரும் உறவை நோக்கி நகரத் தொடங்குவார்கள்.
சிம்மம்
சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசிக்காரர்கள் எப்போதும் தீராத கவனத்தை விரும்புகிறார்கள். ஆரம்பத்தில், அவர்களின் துணை பாராட்டுக்களால் அவர்களைப் பொழியும் போது, அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறார்கள். ஆனால் காலப்போக்கில் அவர்களின் பாராட்டுக்கள் குறைந்துவிட்டாலோ அல்லது அவர்கள் துணை அவர்களுடைய சொந்த வாழ்க்கையில் பிஸியாகிவிட்டாலோ, அந்த உறவு இனி சிறப்பு வாய்ந்ததல்ல என்று அவர்கள் நினைக்கத் தொடங்குவார்கள். அவர்கள் எப்போதும் சிறப்புடையவர்களாக உணர விரும்புகிறார்கள், அது கிடைக்கவில்லை என்றால், உறவை முறித்துக் கொள்ள அவர்கள் ஒருபோதும் தயங்க மாட்டார்கள்.
மிதுனம்
கிரகங்களின் இளவரசரான புதனால் ஆளப்படும் மிதுன ராசிக்காரர்கள் இயல்பிலேயே மிகவும் நிலையற்றவர்கள். ஒரே விஷயத்துடன் அல்லது ஒரே நபருடன் நீண்ட காலம் இணைந்திருப்பது என்பது அவர்களுக்கு மிகவும் கடினமான ஒன்றாகும். அவர்கள் எந்தவொரு விஷயத்திலும் மற்றவர்களை விட விரைவாக சலிப்படைவார்கள். தங்கள் துணையுடன் ஆழமான மற்றும் சுவாரஸ்யமான உரையாடல்களை நிகழாவிட்டால், அவர்களின் மனம் அலைபாயத் தொடங்குகிறது. அவர்களுக்கு புதிதாக ஏதாவது கற்றுக்கொடுக்கக்கூடிய அல்லது ஒவ்வொரு நாளும் அவர்களை மகிழ்விக்கக்கூடிய ஒரு துணையை நோக்கி உடனடியாக நகர்வார்கள்.
விருச்சிகம்
ரகசிய இயல்பு கொண்ட விருச்சிக ராசிக்காரர்கள் இந்த பட்டியலில் இருப்பது ஆச்சரியமில்லை. அவர்கள் பொதுவாக மிகவும் விசுவாசமானவர்களாக இருந்தாலும், ஒரு உறவின் ஆரம்பத்தில் அவர்கள் எல்லையில்லா ஆர்வத்தைக் காட்டுகிறார்கள். ஆனால் அவர்கள் துணை எதிர்பார்த்த அளவுக்கு உறவில் ஆர்வமாகவும், தீவிரமாகவும் இல்லை என்று அவர்கள் உணர்ந்தால், அவர்கள் விரைவில் தங்கள் மனதை மாற்றிக்கொண்டு அடுத்த உறவை நோக்கி நகர்வார்கள். அவர்களின் காதல் ஒன்று மிகவும் தீவிரமாக முழு மனதுடன் இருக்கும் அல்லது சுத்தமாக காதல் உணர்வே இருக்காது, அரைகுறை காதல் என்ற வார்த்தையே அவர்கள் அகராதியில் இல்லை.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
