சிந்தி ஸ்டைல் பாசிப்பருப்பு கடைசல்

Posted By:
Subscribe to Boldsky

மதிய வேளையில் காரமாக சாப்பிட பிடிக்காதவர்கள் செய்து சாப்பிடும் ஒரு பிரபலமான ரெசிபி தான் பருப்பு கடைசல். இந்த பருப்பு கடைசலில் பல வெரைட்டிகள் உள்ளன. இப்போது அதில் ஒன்றான சிந்தி ஸ்டைல் பாசிப்பருப்பு கடைசலை எப்படி செய்வதென்று பார்க்கப் போகிறோம்.

குறிப்பாக இந்த ரெசிபி செய்வதற்கு தக்காளியை அரைத்துக் கொள்ள வேண்டும். மேலும் இது குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு காரம் அதிகம் இல்லாமல் இருக்கும். சரி, இப்போது அந்த ரெசிபியின் செய்முறையைப் பார்ப்போமா!!!

Sindhi Style Moong Dal Recipe

தேவையான பொருட்கள்:

பாசிப்பருப்பு - 1 கப் (ஊற வைத்தது)

பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது)

இஞ்சி - 1 டீஸ்பூன் (நறுக்கியது)

அரைத்த தக்காளி கூழ் - 1/3 கப்

மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

கொத்தமல்லி - சிறிது

உப்பு - தேவையான அளவு

தாளிப்பதற்கு...

எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிது

சீரகம் - 1 டீஸ்பூன்

பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் பாசிப்பருப்பை நீரில் நன்கு கழுவி, 20-25 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பாசிப்பருப்பு, தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

அடுத்து அதில் பச்சை மிளகாய், மஞ்சள் தூள், இஞ்சி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து 30 நிமிடம், பருப்பை நன்கு வேக வைக்க வேண்டும்.

பருப்பானது நன்கு வெந்ததும், அதனை இறக்கி, மத்து கொண்டு நன்கு மென்மையாக கடைந்து, பின் அதனை மீண்டும் அடுப்பில் வைத்து, அத்துடன் அரைத்த தக்காளி மற்றும் கொத்தமல்லியை சேர்த்து 10 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.

இறுதியில் சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து தாளித்து பருப்புடன் சேர்த்து கிளறினால், சிந்தி ஸ்டைல் பாசிப்பருப்பு கடைசல் ரெடி!!! இந்த சைடு டிஷ் ஆனது சப்பாத்தி, சாதம் போன்றவற்றிற்கு அருமையாக இருக்கும்.

English summary

Sindhi Style Moong Dal Recipe

Moong Dal Recipe is a simple and delicious dal recipe. To prepare this sindhi style moong dal, you need tomato puree. Let us check step by step recipe of sindhi style moong dal.
Story first published: Wednesday, November 12, 2014, 12:29 [IST]
Subscribe Newsletter